மகாசிவராத்திரி பண்டிகை: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

பதிவு செய்த நாள் : 13 பிப்ரவரி 2018 17:20

புதுடில்லி:

    சிவராத்திரி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் வாழ்த்துரை பற்றிய விவரத்தை இந்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் வெளியிட்டுள்ளது.

பிப்ரவரி 13ம் தேதி இரவு மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள பிரபலமான சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி வழிபாடு நடைபெறுகிறது.