பாட்டிமார் சொன்ன கதைகள் – 156 – சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 09 மார்ச் 2018

தனக்கு தகு­தி­யா­ன­வ­னோ­டு­தான் யுத்­தம் புரிய வேண்­டும்!

யுத்­தம் துவங்­கு­வ­தற்கு முன் இரு பட்­சத்து வீரர்­க­ளு­கும் கூடி அந்­தக்­கா­லத்து பண்­பாட்­டிற்­குப் பொருந்­திய பிர­திக்­ஞை­க­ளைச் செய்­தார்­கள். யுத்­த­மு­றை­கள் காலத்­துக்­குக் காலம் மாறிக்­கொண்டே வரு­கின்­றன. அந்­தப் புரா­தன காலத்து யுத்த முறை­களை நினை­வில் வைத்­துக் கொண்டு படித்­தால்­தான் பார­தம் விளங்­கும். இல்­லா­விட்­டால் சிற்­சில இடங்­க­ளில் நிகழ்ச்­சி­கள் அசம்­பா­வி­த­மா­கத் தோன்­றும்.

பாரத யுத்த விதி­க­ளில் ஒவ்­வொரு நாளும் போர் முடிந்த பிறகு இரு தரப்­பி­ன­ரும் ப்ரீதி­யு­டன் கலக்க வேண்­டும். யுத்­தத்­தில் யாவ­ரும் தத்­தம் சமா­னஸ்­தர்­க­ளையே தாக்க வேண்­டும். அதர்ம முறை­யில் யார் பேரி­லும் யுத்­தம் நடத்­தக் கூடாது. சேனை­யின் மத்­தி­யி­லி­ருந்து வில­கிப் போகி­ற­வர்­களை ஒரு பொழு­தும் கொல்­லக்­கூ­டாது. தேர் ஏறி­ய­வன் தேர் ஏறி­ய­வ­னை­யும், யானை வீரன் யானை வீர­னை­யும், குதிரை ஏறி­யி­ருப்­ப­வன் குதிரை ஏறி­யி­ருப்­ப­வ­னை­யும், காலாள் காலா­ளோ­டும் எதிர்த்­துச் சண்ட செய்ய வேண்­டும். எதி­ரியை நம்­பிப் போரை நிறுத்­தி­ன­வன் மீதும் பயந்து வணங்­கி­ய­வன் மீதும் ஆயு­தம் பிர­யோ­கிக்­கக்­கூ­டாது. வேறு ஒரு­வ­னோடு போர் செய்து கொண்­டி­ருக்­கும் ஒரு­வ­னைப் போரில் கலந்து கொள்­ளா­மல் மற்­றொ­ரு­வன் ஆயு­தம் பிர­யோ­கம் செய்து கொல்­லக் கூடாது.

ஆயு­தன்  இழந்­த­வ­னை­யா­வது, கவ­னம் செலுத்­தா­மல் இருப்­ப­வ­னை­யா­வது, புறங்­காட்டி ஒடு­ப­வ­னை­யா­வது, கவ­சம் இழந்­த­வ­னை­யா­வது கொல்­லக் கூடாது. ஆயு­தங்­களை எடுத்­துக் கொடுக்­கும் பணி­யாட்­கள், பேரிகை அடிப்­ப­வர்­கள், சங்­கம் ஊது­கி­ற­வர்­கள், இவர்­கள் மேல் ஆயு­தம் பிர­யோ­கம் செய்­ய­லா­காது. இவ்­வா­றான யுத்த முறை­யைக் கெள­ரவ, பாண்­ட­வர்­கள் இரு­வ­ரும் அங்­கீ­க­ரித்து பிரத்ஞை செய்­தார்­கள். காலப்­போக்­கில் நியாய அநி­யாய கோட்­பா­டு­கள் மாறு­தல் அடை­யும். இக்­கா­லத்­துப் போர்­க­ளிலே போரில் உப­யோ­கிக்­கப்­ப­டும் எல்­லாச் சாத­னங்­க­ளும் குதி­ரை­கள் முத­லிய ஊமைப் பிரா­ணி­க­ளும், சிகிச்­சைக்கு வேண்­டிய மருந்­துங் கூட அழிக்­கப்­ப­டு­கின்­றன. எவ்­வித வரம்­பும் கிடை­யாது.

 முக்­கா­லத்­தில் இவ்­வா­றல்ல. ஆயி­னும் அக்­கா­லத்­தி­லேயே சில சம­யங்­க­ளில் பல கார­ணங்­க­ளி­னால் புறக்­க­ணிக்­கப்­பட்­ட­தா­கப் பார­தத்­தில் காண்­கி­றோம். விசேஷ சந்­தர்ப்­பங்­க­ளும், கார­ணங்­க­ளும் வர­வர அந்த நிய­தி­கள் அழிந்து போய்ப் புது நிய­தி­கள் உண்­டா­கின்­றன. பாரத யுத்­தத்­தில் வரம்பு கடந்த செயல்­க­ளும் சிற்­சில சம­யங்­க­ளில் நடை­பெற்­றன. ஆன­போ­தி­லும் மொத்­தத்­தில் மேற்­கூ­றிய நிய­தி­களை எல்­லோ­ரும் ஒப்­பு­கொண்டு அவற்­றின்­படி நடந்­தார்­கள். விதி­கள் புறக்­க­ணிக்­கப்­பட்ட போது எல்­லோ­ரும் நிந்­தித்­தார்­கள். புறக்­க­ணிக்­கப்­பட்­ட­வர்­கள் வெட்­க­ம­டைந்­தார்­கள்.

` வீரர்­களே! இதோ உங்­க­ளுக்கு எதி­ரில் சுவர்க்க வாயில் திறந்து நிற்­கி­றது.இந்­தி­ர­னு­ட­னும், பிரம்­ம­னு­ட­னும் சேர்ந்து வாழும் பாக்­கி­யம் உங்­க­ளுக்கு கிட்­டி­யி­ருக்­கி­றது. உங்­கள் பெற்­றோ­ரும், மூதா­தை­ய­ரும் அவர்­க­ளைப் பெற்ற

முன்­னோர்­க­ளும் சென்ற வழி­யில் நீங்­க­ளும் செல்­லுங்­கள். வெற்றி அல்­லது சுவர்க்­கம் உங்­கள் முன் நிற்­கி­றது. இதுவே உங்­க­ளு­டைய குணங்­க­ளின் சனா­தன தர்­மம். மனக் கவ­லை­யின்றி மகிழ்ச்­சி­யு­டன் போர்­பு­ரிந்து புக­ழும் மேன்­மை­யும் அடை­யுங்­கள். வீட்­டில் வியா­தி­யி­னால் மர­ணம் அடை­தல் சத்­தி­ரி­ய­னுக்­குத் தகாது. ஆயு­தத்­துக்கு இரை­யா­வதே சத்­தி­ரி­ய­னு­டைய தர்­மம்’­­இவ்­வாறு சேனா­தி­பதி பீஷ்­ம­ரால் தூண்­டப்­பட்ட அர­சர்­கள் பேரிகை முழுக்­கம் செய்து கொண்டு கெள­ர­வர்­க­ளுக்கு வெற்­றி­யும் புக­ழும் உண்­டாக்­கித் தரு­வோம் என்று யுத்­தம் துவங்­கி­னார்­கள்.

 பீஷ்­ம­ரு­டைய கொடி­யில் பனை­ம­ர­மும், ஐந்து நட்­சத்­தி­ரங்­க­ளும் பிர­கா­சித்­தன. சிம்­மத்­தின் வால் எழு­திய அசு­வத்­தா­மன் கொடி காற்­றில் பறந்­தது. துரோ­ண­ரு­டைய பொன்­னி­றத் துவ­ஜத்­தில், கமண்­ட­ல­மும், வில்­லும் பிர­கா­சித்­தன. துரி­யோ­த­ன­னு­டைய புகழ்­பெற்ற கொடி­யில் காளை­மா­டும், ஜயத்­ர­த­னு­டைய கொடி­யில் பன்­றி­யும், இவ்­வாறு இன்­னும் பல வீரர்­கள் தேர்­த­க­ளில் பல­வித கொடி­கள் பறந்­தன. அணி வகுக்­கப்­பட்ட கெள­ர­வச் சேனை­யைப் பார்த்து யுதிஷ்ட்­ரன் அருச்­சு­ன­னுக்­குக் கட்­ட­ளை­யிட்­டான்.

` பகை­வர்­க­ளு­டைய படை மிகப் பெரி­ய­தாக இருக்­கி­றது. குறை­வாக இருக்­கிற நம்­மு­டைய படையை விஸ்­தா­ரப் படுத்­திப் பலம் குறை­யச் செய்­யா­மல் குவித்து போர் புரிய வேண்­டும். விஸ்­தா­ரப்­ப­டுத்­தி­னால் பல­கு­றைவு ஏற்­ப­டும். ஊசி­முக வியூ­க­மாக நம்­மு­டைய படைய அணி­வ­குப்­பா­யாக’ என்று தனஞ்­செ­ய­னுக்கு உத்­த­ர­விட்­டான்.

 இவ்­வாறு இரு­பக்­கத்­தி­லும் சேனை­கள் அணி­வ­குக்­கப்­பட்டு நின்­ற­தும், அருச்­சு­ன­னுக்கு உண்­டான மனக் கலக்­க­மும் அதைத் தீர்க்க கிரிஷ்­ணன் உப­தே­சித்த கரு­ம­யோ­க­மும் உல­கப் பிர­சித்­தம். அப்­போது கண்­ண­னின் வாக்­கில் தோன்­றிய பக­வத் கீதை என்­கிற உப­தேச மொழி­கள் உல­கத்­தில் எந்­தத் தொழி­லில் ஈடு­பட்டு எந்த நிலை­ய­லி­ருப்­ப­வர்­க­ளுக்­கும் எந்­தக் குண விசே­ஷங்­க­ளு­டன் பிறந்­த­வர்­க­ளுக்­கும் உய்­யும் வழி­காட்டி,  உத­வும்­ப­டி­யான சாஸ்­தி­ர­மா­கப் பெரி­யோர்­க­ளால் கரு­தப்­பட்டு வரு­கி­றது.

பக­வத் கீதை பார­தத்­தில் ஒரு பாகம். எந்த எந்­தச் சம­யத்­தில் எந்த எந்த கடமை விதிப்­படி ஏற்­ப­டு­கி­றதோ அதைச் சரி­வ­ரச் செய்ய வேண்­டும். செய்து முடித்­து­விட்டு அதன் பயணை ஆண்­ட­வ­னுக்­குச் சமர்­பித்து விட­வேண்­டும் இதுவே கண்­ணன் உப­தே­சித்­தது.

 யுத்­தம் ஆரம்­பித்­து­விட்­டது என்று எல்­லோ­ரும் எண்­ணி­யி­ருந்த நேரத்­தில், வீர­னும் தீர­னு­மான யுதிஷ்ட்­ரன் தீடி­ரென்று, தன் கவ­சத்­தைக் கழற்­றி­விட்டு எல்லா ஆயு­தங்­க­ளை­யும் தேரில் வைத்­து­விட்டு கீழே இறங்கி கைகு­வித்­துக் கொண்டு பாத­சா­ரி­யா­கக் கெள­ரவ சேனா­தி­பதி இருக்­கு­மி­டம் நோக்­கிச் சென்­றான். அவ்­வாறு ஒன்­றும் சொல்­லா­மல் யுதிஷ்ட்­ரன் சென்­ற­தைப் பார்த்து எல்­லோ­ரும் திகைப்பு அடைந்­தார்­கள். தனஞ்­செ­யன்,

விரை­வா­கத் தேரி­லி­ருந்து கீழே குதித்து யுதிஷ்ட்­ர­னைப் பின் தொடர்ந்து வேக­மா­கச் சென்­றான். அவன் கூட மற்­றச்­ச­கோ­த­ரர்­க­ளும் கிருஷ்­ண­னும் சென்­றார்­கள். யுதிஷ்ட்­ரன், ஒரு­வேளை தன் இயற்கை தரு­மத்தை அனு­ச­ரித்­துக் கரு­ணை­யால் தூண்­டப்­பட்டு திடி­ரென்று யுத்­தம் வேண்­டாம் என்று தீர்­மா­னித்து விட்­டானோ என்று சந்­தே­க­மும், கவ­லை­யும் பட்­டார்­கள்.