இபிகோ 307, 498ஏ, 506, 328, 34 மற்­றும் 376 : ஷமி அவுட்

பதிவு செய்த நாள் : 10 மார்ச் 2018 01:26


கொல்­கத்தா : 

இந்­திய தண்­ட­னைச் சட்­டத்­தின் பிரி­வு­கள் பற்­றிய வகுப்பு அல்ல. ஆனால், நம் கிரிக்­கெட் வீரர் ஒரு­வர் மீது கொல்­கத்தா போலீ­சார் ஜாமீ­னில் வர முடி­யாத பிரி­வு­க­ளில் பதிவு செய்­துள்ள வழக்­கின் விப­ரம் இது.

இந்­திய அணி­யின் வேகப்­பந்து வீச்­சா­ளர்­க­ளில் ஒரு­வ­ரான முக­மது ஷமி தனக்­குத் துரோ­கம் செய்­து­விட்டு, பிற பெண் தோழி­க­ளு­டன் சுற்­றிக் கொண்­டி­ருப்­ப­தாக அவ­ரது மனைவி ஹாசின் ஜஹான் கொல்­கத்தா பஜார் போலீ­சில் புகார் கொடுத்­துள்­ளார். தன்னை அடித்­துத் துன்­பு­றுத்தி, உடல் மன ரீதி­யா­க­யாக கொடு­மைப் படுத்­திய ஷமி மீது நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று ஹாசின் தன் புகார் மனு­வில் கூறி­யி­ருந்­தார்.

இந்­தப் புகார் மனு­வின் அடிப்­ப­டை­யில் இந்­திய தண்­ட­னைச் சட்­டத்­தின் பிரி­வு­கள் 307 ( கொலை முயற்சி), 498 ஏ (பெண் வன் கொடுமை), 506 (கொலை மிரட்­டல்), 328 (கொடுங்­கா­யங்­கள் ஏற்­ப­டுத்­து­வது), மற்­றும் 34 (பலாத்­கா­ரம், ஷமி­யின் சகோ­த­ரர் மீது பாய்ந்­துள்­ளது) உட்­பட பல பிரி­வு­க­ளில் போலீ­சார் வழக்­குப்­ப­திவு செய்­துள்­ள­னர். ஜாமீ­னில் வர முடி­யாத பிரி­வு­க­ளில் ஷமி மீது போலீ­சார் வழக்­குப்­ப­திவு செய்­துள்­ள­னர் என்­ப­தால், அவ­ரது கிரிக்­கெட் வாழ்க்கை கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது. ஏறக்­கு­றைய ஷமி­ யின் கிரிக்­கெட் வாழ்க்­கைக்­கும், அவ­ரது பிர­பல்­யத்­துக்­கும் அவ­ரது மனை­வி­யின் புகார் வேட்டு வைத்­தது என்றே சொல்ல வேண்­டும்.