எங்கள் பிரச்னைக்கு தீர்வு வரும்: நீதிபதி குரியன் ஜோசப் பேட்டி

பதிவு செய்த நாள் : 14 ஜனவரி 2018 02:51

திருவனந்தபுரம்,

புதுடில்லியில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், லோகுர், ஆகியோருடன் சேர்ந்து நானும் எழுப்பிய பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என கேரள மாநிலத்தைச் சேர்ந்த  உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் கூறினார்.

நேற்று காலை டெல்லியில் செயதியாளரகளிடம் பேசிய சுப்ரீம்கோர்ட் நீதிபதி குரியன் ஜோசப் (புகைப்படத்தில் சிவப்பு வட்டத்திற்குள் இருப்பவர்) இன்று சனிக்கிழமை  தனது சொந்தமாநிலமான கேரளத்துக்கு வந்தார்.காலடியில் டிவி ஒன்றுக்கு நீதிபதி குரியன் ஜோசப் பேட்டி அளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது: நீதி மற்றும் நீதித்துறை நலனுக்காக மட்டுமே நாங்கள்செ யல்பட்டோம். இதனைத் தான் நாங்கள் டில்லியில் கூறினோம்.இந்த விஷயத்தில் இதற்கு மேல் கூற ஒன்றும் இல்லை.

நீதித்துறையில் உள்ளவர்களின் நம்பிக்கையை நிலைநாட்டவே  நீதிபதிகள் பேட்டி கொடுத்தனர். பேட்டியளித்த நாங்கள்- உச்ச நீதிமன்ற நீதிபதிகள்   எந்த விதிமுறைகளையும் மீறவில்லை. எங்களது நடவடிக்கை சுப்ரீம் கோர்ட் நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையை கொண்டு வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

நாங்கள் எழுப்பிய பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையும்  உள்ளது. இவ்வாறு நீதிபதி குரியன் ஜோசப்  கூறினார்.

நீதிபதிகள் பேட்டி அளித்தது ஒன்றும் கிரிமினல் குற்றம்அல்ல. அதில் எந்தத் தவறும் கிடையாது என்று முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறினார்.

முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ் கூறுகையில், நானும் உச்சநீதிமன்ற கொலிஜியத்தில் இருந்திருக்கிறேன்.  ஒவ்வொரு முக்கிய பிரச்னையிலும் சக நீதிபதிகளை கலந்து ஆலோசித்தே தலைமை நீதிபதி முடிவு எடுப்பார். இப்போது எழுந்துள்ள பிரச்னை கடுமையானது. இதை கவனத்தில் கொள்ளவேண்டும் என்றார்.