ஜம்மு,
ஜம்மு காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இன்று பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரரான லான்ஸ் நாயக் யோகேஷ் முரளிதர் பந்தானே (22) கொல்லப்பட்டார்.
கடந்த சில மாதங்களாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று ஜம்மு காஷ்மீர் ராஜூரி மாவட்டத்தின் சுந்தர்பானி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் மகாராஷ்டிரத்தை சேர்ந்த லான்ஸ் நாயக் யோகேஷ் முரளிதர் பந்தானே என்ற வீரர் கொல்லப்பட்டார். இந்திய வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்திற்கு கடும் பதிலடி கொடுத்தனர். இந்திய வீரர்களின் பதில் தாக்குதலில் பாகிஸ்தானின் இரு நிலைகள் அழிக்கப்பட்டன. | ![]() |
சில நாட்கள் முன்பு சம்பா பகுதியில் இந்திய எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர் பாகிஸ்தான் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்று ஆர்னியா பகுதியில் அமைந்துள்ள இந்திய எல்லை வழியாக ஊடுறுவ முயன்ற பாகிஸ்தானியரை இந்திய ராணுவம் சுட்டுகொன்றது.