ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மீது பிஎஸ்பி தலைவர் மாயாவதி புகார்

பதிவு செய்த நாள் : 13 பிப்ரவரி 2018 18:20

லக்னோ,

   இந்திய ராணுவத்தை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் குறை கூறி இருப்பது பெரிதும் கவலைத் தருகிறது. இந்திய ராணுவத்தை அவமதிப்பதாகவும் உள்ளது என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி புகார் கூறியுள்ளார்.


இந்திய ராணுவம் யுத்தத்திற்கு தயாராக 6 மாதம் பிடிக்கும். ஆனால் ஆர்எஸ்எஸ் கட்சி தனது தொண்டர்களை 3 நாளில் தயார் செய்துவிடும் என்று பீகாரில்  மோகன் பகவத் கூறியிருக்கிறார்.

இந்திய ராணுவத்தை பெரிதும் அவமதிக்கிற செயல் இது. ஆர்.எஸ்.எஸ் மீது மோகனுக்கு அவ்வளவு நம்பிக்கை இருந்தால் அவர் பாதுகாப்புக்கு சிறப்பு அதிரடிப்படை வீரர்களை ஏன் நியமிக்க வேண்டும். ஆர்எஸ்எஸ் தொண்டர்களையே நியமிக்கலாமே என மாயாவதி கூறினார்.

தன்னுடைய தவறான கருத்துக்காக முதலில் மோகன் பகவத் மன்னிப்பு கேட்க வேண்டும். ஒரு காலத்தில் ஆர்எஸ்எஸ் சமூக அமைப்பாக இருந்தது. இப்போது அரசியல் கட்சியாக மாறிவிட்டது. சமூக சேவையை தூக்கி போட்டுவிட்டு தேர்தல் அரசியலில் குதித்துவிட்டது ஆர்.எஸ்.எஸ் என்றார் மாயாவதி.

இந்திய ராணுவத்தையும் ஆர்எஸ்எஸ் தொண்டர்களையும் நான் ஒப்பிடவில்லை என மோகன் பகவத் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளார் என அகில பாரதிய பிரச்சார் பிரமுக் வைத்யா கூறினார்.