பா.ஜ.,வை குறை கூறும் முன்னாள் எம்.பி

பதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2018

நானோ படோல் கோபத்­தில் உள்­ளார். ஒவ்­வொரு கூட்­டத்­தி­லும், அது அர­சி­யல் கூட்­ட­மாக இல்­லா­விட்­டா­லும் கூட, பார­திய ஜன­தா­வைச் சேர்ந்த இந்த முன்­னாள் மகா­ராஷ்­டிரா எம்.பி, பா.ஜ.,வை விமர்­சித்து வரு­கி­றார். பிர­த­மர் நரேந்­திர மோடி, மகா­ராஷ்­டிரா முதல்­வர் தேவேந்­திர பட்­னா­விஸை குறை கூறு­கி­றார். மத்­திய, மாநில அர­சு­களை அகற்­றியே தீரு­வேன் என்று சப­தம் ஏற்­கி­றார். நானோ படோல் வாய் வார்த்­தை­யு­டன் நிற்­கா­மல், செய­லி­லும் இறங்க உள்­ளார். ‘பச்­சா­தாப் யாத்­திரை’ என்ற பெய­ரில் (paschataap yatra) புல்­தானா மாவட்­டம் சின்­கேட் ராஜா என்ற இடத்­தில் இருந்து பந்­தரா மாவட்­டம் சகோலி வரை 800 கி.மீட்­ட­ருக்­கும் அதி­க­மாக யாத்­திரை செல்ல உள்­ளார். இந்த யாத்­தி­ரை­யின் போது பிற்­ப­டுத்­தப்­பட்­டோர், விவ­சா­யி­கள் சந்­திக்­கும் பிரச்­னை­களை பற்றி பேச உள்­ளார். “நான் முத­லில் விதர்பா பிர­தே­சத்­தில் யாத்­திரை செல்ல உள்­ளேன். பிறகு இதே போன்ற யாத்­தி­ரையை மராத்­வாடா பிர­தே­சம், மற்ற பிர­தே­சங்­க­ளி­லும் செல்ல உள்­ளேன். இதன் மூலம் மாநி­லம் முழு­வ­தும் உள்ள மக்­களை சந்­திக்க உள்­ளேன்” என்று கூறு­கின்­றார் நனா படோல்.

நானோ படோல் சென்ற லோக்­சபா தேர்­த­லின் போது பண்­டா­ரா–­­கோண்­டி­யா­வில் தொகு­தி­யில் இருந்து பா.ஜ., சார்­பாக போட்­டி­யிட்டு வெற்றி பெற்­ற­வர். இவரை எதிர்த்து போட்­டி­யிட்ட தேசி­ய­வாத காங்­கி­ரஸ் கட்­சி­யின் மூத்த தலை­வ­ரான பிர­புல் படேலை சுமார் ஒன்­றரை லட்­சம் வாக்கு வித்­தி­யா­சத்­தில் தோற்­க­டித்­த­வர். ஆனால் சென்ற டிசம்­பர் 8ம் தேதி நனா படோல், பார­திய ஜன­தா­வில் இருந்­தும், லோக்­ச­பா­வில் இருந்­தும் ராஜி­னாமா செய்து விட்­டார். இதற்கு அவர் அரசு விவ­சா­யி­கள் பிரச்­னை­யில் பார­மு­க­மாக உள்­ளது என்­பது உட்­பட 14 கார­ணங்­களை கூறி­னார். “நான் கூட்­டத்­தில் பிற்­ப­டுத்­தப்­பட்­டோர், விவ­சா­யி­கள் பிரச்­னையை பற்றி எடுத்­துக் கூறிய போது பிர­த­மர் நரேந்­திர மோடி ஹிட்­லர் போன்ற மனோ­பா­வத்­தில் இருந்­தார். நான் மன­மு­டைந்து விட்­டேன். இது­தான் தொடக்­கம்” என்று கூறி­னார்.

2004ல் விவ­சா­யி­க­ளின் பிரச்­னையை பற்றி ஆராய்­வ­தற்­காக எம்.எஸ்.சுவா­மி­நா­தன் கமி­ஷன் அமைக்­கப்­பட்­டது. நரேந்தி மோடி அரசு, எம்.எஸ்.சுவா­மி­நா­தன் கமி­ச­னின் பரிந்­து­ரையை அமல்­ப­டுத்­தாத கார­ணத்­தி­னால், விவ­சா­யி­க­ளின் தற்­கொலை 43 சத­வி­கி­தம் அதி­க­ரித்­துள்­ளது.சென்ற லோக்­சபா தேர்­த­லின் போது யாத்­மா­லில் பிர­சா­ரம் செய்த போது நரேந்­திர மோடி, எம்.எஸ்.சுவா­மி­நா­தன் கமி­ஷ­னின் பரிந்­து­ரையை அமல்­ப­டுத்­து­வோம் என்று வாக்­கு­று­தி­ய­ளித்­தார். ஆனால் ஆட்­சிக்கு வந்த பிறகு பா.ஜ., அரசு சுப்­ரீம் கோர்ட்­டில் சுவா­மி­நா­தன் கமி­ஷன் பரிந்­து­ரையை அமல்­ப­டுத்த முடி­யாது என்று அபி­ட­விட் மூலம் தெரி­வித்­தது. நான் கட்சி தலை­மை­யி­டம், நாம் செய்­வது முற்­றி­லும் தவறு என கூறி­னேன் என்று நானோ படோல் தெரி­வித்­தார்.

மக்­கள் எதிர்­பார்ப்­பதை நிறை­வேற்ற முடி­யா­விட்­டால், ஒரு­வர் அதி­கா­ரத்­தில் தொடர்­வது தவறு என்று நினைத்த கார­ணத்­தால் பத­வி­யில் இருந்து ராஜி­னமா செய்­தேன் என்று கூறும் நானோ படோல், “மக்­கள் எதிர்­பார்ப்­பதை என்­னால் நிறை­வேற்ற முடி­யா­விட்­டால், எனக்கு இந்த அதி­கா­ரம் வேண்­டாம்” என்று அவர் கூறு­கி­றார்.

இப்­போது நானோ படோல் பங்­கேற்­கும் கூட்­டங்­க­ளில், நரேந்­திர மோடி கான்சி என்ற ஜாதியை சேர்ந்­த­வர். குஜ­ராத் முதல்­வ­ராக நரேந்­திர மோடி பத­வி­யேற்ற பிறகே, அவர் சார்ந்த கான்சி ஜாதி, பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் பட்­டி­ய­லில் சேர்க்­கப்­பட்­டது. “குஜ­ராத்­தில் இந்த ஜாதி (சான்சி) மற்ற பிற்­ப­டுத்­தப்­பட்ட ஜாதியை போல் கரு­தப்­ப­டு­வ­தில்லை. நீங்­கள் இதை (சான்சி ஜாதியை) பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் பட்­டி­ய­லில் சேர்த்­தால், நீங்­கள் உண்­மை­யி­லேயே பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் சமு­தா­யத்­தின் மேம்­பாட்­டிற்­காக ஆர்­வம் காண்­பித்து, அவர்­க­ளின் பிரச்­னை­க­ளுக்கு தீர்வு காண வேண்­டும். நீங்­கள் இவ்­வாறு செய்­யா­விட்­டால், நீங்­கள் பாசாங்­கான பிற்­ப­டுத்­தப்­பட்­ட­வர் என்று நரேந்­திர மோடியை, நானோ பாடோல் விமர்­சிக்­கி­றார். நான் 2014ல் பா.ஜ.,வில் சேரும் போது (முன்பு இவர் காங்­கி­ரஸ் கட்­சி­யில் இருந்­தார்), பிற்­ப­டுத்­தப்­பட்­டோ­ரின் வளர்ச்­சிக்­காக தனி­யாக மத்­தி­யில் பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் நல அமைச்­ச­கம் அமைக்க வேண்­டும் என்று ஒப்­பந்­தம் ஏற்­பட்­டது. ஆனால் ஆட்­சி­யில் அமர்ந்த பிறகு, நரேந்­திர மோடி­யும், மூத்த அமைச்­சர்­க­ளும் இதற்கு எதிர்ப்பு தெரி­வித்­தது அதிர்ச்சி அளித்­தது. இது நம்­பிக்கை துரோ­கம் என்று நானோ படோல் தெரி­வித்­தார்.

அவர் மேலும் கூறு­கை­யில், மகா­ராஷ்­டி­ரா­வில் பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் அமைச்­ச­கம் வெட்­கப்­ப­டும்­ப­டி­யாக உள்­ளது. இதற்கு போதிய நிதி ஒதுக்­கப்­ப­டு­வ­தில்லை. இந்த அமைச்­ச­கத்தை யாருக்கு ஒதுக்க வேண்­டுமோ, அவ­ருக்கு ஒதுக்­கப்­ப­டு­வ­தில்லை என்­றார். “முத­ல­மைச்­சர் பட்­னா­விஸ் எப்­போ­தும் பிற்­ப­டுத்­தப்­பட்­டோர், விவ­சா­யி­க­ளுக்கு எதி­ரான நிலையை எடுப்­ப­தையே பார்த்­துள்­ளேன். அவ­ரது நட­வ­டிக்­கை­களே இதை காட்­டு­கி­றது. நீங்­கள் அவ­ரி­டம் என்ன செய்ய வேண்­டும் என்று கூறு­கின்­றீர்­களோ, அதற்கு எதி­ரா­கவே அவர் செய்­வார். இதுவே அவ­ரி­டம் உள்ள பிரச்னை” என்று நானோ படோல் கூறி­னார்.

மகா­ராஷ்­டி­ரா­வில் பா.ஜ.,வின் மூத்த தலை­வ­ரான ஏக்­நாத் கட்­சேக்கு எதி­ராக சில பா.ஜ.,தலை­வர்­கள் சதி செய்து, அவரை ஒதுக்கி விட்­ட­தாக பல­மாக நம்­பு­கின்­றேன் என்று கூறும் நானோ படோல், மகா­ராஷ்­டி­ரா­வில் கோபி­நாத் முன்­டே­வும், ஏக்­நாத் கட்­சே­யுமே உண்­மை­யான தலை­வர்­கள். ஏக்­நாத் கட்சே முத­ல­மைச்­ச­ராக வர வேண்­டி­ய­வர். அவர் மீது பொய்­யான ஊழல் குற்­றச்­சாட்டை சுமத்தி விட்­ட­னர். கோபி­நாத் முன்டே உயி­ரு­டன் இருந்­தி­ருந்­தால், அவரே முத­ல­மைச்­ச­ராக வந்­தி­ருப்­பார். அவர் மறைந்து விட்­ட­தால், ஏன் ஏக்­நாத் கட்­சேவை முத­ல­மைச்­ச­ராக்­க­வில்லை என்று கேட்­கி­றார் நானோ படோல். நரேந்­திர மோடி செயல்­ப­டும் விதத்தை பார்த்து பல மூத்த தலை­வர்­கள் கோபத்­தில் உள்­ள­னர். எல்.கே.அத்­வானி, யஷ்­வந்த் சின்கா மட்­டு­மல்ல, பல தலை­வர்­கள் அர­சுக்கு எதி­ராக கருத்து தெரி­விப்­பார்­கள் என்று கூறும் நானோ படோல், அரசு செயல்­ப­டும் விதத்­தில் வெறுப்­பாக இருக்­கும் தலை­வர்­கள், கூடிய விரை­வில் வெளிப்­ப­டை­யாக பேச தொடங்­கு­வார்­கள் என்று கூறு­கின்­றார்.

மகா­ராஷ்­டி­ரா­வில் கடோல் தொகுதி பா.ஜ., சட்­ட­மன்ற உறுப்­பி­னர் அஸ்­விஸ் தேஷ்­முக், சமீ­பத்­தில் அர­சுக்கு எதி­ரான நிலைப்­பட்டை எடுத்­தி­ருப்­பதை நானோ படோல் சுட்­டிக்­காட்­டு­கின்­றார். அஸ்­விஸ் தேஷ்­முக் சமீ­பத்­தில் முத­ல­மைச்­சர் பட்­னா­விஸ்க்கு ஏழு பக்க கடி­தத்தை எழு­தி­யுள்­ளார். அதில் உட­ன­டி­யாக கவ­னிக்க வேண்­டி­யவை என விதர்பா பிர­தே­சத்தை தனி மாநி­ல­மாக அறி­விப்­பது உட்­பட பல்­வேறு விஷ­யங்­களை எழு­தி­யுள்­ளார். நாக்­பூ­ரில் ஆர்.எஸ்.எஸ் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­காக பயிற்சி பட்­ட­றையை நடத்­தி­யது. அப்­போது அஸ்­விஸ் தேஷ்­முக் நாக்­பூ­ரில் இருந்­தும் கூட, அந்த பயிற்சி பட்­ட­றை­யில் பங்­கேற்­க­வில்லை. அதே நேரத்­தில் அவர் தேசி­ய­வாத காங்­கி­ரஸ் மூத்த தலை­வர் அஜித் பவாரை சந்­தித்து பேசி, அவ­ரு­டன் சட்­ட­ச­பைக்கு வந்­தார்.

மகா­ராஷ்­டிரா அர­சுக்கு எதி­ராக மூத்த தலை­வர் ஏக்­நாத் காட்­சே­யும் குரல் எழுப்­பி­யுள்­ளார். 2016ல் அவர் மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டால், வரு­வாய் துறை அமைச்­சர் பத­வி­யில் இருந்து விலக வேண்­டி­ய­தி­ருந்­தது. இதில் கவ­னிக்க வேண்­டிய விஷ­யம் சமீ­பத்­தில் ஏக்­நாத் காட்சே தேசி­ய­வாத காங்­கி­ரஸ், காங்­கி­ரஸ் கட்சி தலை­வர்­க­ளு­டன் நிகழ்ச்­சி­யில் பங்­கேற்­றார். மகா­ராஷ்­டிர காங்­கி­ரஸ் தலை­வர் அசோக் சவான், “ஏக்­நாத் காட்சே போன்ற மூத்த தலை­வர்­களை, தனது கட்சி வர­வேற்­ப­தாக” கூறி­யுள்­ளார். நானோ படோலை காங்­கி­ரஸ் வர­வேற்­கி­றது என்­றும் கூறி­யுள்­ளார்.

குஜ­ராத்­தில் நான் ராகுல் காந்­தி­யு­டன் பொதுக்­கூட்­டத்­தில் கலந்து கொண்­டேன். இப்­போது நரேந்­திர மோடி அரசை அகற்­று­வதே எனது நோக்­கம். நான் ராகுல் காந்­தி­யி­டம் பேசும் போது, நமது நாட்­டிற்கு இந்­திரா காந்­தி­யும், ராஜீவ் காந்­தி­யும் நிறைய செய்­துள்­ள­னர். ஒரு கூட்­டத்­தில் பா.ஜ., தலை­வர் அமித் ஷா கூறி­ய­தை­யும் தெரி­வித்­தேன். அவர் (அமித் ஷா) அந்த கூட்­டத்­தில், காங்­கி­ரஸ் எல்லா வளர்ச்சி பணி­க­ளை­யும் செய்­துள்­ளது. மக்­கள் உண்­மை­யில் வளர்ச்­சியை விரும்­பி­னால், மக்­கள் காங்­கி­ரஸ் கட்­சியை ஆட்­சி­யில் நீடிக்க செய்ய வேண்­டும் என்று கூறி­யதை தெரி­வித்­தேன். நான் எழுப்­பி­யுள்ள பிரச்­னை­க­ளில் சம்­ம­தம் தெரி­வித்­தால், அவ­ரு­டன் இணைந்து பணி­யாற்­று­வ­தில் மகிழ்ச்சி அடை­வேன். அவர் சம்­ம­தித்­தால் நாம் மத்­தி­யி­லும், மாநி­லத்­தி­லும் மீண்­டும் காங்­கி­ரஸ் ஆட்­சியை கொண்­டு­வர அய­ராது பாடு­ப­டு­வோம் என்று ராகுல் காந்­தி­யி­டம் தெரி­வித்­தேன் என்று கூறிய நானோ படோல், அவர் சம்­ம­திக்­கா­விட்­டால், நான் எனது கட்­சியை தொடங்­கு­வேன் என்­றும் கூறி­னார்.

நன்றி தி வீக் வார இத­ழில் தியா­னேஷ் ஜாட்­கர்