தமிழத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2018 02:05

சென்னை,

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டசபையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் கூறியதாவது:

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்கள் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வார்டு மறுவரைவு ஆணையம் தோற்றுவிக்கப்பட்டது. இது உள்ளாட்சித் தேர்தல் வார்டு பிரிக்கும் கால அட்டவணையை 28.2.2018-க்குள் அறிக்கையை வழங்கும். அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித்  தேர்தல் நடைபெறும்.

இந்தாண்டு இறுதியில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும்.

இவ்வாறு, தமிழக முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில்  கூறினார்.

இந்த வருடத்தின் முதல் சட்டப் பேரவை கூட்ட நிகழ்வுகள் இன்றுடன் நிறைவேறின. தேதி குறிப்பிடாமல் அவைத்தலைவர் தனபால் சட்டப்பேரவையை ஒத்திவைத்தார்.