ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி: தமிழக ஆளுநர், அமைச்சர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள் : 13 பிப்ரவரி 2018 19:42

கோவை:

கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றது. இசை நிகழ்ச்சிகள், நாட்டியம், வாய்ப்பாட்டு, வாத்தியம் இசைக்கும் குழுவில் வெளிநாட்டினர் பங்கு கொண்டனர். புல்லாங்குழல், கித்தார், தம்பூர் ஆகியவற்றை வெளிநாட்டு நிபுணர்கள் இசைத்தனர். இந்நிகழ்வை ஆளுநரும் அமைச்சர்கள் கண்டு உணர்வு பூர்வமாக ரசித்தார்கள்.

திரளாக கூடியிருந்த பக்தர்களை பார்த்து சத்குரு வரவேற்று சிறப்புரையாற்றினார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.

தமிழக அமைச்சர்கள்  ஆர்.பி. உதயகுமார், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, செல்லூர் ராஜு ஆகியோர் சிவராத்திரி பூஜை நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கணக்கற்ற பக்தர்களில் பெருமளவு பெண்களும் கலந்துகொண்டனர்

ஈஷா யோக மையத்தில் நடைபெறும் சிவராத்திரி சிறப்பு நிகழ்வின் நேரலையைக் காண இங்கே சொடுக்கவும்.