இரண்டாம் உலக போர் வெடிகுண்டு அகற்றப்பட்டது: லண்டன் விமானநிலையம் மீண்டும் திறக்கப்பட்டது

பதிவு செய்த நாள் : 13 பிப்ரவரி 2018 17:30

லண்டன்,

லண்டன் விமானம் நிலைய ஒடுபாதை அருகே மண்ணில் புதைந்து கிடந்த இரண்டாம் உலக போரின் வீசப்பட்ட வெடிகுண்டு இன்று அகற்றப்பட்டது. இதனால் 2 நாள் மூடப்பட்டிருந்த விமானநிலையம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது.  

லண்டன் விமானம் நிலையம் அருகே தேம்ஸ் நதிக்கரையில் ஞாயிற்றுக்கிழமை அன்று இரண்டாம் உலக போரின் வெடிக்காத ஜெர்மன் வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து பாதுகாப்பு காரணமாக லண்டன் விமானநிலையம் நேற்று மூடப்பட்டு அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

மேலும் வெடிகுண்டு இருக்கும் இடத்தை சுற்றி 214 மீட்டர் தொலைவிற்குள் வாழும் மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அனைவரையும் தற்காலிக முகாம்களில் தங்க வைக்க அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்தனர்.

இந்நிலையில் இன்று வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் அந்த வெடிகுண்டை அகற்றப்பட்டது. இதையடுத்து 2 நாள் மூடப்பட்டிருந்த விமானநிலையம் இன்று வழக்கம் போல் செயல்படத் தொடங்கின.