நீதிபதிகள் போல மத்திய அமைச்சர்களும் பயமின்றி பேச வேண்டும்: யஷ்வந்த்சின்கா பேட்டி

பதிவு செய்த நாள் : 14 ஜனவரி 2018 02:31

புதுடில்லி,

சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் பயமின்றி உள்ளதை உள்ளவாறே பேசியது போல மத்தியஅமைச்சர்களும் ஜனநாயகத்தை காக்க  பயமின்றி துணிச்சலாக பேச வேண்டும் என்று பா.ஜ. மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா கேட்டுக்கொண்டார்.

வாஜபேய் பிரதமராக இருந்த பொழுது மத்திய நிதியமைச்சராக இருந்தவர்  யஷ்வந்த்சின்கா . அவர் இன்று அளித்த பேட்டி விவரம்:
சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் நான்கு பேரும்  கூறிய கருத்துக்கள், எமர்ஜென்சி போன்ற சூழல் நிலவுவதையே காட்டுகிறது.  
தலைமை நீதிபதிக்கு எதிராக நான்கு நீதிபதிகள் பயமின்றி கருத்துக்களை கூறி உள்ளனர்.
ஜனநாயகத்துக்காக அவர்கள்  குரல் கொடுத்துள்ளனர். ஜனநாயகத்துக்கு ஆபத்து என்று கூறியிருப்பதால் அதை சீரியஸாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.  
இது நீதித்துறையின்உள்விவகாரம் என்பதால் அவர்களே பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும்.

ஜனநாயகம் பற்றி கவலைப்படுகிற ஒவ்வொருவரும் அது பற்றி பேச வேண்டும். கட்சித் தலைவர்களையும் மத்திய அமைச்சர்களையும் நான்கேட்டுக்கொள்வது...  ஜனநாயகத்தை காக்க பயமின்றி  குரல் எழுப்பவேண்டும் என்பது தான்..  

இவ்வாறு அவர் கூறினார்.