கொரிய ஹாக்கி தொடர் :­ இந்­திய அணி வெற்­றி

பதிவு செய்த நாள் : 10 மார்ச் 2018 01:31


சியோல் : 

இந்­திய ஹாக்கி அணி கொரி­யா­வில் சுற்­றுப் பய­ணம் செய்து, அந்­நாட்டு அணி­யு­டன் 5 போட்­டி­கள் கொண்ட தொட­ரில் பங்­கேற்று, விளை­யாடி வரு­கி­றது. கொரியா – இந்­தியா இடையே 3 போட்­டி­கள் முடிந்­துள்ள நிலை­யில், 2–1 என்று இந்­தியா பின் தங்­கி­யுள்­ளது. இந்­நி­லை­யில், இந்த இரு அணி­க­ளுக்­கும் இடையே 4வது போட்டி நேற்று பிற்­ப­கல் தொடங்­கி­யது. ஆட்­டத்தை சமன் செய்ய வேண்­டும் என்ற நோக்­கில் இந்­திய வீராங்­க­னை­கள் களத்­தில் ஆக்­ரோ­ஷம் காண்­பித்­த­னர்.

ஆட்­டத்­தின் 2வது நிமி­டத்­தில் இந்­திய அணிக்­குக் கிடைத்த பெனால்டி கார்­னர் வாய்ப்பை, குர்­ஜித்­க­வுர் கோலாக மாற்றி 1–0 என்ற கோல் கணக்­கில் இந்­தி­யாவை முன்­னி­லைப்­ப­டுத்­தி­னார். தொடர்ந்து ஆட்­டத்­தின் 14வது நிமி­டத்­தில் இந்­தி­யா­வின் தீபிகா தனக்­குக் கிடைத்த வாய்ப்­பைப் பயன்­ப­டுத்தி நேர­டி­யாக கோல் அடித்து, எண்­ணிக்­கையை 2–0 என்று உயர்த்­தி­னார். ஆட்­டத்­தின் 47வது நிமி­டத்­தில் இந்­திய அணி­யின் பூனம் ராணி, ஒரு கோல் விளாசி கோல் எண்­ணிக்­கையை 3–0 என்று உயர்த்­தி­னார். ஆனா­லும், கொரி வீராங்­க­னை­கள் அசந்­து­வி­ட­வில்லை. இந்­திய அணிக்கு சரி­யான பதி­லடி கொடுப்­ப­தற்­காக களத்தை மாற்றி அமைத்து, தீவி­ர­மாக விளை­யா­டி­னர். இத­னால், ஆட்­டத்­தின் 57வது நிமி­டத்­தில் கொரிய வீராங்­கனை மி ஹியூன் பார்க் ஒரு கள கோல் அடித்து கோல் எண்­ணிக்­கையை 3–1 என்று மாற்­றி­னார். இறு­தி­யில் இந்­திய அணி 3–1 என்ற கோல் கணக்­கில் கொரிய அணி­யைத் தோற்­க­டித்து 2–2 என்ற புள்­ளி­கள் எண்­ணிக்­கை­யில் தொடரை சமன் செய்­தது. இந்த இரு அணி­க­ளுக்­கும் இடையே ஒரு போட்டி எஞ்­சி­யுள்­ளது.

அஸ்­லான்ஷா ஹாக்கி : இந்­தியா தோல்வி

மலே­சியா : இந்­திய ஹாக்கி அணி கேப்­டன் சர்­தார் சிங் தலை­மை­யில் மலே­சி­யா­வில் நடை­பெ­றும் சுல்­தான் அஸ்­லான்ஷா ஹாக்­கித் தொட­ரில் கலந்து கொண்­டுள்­ளது. அயர்­லாந்து, இந்­தியா சம பலத்­து­டன் ஆட்­டத்­தைத் தொடங்­கின. ஆட்­டத்­தின் 10வது நிமி­டத்­தில் ராமன்­தீப் சி்ங் ஒரு கோல் அடித்து 1–0 என்று கோல் எண்­ணிக்­கை­யைத் தொடங்கி வைத்­தார். இதைத் தொடர்ந்து ஆட்­டத்­தின் 24வது நிமி­டத்­தில் அயர்­லாந்து அணி­யின் ஷேன் ஓ டோனோக் ஒரு கோல் அடித்து, கோல் எண்­ணிக்­கையை 1–1 என்று சமன் செய்­தார். இத­னால் ஆட்­டம் சமனை நோக்கி நகர்ந்து கொண்­டி­ருந்­தது.

ஆட்­டத்­தின் 26வது நிமி­டத்­தில் இந்­திய அணி­யின் அமித் ரோஹி­தாஸ் தனக்­குக் கிடைத்த பெனால்டி கார்­னர் வாய்ப்பை கோலாக மாற்றி, கோல் எண்­ணிக்­கையை 2–1 என்று உயர்த்­தி­னார். ஆட்­டத்­தின் 36வது நிமி­டத்­தில் அயர்­லாந்­தின் ஷிம்­மின்ஸ் கோல் அடித்து 2–2 என்று கோல் எண்­ணிக்­கையை சமன் செய்­தார். ஆட்­டத்­தின் 42வது நிமி­டத்­தில் அயர்­லாந்­தின் லீகோல் தனக்­குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக்கி 2–3 என்று அயர்­லாந்தை முன்­னி­லைப் படுத்­தி­னார். ஆட்­டம் முடி­யும் வரை இந்­திய அணி­யால் கூடு­தல் கோல்­கள் அடிக்க முடி­ய­வில்லை. இத­னால், 2–3 என்ற கோல்­க­ளில் இந்­திய அணி அயர்­லாந்­தி­டம் தோல்வி அடைந்­தது.