மனம் விரும்புவதை அருளும் சென்னை முகப்பேர் மார்க்கண்டேஸ்வரர்!

பதிவு செய்த நாள் : 13 மார்ச் 2018

சிவன் என்­னும் சொல்­லுக்கு "மங்­க­லம் என்­னும் பொரு­ளும் உண்டு.  தம் பக்­தர்­க­ளுக்கு மங்­க­லக­ர­மான அனைத்­தும்  அரு­ள்ப­வன், எம்­பெ­ரு­மான்.  ஆழ்ந்த பக்­தி­ கொண்டு துதிப்­போ­ருக்கு இள­கிய மனம் ­கொண்டு அருள்­பா­லிப்­ப­வன்.  

பக்­தர்­கள்­பால் தாம் எழுந்­த­ருள விரும்­பும் ஷேத்திரத்­தில்  திரு­வி­ளை­யா­டல்­ பு­ரி­வது ஈச­னின் வழக்­கம்.  அவ்­வாறு திரு­வி­ளை­யா­டல் புரிந்து வரும் தலங்­க­ளுள் சென்னையிலுள்ள முகப்பேர்   முதன்­மை­யா­னது.

பல்­லா­யி­ரம் ஆண்­டு­க­ளுக்­கு­முன், காட்­டுப்­ப­கு­தி­யாக இருந்த முகப்பேர்  ரிஷி­க­ளின் தவ­பூ­மி­யாக விளங்­கி­யது.  இங்கு சுயம்­பு­வாய் வீற்­றி­ருந்த சிவ­லிங்­கத்தை மகா­லட்சுமி உட்பட சப்­த­மக­ ரி­ஷி­க­ளும், மார்க்­கண்­டேய முனி­வ­ரும் தவம் ­பு­ரிந்து வழி­பட்­டுள்­ள­னர்.  அவர்­கள் வழி­பட்­டது சாளக்­கி­ரா­மத்­தி­லான பாண­லிங்­கம்.  சப்­த­ம­க­ரி­ஷி­க­ளுள் ஒரு­வ­ரான காசி­யப மக­ரி­ஷி­யின் எள்­ளுப்­பே­ரன் (பிர­க­லா­த­னின் பேரன்) பாணா­சு­ரன் பிர­திஷ்டை செய்து பூஜித்­ததே பாண­லிங்­கம் ஆகும்.  பாணா­சு­ரன்  ரா­வ­ண­னை­விட மிகுந்த சிவ­பக்­தன்.  தின­மும் பன்­னி­ரண்­டு­முறை ஈச­னைப் பூஜிப்­ப­வன்.

பாணா­சு­ரன், உல­கம் முழு­வ­தை­யும் ஒரே குடை­யின்­கீழ் கொண்­டு வந்து ஆட்­சி­ பு­ரிய விரும்­பி­னான்.  இதற்­கான வரத்­தைப் பெறு­வ­தற்­காக, யமுனை நதிக்­க­ரை­யில் சிவ­னா­ரைக் குறித்து தவத்­தில் ஆழ்ந்­தான்.  அப்­போது, தான் தின­மும் பூஜிப்­ப­தற்­காக 14 கோடி சாளக்­கி­ராம லிங்­கங்­க­ளைக் கேட்­டுப் பெற்­றான்.  ஒவ்­வொரு நாளும் வழி­பட்­ட­வு­டன் லிங்­கங்­களை ஆற்­றில் இட்­டு­வி­டு­வான்.  ஆற்­றி­லிட்ட அந்த லிங்­கங்­க­ளைப் பின்­னா­ளில் கோயி­ல­மைத்து, பிர­திஷ்டை செய்­தும் வணங்­கி­வந்­தான்.  அவற்­றுள் ஒன்­று­தான் சென்னை முகப்பேரிலுள்ள மார்க்­கண்­டேஸ்­வ­ரர்.  இயற்­கை­யி­லேயே தெய்­வாம்­சமிக்க, சிவ சான்­னித்­ய­முள்ள இந்த சாளக்­கி­ராம பாணா­சுர லிங்­கத்தை, பிற்­கா­லத்­தில் பாலாற்­றின் (ஷீர நதி) கரை­யில் பிர­திஷ்­டை­ செய்து வழி­பட்­ட­வர்­கள் சம்­பு­வ­ராய வம்ச மன்­னர்­கள்.

சிவத்­தொண்டு புரி­வ­தி­லும், சிவா­ல­யங்­கள் நிர்­மா­ணிப்­ப­தி­லும் தங்­களை அர்ப்­ப­ணித்­துக்­கொண்ட அவர்­க­ளுள் குறிப்­பி­டத்­தக்­க­வர்­கள்  வென்று மண்­கொண்­டான், ராஜ­நா­ரா­ய­ணன் ஆகி­யோர்.  தொண்டை மண்­ட­லத்தை ஆண்டு வந்த இம்­மன்­னர்­க­ளின் பரம்­ப­ரை­யில் வந்த சம்­பு­வ­ரா­யன் என்ற மன்­ன­னுக்­குத் திரு­ம­ண­மாகி நீண்­ட­கா­லம் மகப்­பேறு கிட்­டா­மல் இருந்­தது.  மானு­டனோ, மகே­சனோ தமக்கு ஏற்­பட்­டுள்ள குறை­க­ளுக்­குக் கார­ணம் என்ன, அதை நிவர்த்தி செய்­வ­தெப்­படி என்­பதை சிவ­பெ­ரு­மா­னைச் சர­ண­டைந்து கேட்­டுத் தெரிந்து ­கொள்­ள­லாம் என்­னும் நிய­தி­யைக் கடைப்­பி­டித்­தான், சம்­பு­வ­ரா­யன்.

கரு­ணையே வடி­வான ஈசன் தம் பக்­த­னின் துயர் ­தீர்க்க முன்­வந்­தார்.  தம்­ மீது காதல் ­கொண்டு, கசிந்­து­ருகி புத்­திர பாக்­கி­யம் வேண்­டிய சம்­பு­வ­ராய மன்­னனின் கன­வில் தோன்றி, ‘‘பாணா­சு­ரன் வழி­பட்ட பாண­லிங்­கம் ஷீர நதி­யில் கிடக்­கி­றது. அதை எடுத்­துப் பிர­திஷ்டை செய்து வழி­படு. சிவ-­விஷ்ணு ஆல­யம் ஏற்­ப­டுத்து.  உன் வம்­சம் தழைத்­தோங்­கும்’’ என்று கூறி­னார்.  எம்­பெ­ரு­மான் கூறிய இடத்­தைக் கண்­டு ­கொண்ட சம்­பு­வ­ரா­யன், பாலாற்­றின் கரை­யில் மிகப்­பி­ரம்­மாண்­ட­மான சிவ-­விஷ்ணு ஆல­யம் ஒன்றை நிர்­மா­ணித்­தான்.  நான்கு ஏக்­கர் பரப்­ப­ள­வில், நான்கு ரா­ஜ­கோ­பு­ரங்­க­ளு­டன் ஆல­யம் உரு­வா­னது.  நித்­ய­பூஜை­கள், நிவே­த­னம், இதர கைங்­கர்­யங்­கள் சிறப்­புற நிறை­வேற ஏரா­ள­மான நிலங்­களை தான­மாக வழங்­கி­னான்.  பாண­லிங்­கம் பிர­திஷ்டை செய்­யப்­பட்­டது.  ஈசன் அரு­ளால் கவுசிக முனி­வர்-­ – ம­ருத்­து­வ­வதி தம்­ப­திக்கு மார்க்­கண்­டே­யன் என்ற மகன் பிறந்­த­தா­லும், மார்க்­கண்­டே­யன் முனி­வ­ராகி இங்கு வழி­பட்­ட­தா­லும் இத்­தல இறை­வ­னுக்கு ‘மார்க்­கண்­டேஸ்­வ­ரர்’ என திரு­நா­மம் சூட்­டி­னான் மன்­னன்.

மன்­ன­னின் சிரத்­தை­யான சிவ­பக்­தி­யில் சிந்தை குளிர்ந்த சிவ­பெ­ரு­மான், அவ­னுக்கு மகப்­பேறு அளித்­தார்.  மல்­லி­நா­தன் என்ற மகவு பிறந்­தது.  இத­னால் மகிழ்ச்­சி­யில் ஆழ்ந்த

மன்­னன்,  தம் வேண்­டு­தல் சித்­தி­யா­ன­தால், ‘சித்­தேஸ்­வ­ரர்’, ‘சிதா­னந்­தேஸ்­வ­ரர்’ ஆகிய நாமங்­க­ளை­யும் இறை­வ­னுக்­குச் சூட்­டி­யுள்­ளான். மேலும், இந்த ஷேத்திரத்தை சந்­தா­ன­மங்­க­லம், மகப்­பேறு என்­ற­ழைத்து மகிழ்ந்­துள்­ளான்.  ஈச­னின் அரு­ளால், தாம் ஜன­ன­மா­னதை இளை­ஞ­னா­ன­போது அறிந்து பூரிப்­ப­டைந்த மல்­லி­நா­தன், கோயிலில் விரி­வாக்­கப்­ப­ணி­கள் செய்து நன்றி செலுத்­தி­னான்.

காலச்­சு­ழற்­சி­யில் அந்­நி­யர் படை­யெ­டுப்பு, பரா­ம­ரிப்­பின்மை போன்ற கார­ணங்­க­ளால் மண்­ட­பம், பிரா­கா­ரங்­கள் முழு­வ­தும் அழிந்­து­விட்­ட­து­டன் கோயிலும் சிதைந்து மண்­மே­டா­கிப்­போ­னது.  எனி­னும், இப்­ப­கு­திக்கு ‘மகப்­பேறு’ என்ற பெயரே நிலைத்­தது.  பின்­னர் சிறி­து­ ம­ருவி ‘முகப்பேர்’ என்­றா­னது.  இந்­நி­லை­யில் 1992-ம் ஆண்டு மூன்று வீடு­கள் மட்­டும் இருந்த இப்­ப­கு­தி­யில் எத்­தி­ரா­ஜன் என்­னும் அன்­பர் வேப்­பிலை பறிப்­ப­தற்­கா­கச் சென்­றுள்­ளார்.  வேப்ப மரத்­திற்­க­ருகே புற்று ஒன்று வளர்ந்து மூடி­யி­ருக்க, அரு­கி­லி­ருந்­த­வர்­கள் உத­வி­யு­டன் பால்­ஊற்றி புற்­றைக் கரைத்­துள்­ள­னர்.  புற்­றின் உள்ளே தக­த­க­வென ஜொலித்­த­வாறு சேத­மில்லா பாண­லிங்­கம் இருந்­துள்­ளது.  மேலும் தோண்­டிப் பார்த்­த­போது அம்­பாள், மகா­லட்சுமி, சந்­தான சீனி­வா­சப் பெரு­மாள், சித்­திர குப்­தர் போன்ற விக்கிரகங்­கள் பின்­ன­மின்­றிக் கிடைத்­துள்­ளன.

இதைத் தொடர்ந்து அப்­ப­கு­தி­யி­லுள்ள இறை நம்­பிக்­கை­யற்ற அன்பு என்­னும் பிர­மு­க­ரின் கன­வில் தொடர்ந்து பாம்­பு­கள் வரவே, இது­ பற்றி ஆன்­மி­கப் பெரியோ­ரி­டம் விவ­ரம் கேட்­டுள்­ளார்.  அவர்­கள்  சிவ­பெ­ரு­மா­னின்  திரு­விளையாட­லைக் ­கூறி, பூமி­யில் கிடைத்த லிங்­கத்­தைக் ­கொண்டு கோயில­மைத்து நிர்­வ­கிக்­கச் சொல்­லி­யுள்­ள­னர்.  அதை ஏற்­றுக்­கொண்டு புனர்­நிர்­மா­ணப்­ப­ணி­யில் ஈடு­ப­டத்­தொ­டங்­கியதும் கன­வில் பாம்­பு­கள் வரு­வது நின்­று­போ­ன­தாம்.  ஆல­யத் திருப்­பணி நிறை­வுற்­ற­தும், பூமி­யில் கிடைத்த பாணலிங்­கத்தை அதே இடத்­தில் பிர­திஷ்­டை­ செய்து ஆரத்தி காட்­டி­ய­போது ஈஸ்­வ­ரன் அரு­கில் ஒரு  ஒளி ஸ்தம்­பம் ­போல தோன்றி, சிறி­து­ நே­ரம் நிலைத்­தி­ருந்­த­தாம்.  இதைப் புகைப்­ப­டம் எடுத்­துக் கோயி­லில் பார்­வைக்கு வைத்­துள்­ள­னர்.

கிழக்கு நோக்­கி­யுள்ள கஜ­பி­ருஷ்ட அமைப்­புள்ள கரு­வ­றை­யில் தாமரை வடிவ ஆவு­டை­ய­ரர் பீடத்­தில் மார்க்­கண்­டேஸ்­வ­ரர் வீற்­றி­ருக்­கி­றார்.  மகா வரப்­ர­சா­தி­யான இந்த ஈசன், அடுத்து என்ன செய்­வ­தென்று தெரியா­மல் தவிப்­போ­ருக்கு நல்­வழி காட்­டு­கி­றார்.  இவ்­வாறு நல்­ல­ மார்க்­கத்தை வழி­காட்­டு­வ­தா­லேயே இவ்­வி­றை­வன் ‘மார்க்­கண்­டேஸ்­வ­ரர்’ என அழைக்­கப்­ப­டு­வ­தா­க­வும் பல­ன­டைந்த பக்­தர்­கள் கூறு­கின்­ற­னர்.  வேலை வாய்ப்பு, பதவி உயர்வு, தொழில்­வி­ருத்தி, மன­அ­மைதி ஆகிய பிரார்த்­த­னைகளுக்கு அரு­ளும் இவ்­வி­றை­வனை அவ­ர­வர் பெய­ருக்கு அர்ச்­சனை செய்து வழி­பட்டு பலன் பெறு­கின்­ற­னர்.  உடல் ஆரோக்­கி­யம் பெற­வும், மரண பயம் நீங்­க­வும், ஆயுள் அதி­க­ரிக்­க­வும் மார்க்­கண்­டேஸ்­வ­ரரை வழி­ப­ட­லாம்.

இங்கு அம்­பாள் ‘மர­க­த­வல்லி’ என்­னும் திரு­நா­மத்­து­டன் வர­த­ஹஸ்த நாய­கி­யாக வீற்­றி­ருந்து பக்­தர்­க­ளின் வேண்­டு­தல்­கள் அனைத்­தை­யும் உடனே நிறை­வேற்­றி­வி­டு­கி­றாள்.  

திரு­ம­ண­ வ­ரம் வேண்­டு­வோர் மர­க­த­வல்­லிக்கு ஐந்து

திங்­கட்கி­ழமைகள், ஐந்து தீபங்கள் ஏற்றி வழி­ப­ட­வேண்­டும்.  புத்­தி­ர­தோ­ஷம் நீங்க 11 அல்­லது 21 என்ற எண்­ணிக்­கை­யில் எலு­மிச்­சம்­ப­ழங்­களை மாலை­யா­கக் கோர்த்து ‘சந்­தா­ன­கவுரி’ எனும் திரு­நா­ம­மும் கொண்ட இவ்­வன்­னைக்கு அணி­வித்து வழி­ப­ட­வேண்­டும்.  கண­வ­ரின் ஜென்ம நட்­சத்­தி­ரத்­தன்று காலை­யில் உண­வ­ருந்­தா­மல் தம்­ப­தி­யர் வந்து வழி­ப­டத்­தொ­டங்கி ஐந்து வெள்ளிக்­கி­ழமைகள் இவ்­வி­தம் சந்­தா­ன­கவு­ரியை  வழி­ப­டு­வோ­ருக்கு புத்­தி­சா­லி­யான மகப்­பேறு வாய்க்­கி­றது.  அன்­னை­யின் திரு­நா­ம­மும், ஐய­னின் திரு­நா­ம­மும், ஷேத்திரப் பெய­ரும் மகப்­பேறு வாய்ப்­பதை சிறப்­பாக எடுத்­துக் கூறு­கின்­றன.  ‘மகப்­பே­றீஸ்­வ­ரர் கோயில்’ என்றே இத்­த­லம் அழைக்­கப்­ப­டு­வது கூடு­தல் சிறப்பு.

திருக்­க­டை­யூருக்கு நிக­ரான இத்­த­லத்­தில் சஷ்­டி­யப்­தப் புர்த்தி, உக்­ர­ரத சாந்தி, பீம­ரத சாந்தி, சதா­பி­ஷே­கம் செய்து கொள்­ள­லாம்.  ஆயுள் விருத்­திக்கு ஆயுஷ் ஹோம­மும் செய்து கொள்­ளப்­ப­டு­கி­றது.

இவ்­வா­ல­யத்­தில் மற்­று­மொரு சிறப்­பம்­ச­மாக வில்­வ­ ம­ரத்­தடி யில் ஏழடி உய­ரத்­தில் மகா­லட்சுமி எழுந்­த­ரு­ளி­யுள்­ளார். பூமிக்­க­டி­யி­லி­ருந்து கண்­டெ­டுக்­கப்­பட்ட இந்­தத் தாய­ார், நின்ற திருக்­கோ­லத்­தில் இரண்டு கரங்­க­ளு­டன் மட்­டும் அருள்பாலிப்­பது வேறெங்­கும் காண இய­லா­தது.  பவுர்­ண­மி­தோ­றும் மாலை­யில் மகா­லட்சுமிக்கு 11 வகை சிறப்பு அபி­ஷேக ஆரா­தனைகள் நடக்­கி­ன்றன.  குபேர சம்­பத்து வேண்டி இங்கு வழி­ப­ட­லாம்.  மகா­லட்சுமிக்­குப் புடவை சாற்­று­வ­தாக வேண்­டிக்­கொண்­டால், நிலம் சம்­பந்­தப்­பட்ட கோரிக்­கை­கள் உடனே நிறை­வே­று­கி­ன்றன.

காஞ்­சி­பு­ரத்­திற்கு அடுத்­த­ப­டி­யாக இரண்­டரை அடி உய­ரத்­தில் இடது கையில் ஏடு, வலது கையில் எழுத்­தா­ணி­யு­டன் நின்ற திருக்­கோ­லத்­தில் சித்­ரகுப்­தர் இங்கு தனி சன்னி­தி­யில் அருள்­பா­லிக்­கி­றார்.  கேது­வுக்­குப் ப்ரீதி­யாக இவரை கொள் தீபம் ஏற்றி வழி­ப­ட­லாம்.  புண்­ணி­யம் அதி­க­ரிக்­கும்.

மன்­னர்­கள் கல்­ தி­ருப்­ப­ணி ­ரீ­தி­யாக 1,200 ஆண்­டு­கள் தொன்மை வாய்ந்த இத்­தி­ருத்­த­லம், சென்னை, கோயம்­பே­டு-­ அம்­பத்­தூர் தொழிற்­பேட்டை சாலை­யில், கோல்­டன் பிளாட் பேருந்து நிறுத்­தம் அரு­கே­யுள்ள மேற்கு முகப்பேர், பார­தி­தா­சன் 2-வது தெரு­வில் உள்­ளது.

தொடர்­புக்கு : 044 -– 2624 2715

-  – கீழப்பாவூர்  கி. ஸ்ரீமுருகன்