அரசியல் கட்சியின் பெயரைப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் செல்கிறார் நடிகர் கமல்ஹாசன்

பதிவு செய்த நாள் : 13 பிப்ரவரி 2018 19:06

சென்னை,

தனது கட்சியின் பெயரைப் பதிவு செய்ய நடிகர் கமல் தேர்தல் ஆணைய அலுவலகத்திறகு பிப்ரவரி 15ந் தேதி செல்கிறார்.

தனது அரசியல் பிரவேசத்தை பிப்ரவரி 21-ம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் நினைவிடத்தில் இருந்து துவங்கப் போவதாக, நடிகர் கமல்ஹாசன் ஏற்கனவே அறிவித்துள்ளார். அதே நாள் மதுரையில் பொதுக்கூட்டம் ஒன்று நடக்கப் போவதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் தனது கட்சியின் பெயரைப் பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திடம் 14 அல்லது 15ந் தேதி நேரம் ஒதுக்கும்படி நடிகர் கமல்ஹாசன்  கேட்டுக்கொண்டார்.

15ந் தேதி நடிகர் கமல்ஹாசன் தேர்தல் ஆணையத்துக்கு வரலாம் என தேர்தல் ஆணையம் கூறியது என அவரது நற்பணி இயக்கப் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய கமல்ஹாசன், அமெரிக்காவிலிருந்து 15ந் தேதி சென்னை திரும்ப இருந்தார். 13ந்தேதி காலை கமல்ஹாசன் சென்னை வந்துவிட்டார் எனத் தெரிகிறது.

இதற்கிடையில், பிப்ரவரி 11ம் தேதி கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்திற்கு உதவ www.naalainamadhe.maiam.com என்ற புதிய இணையதளத்தினை இன்று தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத் தகுந்தது..