இந்தியர்களை பாதிக்கும் டிரம்ப்பின் விசா கெடுபிடி!

பதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2018

அமெ­ரிக்க அதி­பர் டொனால்ட் டிரம்ப் ஆலோ­சித்து வரும் திட்­டத்­தால், அமெ­ரிக்­கா­வில் ஹெச்–1பி விசா வாங்கி வேலை செய்­யும் தக­வல் தொழில்­நுட்ப ஊழி­யர்­கள் கடு­மை­யாக பாதிக்­கப்­ப­டும் அபா­யம் ஏற்­பட்­டுள்­ளது. அமெ­ரிக்­கா­வில் நிரந்த குடி­யு­ரி­மைக்­கான கிரீன் கார்டு வாங்­கு­வ­தற்­காக காத்­தி­ருக்­கும், குறிப்­பாக இந்­தி­யா­வைச் சேர்ந்த ஊழி­யர்­கள், நாடு திரும்­பும் சூழ்­நிலை ஏற்­பட்­டுள்­ளது.

இந்த திட்­டம் அமெ­ரிக்­கா­வில் குடி­யே­றும் வெளி­நாட்­டி­ன­ருக்கு அனு­மதி வழங்­கும், குடி­யு­ரிமை வழங்­கும் துறை­யான உள்­நாட்டு பாது­காப்பு துறை­யின் [Department of Homeland Security (DHS)] நட­வ­டிக்­கைக்­காக அனுப்­பப்­பட்­டுள்­ளது. இதன் நோக்­கம் நிரந்­த­ர­மாக தங்­கு­வ­தற்­கு­ரிய கிரீன் கார்டு பெறு­வ­தற்கு விண்­ணப்­பித்­துள்ள ஹெச்–1பி விசா பெற்­றுள்­ள­வர்­க­ளுக்கு, அவர்­க­ளின் விசா காலத்தை நீடிக்­கா­மல் இருப்­பதே.

அமெ­ரிக்க அதி­பர் தேர்­த­லின் போது டிரம்ப், ‘அமெ­ரிக்க பொருட்­க­ளையே வாங்­கு­வோம், அமெ­ரிக்­கர்­க­ளையே வேலைக்கு அமர்த்­து­வோம்’ என்ற கோஷத்தை முன்­வைத்­தார். இதன் நோக்­கம்  அமெ­ரிக்­கா­வில் உற்­பத்­தியை அதி­க­ரிப்­பது, வேலை வாய்ப்பை அதி­க­ரிப்­பதே. அதி­ப­ராக பத­வி­யேற்ற பிறகு, தேர்­தல் வாக்­கு­று­தி­களை டிரம்ப் நிறை­வேற்ற தொடங்­கி­யுள்­ளார். இந்த திட்­டம் அமல்­ப­டுத்­தப்­பட்­டால், இந்­தி­யா­வைச் சேர்ந்த 5 லட்­சம் முதல் ஏழரை லட்­சம் ஹெச்–1பி விசா­வில் வேலை செய்­ப­வர்­கள் தாய் நாட்­டிற்கு திரும்ப அனுப்­பப்­ப­டு­வார்­கள்.

இந்த திட்­டம் குறித்து ஜான் ஜோஸ் நக­ரத்­தைச் சேர்ந்த ‘இமி­கி­ரே­சன் வாய்ஸ்’ என்ற அமைப்­பைச் சேர்ந்த அதி­காரி கூறு­கை­யில், “இந்த திட்­டம் நடை­மு­றை­ப­டுத்­தப்­பட்­டால், பெரிய அள­வில் வெளி­நாட்­டி­னர் குறிப்­பாக இந்­தி­யர்­கள் திருப்பி அனுப்­பப்­ப­டு­வார்­கள். இத­னால் ஆயி­ரக்­க­ணக்­கான குடும்­பங்­கள் பாதிக்­கப்­ப­டும். இதற்கு தங்­கள் அமைப்பு எல்லா வழி­க­ளி­லும் எதிர்ப்பு தெரி­விப்­ப­து­டன், இந்த திட்­டம் அதி­கார பூர்­வ­மாக அறி­விக்­கப்­ப­டும் போது, இதை எதிர்த்து வழக்கு தொடர இருப்­ப­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

அமெ­ரிக்க தொழில் நுட்ப ஊழி­யர்­க­ளுக்கு வேலை கிடைக்­கும் வகை­யில், அமெ­ரிக்­கா­வில் தங்கி வேலை செய்­யும் இந்­தி­யா­வைச் சேர்ந்த லட்­சக்­க­ணக்­கான ஊழி­யர்­கள், தாங்­க­ளா­கவே வெளி­யேற வாய்ப்பு கொடுப்­பதே, இந்த திட்­டத்­தின் நோக்­கம் என்று உள்­நாட்டு பாது­காப்பு துறை­யைச் சேர்ந்­த­வர்­கள் மெக்­கி­ளாட்சி செய்தி நிறு­வ­னத்­தின் வாஷிங்­டன் டி.சி நிரு­ப­ரி­டம் கூறி­யுள்­ள­னர். இந்த செய்தி நிறு­வ­னம்­தான் டிரம்ப்­பின் திட்­டம் பற்றி முதன் முத­லில் அறி­வித்­தது.

அமெ­ரிக்­கா­வில் தங்கி வேலை செய்ய மூன்று வரு­டங்­க­ளுக்கு ஹெச்–1பி விசா வழங்­கப்­ப­டு­கி­றது. இந்த விசாவை பெற்­ற­வர்­கள், மூன்று வரு­டங்­கள் கழித்து தாய்­நாட்­டிற்கு திரும்பி மீண்­டும் விண்­ணப்­பித்­தால் மேலும் மூன்று வரு­டங்­கள் நீட்­டிக்­கப்­ப­டும். இவர்­கள் கிரீன் கார்­டிற்கு விண்­ணப்­பித்து, அது ஏற்­றுக் கொள்­ளப்­பட்­டால், தாய் நாட்­டிற்கு திரும்­பா­மல் அமெ­ரிக்­கா­வி­லேயே தங்கி காத்­தி­ருக்­க­லாம்.

அமெ­ரிக்­கா­வில் கிரீன் கார்டு விண்­ணப்­பித்­த­வர்­க­ளுக்கு உடனே வழங்­கப்­ப­டு­வ­தில்லை. வரு­டத்­திற்கு ஒவ்­வொரு நாட்­டிற்­கும் எண்­ணிக்­கையை நிர்­ண­யித்து வழங்­கப்­ப­டு­கி­றது. இத­னால் இந்­தி­யா­வைச் சேர்ந்­த­வர்­க­ளின் விண்­ணப்­பம் பல ஆண்­டு­க­ளாக கிடப்­பில் உள்­ளது.

அதி­பர் டிரம்ப் திட்­டத்­தின்­படி, அமெ­ரிக்க உள்­நாட்டு பாது­காப்பு துறை­யின் கீழ் இயங்­கும் அமெ­ரிக்க குடி­யு­ரிமை மற்­றும் குடி­யேற்ற சேவை துறை­யின் [United States Citizenship and Immigration Services (USCIS)] அதி­கா­ரி­க­ளுக்கு கீரீன் கார்­டுக்­காக விண்­ணப்­பித்து காத்­தி­ருப்­ப­வர்­க­ளுக்கு ஹெச்–1பி விசா காலத்தை நீட்­டிக்­கும் அதி­கா­ரம் வழங்­கு­கின்­றது. இந்த அதி­கா­ரி­கள் விசா காலத்தை ஒன்று முதல் மூன்று வரு­டங்­கள் வரை நீட்­டிக்­க­லாம். அதே நேரத்­தில் அதி­க­பட்­ச­மாக மூன்று ஆண்­டு­கள் வரை மட்­டுமே நீட்­டிக்க முடி­யும். அது­மட்­டு­மல்­லால் ஒரு­வ­ருக்கு எத்­தனை முறை வேண்­டு­மென்­றா­லும் நீட்­டிக்­க­லாம் என அதி­கா­ரி­க­ளுக்கு அதி­கா­ரம் வழங்­கு­கின்­றது. இது அதி­கா­ரி­க­ளின் விருப்­பத்தை பொருத்து உள்­ளது. ஆனால் அவர்­கள் கொள்கை ரீதி­யாக விசா காலத்தை நீட்­டிக்க மாட்­டார்­கள் என்று கூறு­கின்­ற­னர்.

அமெ­ரிக்க குடி­யு­ரிமை மற்­றும் குடி­யேற்ற சேவை துறை­யின் அதி­கா­ரி­கள், அதி­பர் டிரம்­பின் திட்­டம் பரி­சீ­ல­னை­யில் உள்­ளதை மறுக்­க­வில்லை. இதன் செய்தி தொடர்­பா­ளர் ஜோனா­தன் விதிங்­டன், மெக்­கி­ளாட்சி செய்தி நிறு­வ­னத்­தின் வாஷிங்­டன் டி.சி நிரு­ப­ரி­டம் “ அதி­பர் டிரம்­பின் அமெ­ரிக்க பொருட்­க­ளையே வாங்­கு­வோம். அமெ­ரிக்­கர்­க­ளையே வேலைக்கு அமர்த்­து­வோம் என்ற உத்­த­ரவு, வேலைக்­கான விசா திட்ட பரி­சீ­ல­னை­யும் உள் அடக்­கி­யதே என்று கூறி­னார்.

முன்­னாள் அதி­பர் பாரக் ஒபாமா, வெளி­நா­டு­க­ளைச் சேர்ந்த உயர் தொழில்­நுட்ப பணி­யா­ளர்­கள், அவர்­கள் சொந்த நாட்­டிற்கு திரும்­பா­மல் அமெ­ரிக்­கா­வி­லேயே தங்கி இருக்க வச­தி­யாக ஹெச்–4இஏடி என்ற விசா முறையை அறி­மு­கப்­ப­டுத்­தி­னார். இதன்­படி ஹெச்–1 பி விசா­வில் உள்ள கிரீன் கார்­டுக்­காக காத்­தி­ருப்­ப­வர்­க­ளின் மனை­வி­கள், குழந்­தை­கள், அமெ­ரிக்­கா­வில் வேலை செய்­வ­தற்கு அனு­மதி வழங்­கு­கின்­றது. அமெ­ரிக்க அதி­பர் டிரம்ப், இந்த ஹெச்–4இஏடி விசா முறையை ரத்து செய்­து­விட்­டார். இத­னால் இந்­தி­யர்­கள் அதிக அள­வில் பாதிக்­கப்­பட்­ட­னர்.

 அமெ­ரிக்க அதி­பர் டிரம்­பின் இந்த நட­வ­டிக்­கையை மத்­திய அரசு உன்­னிப்­பாக கவ­னித்து வரு­கி­றது. இதற்கு முன் அமெ­ரிக்க நிர்­வா­கம், குறைந்த சம்­ப­ளத்­தில் வேலை பார்க்­கும் வெளி­நாட்­டி­ன­ருக்கு பதி­லாக அமெ­ரிக்­கர்­களை வேலைக்கு அமர்த்த வச­தி­யாக ஹெச்.1பி விசா விதி­களை கடு­மை­யாக்க போவ­தாக அறி­வித்­தது.

அமெ­ரிக்க நிர்­வா­கம் ஹெச்–1 பி விசா வழங்க, அதிக உயர் தொழில்­நுட்ப ஊழி­யர்­கள் யார் என்­பதை வரை­யறை செய்ய திட்­ட­மிட்­டுள்­ளது. இந்த திட்­டம் டிரம்­பின் உத்­த­ர­வின் பேரில் செயல்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக பொது­வாக நம்­பப்­ப­டு­கி­றது.

அமெ­ரிக்கா வரு­டத்­திற்கு 85 ஆயி­ரம் ஹெச்–1 பி விசாக்­களை வழங்­கு­கின்­றது. இதில் 65 ஆயி­ரம் விசாக்­கள் வெளி­நாட்­டி­ன­ருக்கு வேலை பார்க்­க­வும், 20 ஆயி­ரம் விசாக்­கள் மேற்­ப­டிப்பு படிப்­ப­தற்­கா­க­வும் வழங்­கு­கின்­றது. வேலை பார்க்க வழங்­கப்­ப­டும் விசாக்­க­ளில் 70 சத­வி­கி­தம் இந்­தி­யர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­வ­தாக மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இவை அமெ­ரிக்க நிறு­வ­னங்­க­ளான மைக்­ரோ­சாப்ட், பேஸ்­புக், கூகுள் போன்ற நிறு­வ­னங்­க­ளில் வேலை பார்க்­க­வும், அமெ­ரிக்­கா­வில் உள்ள இந்­தி­யா­வைச் சேர்ந்த நிறு­வ­னங்­க­ளான டி.சி.எஸ்., இன்­போ­சி­யஸ், விப்ரோ போன்ற நிறு­வ­னங்­க­ளில் வேலை பார்ப்­ப­வர்­க­ளுக்­காக வழங்­கப்­ப­டு­கி­றது.

பேஸ்­புக், பேங்க் ஆப் அமெ­ரிக்கா போன்­றவை வரு­டத்­திற்கு வழங்­கப்­ப­டும் 85 ஆயி­ரம் ஹெச்–1பி விசாவை அதி­க­ரிக்க வேண்­டும் என்று அமெ­ரிக்க அரசை கேட்­டுக் கொண்­டுள்­ளன. ஏனெ­னில் அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த உயர் தொழில்­நுட்ப ஊழி­யர்­கள் பற்­றாக்­கு­றை­யாக உள்­ள­னர். இத­னால் அதிக அளவு வெளி­நா­டு­க­ளைச் சேர்ந்த ஊழி­யர்­கள் தேவைப்­ப­டு­கின்­ற­னர் என்று கூறு­கின்­றன. அதே நேரத்­தில் ஹெச்–1பி விசா கொடுக்க கூடாது என்று வாதி­டு­ப­வர்­கள், “ அமெ­ரிக்க நிறு­வ­னங்­கள் விசா திட்­டத்­தை­யும், அவுட் சோர்­சிங் பணி­க­ளை­யும் தவ­றாக கையாள்­கின்­றன. இத­னால் பல அமெ­ரிக்­கர்­கள் வேலை வாய்ப்பு இழக்­கின்­ற­னர்” என்று குற்­றம் சாட்­டு­கின்­ற­னர்.

அதிக அளவு வெளி­நாட்­டி­னரை வேலைக்கு அமர்த்­தி­யுள்ள அமெ­ரிக்க நிறு­வ­னங்­கள், அமெ­ரிக்க அர­சின் கண்­கா­ணிப்­பில் இருந்து தப்­பித்­து­வி­டு­கின்­றன. ஏனெ­னில் இவை குறிப்­பிட்ட கால­வ­ரை­ய­ரைக்­குள் ஊழி­யர்­களை, அவர்­கள் சொந்த நாட்­டி­லுள்ள கிளை நிறு­வ­னங்­க­ளுக்கு அனுப்­பி­வி­டு­கின்­றன. ஆனால் அமெ­ரிக்­கா­வில் உள்ள இந்­தி­யா­வைச் சேர்ந்த நிறு­வ­னங்­க­ளில் பணி­யாற்­றும் ஹெச்–1பி விசா பெற்ற ஊழி­யர்­கள் கிரீன் கார்­டுக்கு விண்­ணப்­பிப்­ப­தால், இந்­திய நிறு­வ­னங்­கள் அதிக கண்­கா­ணிப்­பிற்கு உள்­ளா­கின்­றன.