ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்

பதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2018 01:47

ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் உரி பகுதியில் உள்ள இந்திய நிலைகளின் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உரியில் கமால்கோடி பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்திய ராணுவமும் உரிய பதிலடி தாக்குதல் தொடுத்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் உயிர்சேதம் எதுவும் இல்லை என்றும் ராணுவ அதிகாரி கூறினார்.

அதிகாலை 2 மணிக்கு நிறுத்தப்பட்ட துப்பாக்கி சூடு  விடிந்த பின்னர் மீண்டும் தொடங்கியது என ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பாகிஸ்தானின் காட் கோடேரா பகுதியில் இந்திய ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய துப்பாக்கி சூட்டில் பீர்கானாவை சேர்ந்த 65 வயது பெண்மணி உயிரிழந்ததாக பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக இணை ஆணையருக்கு பாகிஸ்தான் அதிகாரிகள் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.