ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 7–03–18

பதிவு செய்த நாள் : 07 மார்ச் 2018

அபி­ந­யத்­து­டன் கூடிய பாடல்!

(சென்ற வாரத் தொடர்ச்சி)

7. கல்­யாணி

கமல் நடித்­தி­ருந்த 'சூர­சம்­ஹா­ரம்' திரைப்­ப­டத்­தில் இடம்­பெற்­றி­ருந்த சூப்­பர் டூப்­பர் ஹிட் பாடல்...

''நான் என்­பது நீ அல்­லவோ தேவ தேவி

இனி நான் என்­பது நீ அல்­லவோ தேவ தேவி

தேவ­லோ­கம் வேறு ஏது தேவி இங்கு உள்ள போது வேதம் ஓது..

நான் என்­பது நீ அல்­லவோ தேவ தேவா

இனி நான் என்­பது நீ அல்­லவோ தேவ தேவா...''

இப்­பா­டலை மனோ­வும், சித்­ரா­வும் சேர்ந்து பாடி அசத்­தி­யி­ருப்­பார்­கள்.

ஒவ்­வொரு கர்­நா­டக இசை ரசி­க­ரும் இந்த பாடலை மிக­வும் விரும்­பு­வார். 1985ம் ஆண்டு இயக்­கு­னர் கே. பால­சந்­தர்  இயக்­கத்­தில் வெளி­வந்த 'சிந்து பைரவி' படத்­தில் வரும் 'கலை­வா­ணியே' எனும் இந்த பாடல் கர்­நா­டக இசை­யில் மிக சிறப்பு வாய்ந்­தது. இந்த பாடல் இளை­ய­ரா­ஜா­வின் ஒரு சிறந்த ஆராய்ச்­சி­யின் பலன் என்றே கூற­லாம். ஏனெ­னில், இந்த பாட­லில் ஆரோ­க­ணம் மட்­டுமே உள்­ளது, அவ­ரோ­க­ணம் கிடை­யாது. இது படத்­தின் நாய­கன் இனி சரிவு நிலை அடை­வ­தில்லை என்­பதை குறிப்­ப­தற்­கா­கவே அமைக்­கப்­பட்­டது. பாட­கர் ஜேசு­தா­ஸின் குரல் இந்த படத்­தில் அனைத்­துப் பாடல்­க­ளுக்­கும் வளம் கொடுத்­தி­ருப்­பது சிறப்­பான விஷ­யம். பாடலை எழு­தி­ய­வர்,  வைர­முத்து.

''கலை­வா­ணியே உன்­னைத்­தானே அழைத்­தேன்

உயிர்த்­தீயை வளர்த்­தேன் வர­வேண்­டும் வரம் வேண்­டும்

துடித்­தேன் தொழு­தேன் பல­முறை

நினைத்­தேன் அழு­தேன் இசை தரும் கலை­வா­ணியே..

சுரம் பாடி சிரித்­தாய்.. சிரிப்­பாலே எரித்­தாய்..

மடி மீது மரித்­தேன்.. மறு ஜென்­மம் கொடுத்­தாய்..

சிறு விரல்­க­ளில் தலை கோதி

மடி­த­னில் என்னை வளர்த்­தாய்..

இசை எனும் வரம் வரும் நேரம்

திசை சொல்­ல­வில்லை பறந்­தாய்

முகம் காட்ட மறுத்­தாய்.. ஆஆ .. ஆஆ ..

முகம் காட்ட மறுத்­தாய்.. முக­வ­ரியை மறைத்­தாய்..

நீ முன் வந்து பூ சிந்து

விழித்­து­ளி­கள் தெறிக்­கி­றது துடைத்­து­விடு

கலை­வா­ணியே...!''

கல்­யாணி ராகத்­தில் 'பகல் நிலவு' படத்­தில் வரும் பாடல் ''வைதேகி ராமன் கைசே­ரும் காலம்..'' படம் வெளி­யான ஆண்டு 1985. படத்தை இயக்­கி­ய­வர் மணி­ரத்­னம். அவரை ஒரு நல்ல டைரக்­டர் என இனம் காண்­பித்த படம் இது.

காட்­சி­படி சரத்­பாபு, ராதி­கா­வி­டம் சலங்­கை­யைக் காட்டி இது சலங்கை அல்ல, இதுவே மாங்­கல்­யம் என்­கி­றார். அதைக் காலில் கட்­டிக் கொண்டு ராதிகா நட­ன­மா­டு­கி­றார். ஒரு அபி­ந­யத்­து­டன் கூடிய பாட­லாக இது மலர்­கி­றது. இசை­ய­மைத்­த­வர் இளை­ய­ராஜா. பாட­லைப் பாடி­ய­வர் எஸ். ஜானகி. பாடலை இயற்­றி­ய­வர் கங்கை அம­ரன். நல்ல கூட்­ட­ணி­தானே இது!

பாடல் இது தான்:-

''வைதேகி ராமன் கைசே­ரும் காலம்

தை மாத நன் நாளிலே  

வையம் வான­கம் யாவும் தோர­ணம்

மெய்யை மெய் தொடும் காதல் கார­ணம்

வைதேகி ராமன் கைசே­ரும் காலம்

தை மாத நன் நாளிலே  ஆ..ஆ..''