ராஜஸ்தான்: இடைத்தேர்தலில் 55 வேட்பாளர்கள் போட்டி

பதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2018 03:26

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் அல்வார், அஜ்மீர் லோக்சபா தொகுதிகள் மற்றும் மண்டல்கர்க் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 55 வேட்பாளர் போட்டியிட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அல்வார், அஜ்மீர் தொகுதிகளில் போட்டியிட முறையே 15 மற்றும் 26 வேட்பாளர்கள், மண்டல்கர்க் தொகுதியில் போட்டியிட 14 என மொத்தம் 55 வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன என மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
அல்வார் நாடாளுன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கரண் சிங் யாதவ்,

 பாஜகவின் ஜஸ்வந்த் சிங் யாதவ் மற்றும் 11 சுயேட்சைகளின் வேட்பு மனுக்கள் செல்லுபடியானவையாக தேர்வு செய்யப்பட்டது.

அதே போல அஜ்மீர் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜகவின் ராம்ஸ்வரூப் லம்பா, காங்கிரஸ் வேட்பாளர் ரகு ஷர்மா மற்றும் 21 சுயேட்சைகளும் போட்டியிட தகுதி பெற்றுள்ளனர்.

மண்டல்கர்க் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜகவின் சக்தி சிங், காங்கிரசின் விவேக் தாகத் மற்றும் 12 சுயேட்சைகள் போட்டியிட உள்ளனர்.

இருந்த போதிலும், வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கு கடைசி நாளான ஜனவரி 15ம் தேதியே எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்பதை அறுதியிட்டு கூற முடியும்.