கேரளாவிலும் அரசுப் பேருந்து பயணக் கட்டணம் உயர்கிறது

பதிவு செய்த நாள் : 14 பிப்ரவரி 2018 19:40

திருவனந்தபுரம் ,

கேரளாவில் மாநிலத்திலும் அரசுப் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுகிறது. குறைந்தபட்ச கட்டணம் 8 ரூபாயாகும்.

கேரளாவில் அரசுப் பேருந்து கட்டணத்தை உயர்த்த அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. சாதாரண பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.7ல் இருந்து ரூ. 8ஆக உயர்த்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
பேருந்து கட்டண உயர்வு மார்ச் 1 முதல்

அமலுக்கு வருவதாக கேரளா அரசு தெரிவித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளின்படி சாதாரண பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு கட்டணம் 64 பைசாவில் இருந்து 70 பைசாவாக உயருகிறது.

சூப்பர் எக்ஸ்பிரஸ் சேவைகளுக்கு குறைந்தபட்ச கட்டணம்ரூ. 20 ல் இருந்து ரூ. 22 ஆக உயர்ந்து உள்ளது.

சூப்பர் டீலக்ஸ் ரூ 30 ஆகவும், ஹைடெக் சொகுசு  ஏசி பேருந்தில் ரூ.44 ஆகவும் வால்வோ பேருந்தில் ரூ. 45 ஆகவும் உயர்ந்து உள்ளது.

ஆனால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் குறைந்த பட்ச கட்டணத்தை ரூ. 10 உயர்த்த அனுமதி கோரி உள்ளனர்.

மாணவர்கள் பேருந்துகளில் 40 கி.மீ. வரை பயணிப்பதற்கான கட்டணம் தற்போதைய கட்டணத்திலிருந்து ரூ 1 உயர்த்தப்பட உள்ளது என கேரள போக்குவரத்துதுறை அமைச்சர் ஏ.கே. சசிதரன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் 2014ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போதுதான் பேருந்து பயணக் கட்டணம் உயர்த்தப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.