தேடப்பட்ட பயங்கரவாதி அரிஸ்கான் டில்லியில் கைது

பதிவு செய்த நாள் : 15 பிப்ரவரி 2018 02:19


புதுடில்லி:

பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் தேடப்பட்டு வந்த இந்தியன் முஜாகிதீன் பயங்கவாதி அரிஸ்கானை டில்லி சிறப்பு படை போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அரிஸ்கான் இந்தியாவின் பின்லேடன் என்று அழைக்கப்பட்டவர்.

    இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாதி அஜிஸ்கான் என்ற ஜூனைத். 32 வயதான இவர் 5 குண்டுவெடிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர். இன்ஜினீயராக இருந்த இவர் பயங்கரவாதியாக மாறியவர். இவரை  கடந்த 2008ம் ஆண்டு நடந்த பாட்லா ஹவுஸ் என்கவுன்டர் சம்பவத்தில் இருந்து போலீசார் தேடி வந்தனர். இந்த என்கவுன்டரில் 2 இந்தியன் முஜாகிதீன் பயங்கவராதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மற்றும் 2 பேர் கைது செய்யப்பட்டார்கள். இவர் மட்டும் தப்பிச்சென்று விட்டார். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில்  இன்ஸ்பெக்டர் மோகன்சந்த் சர்மாவும் உயரிழந்தார்.

    இதற்கிடையே டில்லி  போலீஸ் சிறப்பு போலீஸ் படை நேற்று  பயங்கரவாதி அரிஸ்கான் என்ற ஜூனைத்தை கைது செய்து உள்ளது.  இவர் உ.பி.மாநிலம் அசம்காரை சேர்ந்தவர். டில்லி, பஹர்கங்க், பரகமபா சாலை, கன்னாட் பிளேஸ், கிரேட்டர் கைலாஸ், கோவிந்த்புர் ஆகிய இடங்களில் நடந்த தொடர்குண்டு வெடிப்பு சம்பவங்களுக்குப்பிறகு இவர் பாட்லா ஹவுசில் தங்கி இருந்தபோதுதான் என்கவுன்டர் நடந்தது. இதில் இவர் தப்பி தலைமறைவதாக இருந்து வந்தார்.

   2008ம் ஆண்டு நடந்த டில்லி  தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களிலும் மற்றும் பல குண்டுவெடிப்புகளிலும் இவர் தொடர்புடையவர் என்று போலீசார் அறிவித்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் 165 பேர் வரை உயிரிழந்தனர். இந்த தகவலை டில்லி போலீஸ்  சிறப்பு படைதுணை கமிஷனர் பிரமோத் சிங்  தெரிவித்தார்.

    கைது செய்யப்பட்ட அஜிஸ்கான், குண்டு தயாரிப்பதில் நிபுணர். சதிகாரர், கொலையாளி என்றும் அவர் கூறினார். இதனால் இவரை இந்தியாவின் பின்லேடன் என்று அழைக்கப்பட்டார். இவரது கூட்டாளி அதிப்கான் பாட்லா ஹவுஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்டு விட்டார். 2007ம் ஆண்டு உ.பி.யில் நடந்த குண்டுவெடிப்புகள், 2008ம் ஆண்டு நடந்த ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்பு, 2008ம் ஆண்டு நடந்த ஆமதாபாத் குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையவர்.

   அரிஸ்கான் தலைக்கு ஏற்கனவே தேசிய புலனாய்வு பிரிவு ரூ.10 லட்சம் அறிவித்து இருந்தது. டில்லி போலீஸ் ரூ. 5 லட்சம் அறிவித்து இருந்தது. 2008ம் ஆண்டு குஜராத் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய மிகவும் தேடப்பட்டு வந்தவர் அப்துல் சுபான். அப்போது நடந்த குண்டுவெடிப்பில் 56 பேர் உயிரிழந்தனர். இவர்  டில்லியில் உள்ள காசிப்பூரில் கடந்த ஜனவரி 22 ம் தேதி துப்பாக்கி சண்டைக்கு பிறகு  கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து இப்போது அஜிஸ்கான் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.