ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதி சுட்டுக் கொலை

பதிவு செய்த நாள் : 13 பிப்ரவரி 2018 17:24

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். 

ஸ்ரீநகரில் கரண் நகர் பகுதியில் சி.ஆர்.பி முகாம் மீது மீண்டும் பயங்கரவாதிகள் நடத்த இருந்த தாக்குதலை நேற்று பாதுகாப்பு படையினர் முறியடித்தனர்.
அந்த இடத்தில் இருந்து தப்பிய பயங்கரவாதிகள் அருகில் புதிதாகக் கட்டப்படும் கட்டடம் ஒன்றில் புகுந்து கொண்டனர். பயங்கரவாதிகள் அந்த இடத்தில் இருந்து தப்ப வழியில்லாமல் ராணுவம் சுற்றி வளைத்துக்கொண்டது. அருகில் உள்ள தனியார் வீடுகளில் குடியிருப்போர் அணைவரும் பாதுகாப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். அதைத் தொடர்ந்து செவ்வாயன்று புதிய கட்டிடத்தில் புகுந்த பயங்கரவாதிகள் மீதான தாக்குதலை ராணுவம் இன்று காலை துவக்கியது.

பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.