விலை உயர்ந்துவிட்டதால் ரேஷனில் உளுத்தம் பருப்பு வழங்க இயலாது: அமைச்சர் செல்லூர் ராஜூ

பதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2018 02:28

சென்னை,

விலைவாசி உயர்ந்துவிட்டதால் தமிழ்நாடு ரேஷன் கடைகளில் உளுத்தம் பருப்பு வழங்க இயலாது என அமைச்சர் செல்லூர் கே.ராஜூ இன்று சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

இன்று சட்டசபைப் பேரவையின் கேள்வி நேரத்தில் சைதாப்பேட்டை எம்எல்ஏ  மா.சுப்பிரமணியன் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ கூறும்போது
விலைவாசி உயர்வு காரணமாக தமிழ்நாடு நியாயவிலை கடைகளில் ரேஷன் தாரர்களுக்கு மாதந்தோறும் உளுத்தம் பருப்பு வழங்க இயலாது என்றும், உளுத்தம் பருப்பு பதிலாக துவரம் பருப்பு வழங்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

தங்கள் பகுதியில் ரேஷன் கடைகள் சரிவர இயங்கவில்லை என்ற கேள்விக்கு,

சென்னை 172-வது வார்டு பள்ளிப்பட்டு, ஸ்ரீராம் நகர் பகுதியில் எம்.எல்.ஏ மா.சுப்ரமணியன் இடத்தை தேர்வு செய்து தந்தால் புதிய ரேஷன் கடை திறக்கப்படும்  என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

ரேஷன் கடைக்கான இடத்தை நாளையே தேர்வு செய்து தருவதாக எம்.எல்.ஏ மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.