அயர்­லாந்தை அடித்து நொறுக்­கிய இந்­தியா

பதிவு செய்த நாள் : 11 மார்ச் 2018 02:01


புது­டில்லி : 

இந்­திய ஹாக்­கி் அணி கேப்­டன் சர்­தார் சிங் தலை­மை­யில், மலே­சி­யா­வில் நடை­பெற்று வரும் சுல்­தான் அஸ்­லான் ஷா ஹாக்­கித் தொட­ரில் பங்­கேற்­றுள்­ளது. நேற்று முன்­தி­னம் அயர்­லாந்தை எதிர்த்து விளை­யாடி தோற்­றது. இந்­நி­லை­யில் நேற்று மீண்­டும் அயர்­லாந்து அணி­யு­டன் இந்­தியா மோதி­யது.

ஆட்­டத்­தின் 5வது நிமி­டத்­தில் வருண் அபா­ர­மான கள கோல் அடித்து இந்­தி­யாவை  1–0 என்று முன்­னி­லைப்­ப­டுத்­தி­னார். கட்­டாய வெற்­றியை நோக்­கிக் களம் இறங்­கிய இந்­தி­யா­வுக்கு இந்த கோல் உற்­சா­கத்­தைக் கொடுத்­தது. ஆட்­டத்­தின் 28வது நிமி­டத்­தில் சிலா­னந்த் லக்ரா நேர­டி­யாக கோல் அடித்து, முன்­னி­லையை 2–0 என்று உயர்த்­தி­னார்.

தொடர்ந்து ஆட்­டத்­தின் 3வது கால் பகு­தி­யில் வருண் தனக்­குக் கிடைத்த பெனால்டி கார்­னர் கோல் வாய்ப்பை தவ­ற­வி­டா­மல் அயர்­லாந்­துக்கு அதிர்ச்­சி­ய­ளித்­தார். இத­னால் கோல் எண்­ணிக்கை 3–0 என்று உயர்ந்­தது. ஆட்­டத்­திின் 37வது நிமி­டத்­தில் குர்­ஜந்த் சிங் தன் பங்­குக்கு ஒரு கள கோல் விளா­சி­னார். இத­னால் கோல் முன்­னிலை 4–0 என்று உயர்ந்­தது.

இந்­திய அணி­யின் கோல்­க­ளுக்கு பதி­லடி கொடுக்­கும் வகை­யில் ஆட்­டத்­தின் 48வது நிமி­டத்­தில் அயர்­லாந்து அணி­யின் ஜூலி­யன் டேல் ஒரு கோல் அடித்­தார். இத­னால் கோல் முன்­னிலை 4–1 என்று மாறி­யது. இறு­தி­யில் இந்­தியா 4–1 என்ற கோல் கணக்­கில் அயர்­லாந்­தைத் தோற்­க­டித்­தது.