சிக்கலாகும் தீஸ்தா நதி நீர் பிரச்னை

பதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2018

இந்­தி­யா­வுக்­கும்–­­வங்­கா­ள­தே­சத்­திற்­கும் இடையே உள்ள தீஸ்தா (Teesta) நதி நீர் பகிர்வு பிரச்­னைக்கு தீர்வு காணப்­ப­டா­மல் உள்­ளது. இப்­போது வங்­காள தேசம் கங்­கா–­­பத்மா நதி­க­ளின் ஓட்­டத்தை சேதப்­ப­டுத்­தி­யது, தீஸ்தா நதி நீர் பிரச்­னைக்கு தீர்வு காண்­பதை மேலும் சிக்­க­லாக்­கி­யுள்­ளது. இது தொடர்­பாக பிர­த­மர் நரேந்­திர மோடி­யி­டம், சென்ற வரு­டம் மே மாதம் மேற்கு வங்க முதல்­வர் மம்தா பானர்ஜி பிரச்­னையை எடுத்­துக் கூறி­யுள்­ளார். தீஸ்தா நதி நீர் குறித்த பேச்­சு­வார்த்தை நடக்க வேண்­டும் எனில் வங்­கா­ள­தே­சம் மாதா­பங்கா நதி மாசு­பட்­டுள்­ளதை சுத்­தப்­ப­டுத்த வேண்­டும் என்று வலி­யு­றுத்­தும்­படி கூறி­யுள்­ளார். பத்மா நதி­யின் கிளை நதி­யான மாதா­பங்கா நதி, இந்­தி­யா­வில் மேற்கு வங்­கத்­தில் நாய்டா மாவட்­டத்­தில் கீடி என்ற இடத்­தில் நுழை­கி­றது. இங்­கி­ருந்து 19 கி.மீட்­ட­ருக்கு அப்­பால் சுர்னி (Churni), இச்­ஹே­மாதி என இரண்டு நதி­க­ளாக பிரி­கி­றது. பிறகு 53 கி,மீட்­டர் பாய்ந்து, பகீ­ரதி ஹூக்ளி நதி­யில் கலக்­கி­றது. பகீ­ரதி ஹூக்ளி நதி, கங்கை நதி என்று அழைக்­கப்­ப­டு­கி­றது.

வங்­கா­ள­தே­சத்­தில் தர்­சனா என்ற இடத்­தில் தனி­யார் சர்க்­கரை ஆலை­யும், எரி­சா­ராய ஆலை­யும் அமைந்­துள்­ளன. இந்த ஆலை­க­ளில் இருந்து சுத்­தி­க­ரிக்­கப்­ப­டாத ரசா­யண கழி­வு­கள் மாதா­பங்கா நதி­யில் கொட்­டப்­ப­டு­கி­றது. மாதா­பங்கா நதி­யில் சர்க்­கரை ஆலை, எரி­சா­ராய ஆலை­க­ளில் கொட்­டப்­ப­டும் சுத்­தி­க­ரிக்­கப்­ப­டாத ரசா­யண கழி­வு­க­ளால், மேற்கு வங்­கத்­தில் 72 கீ.மீட்­டர் பாயும் மாதா­பங்கா நதி­யின் கிளை நதி­கள் பயன்­ப­டா­மல் போய்­விட்­டது. இத­னால் இந்த நதி கரை­க­ளில் அமைந்­துள்ள 120 மீனவ கிரா­மங்­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. மீன­வர்­க­ளின் வாழ்­வா­தா­ரம் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த மீனவ கிரா­மத்­தைச் சேர்ந்த மீன­வர் பாசு­தேவ் ஹால்­டர், நதி மாசு பட்­டுள்­ள­தால் மீன்­கள் இறந்து விட்­டன. மாதா­பங்கா நதி­யில் இருந்து முன்பு இறால் மீன் பிடித்து மாதத்­திற்கு ரூ.20 ஆயி­ரம் வரை வரு­மா­னம் கிடைத்து வந்­தது. இப்­போது மாதத்­திற்கு ரூ.4 ஆயி­ரம் தான் கிடைக்­கின்­றது என்று தெரி­வித்­தார். இவரை போன்று மீனவ கிரா­மத்­தைச் சேர்ந்த் பாரம்­ப­ரிய மீன­வர்­கள் வாழ்க்கை நடத்­து­வ­தற்கே கஷ்­டப்­ப­டு­கின்­ற­னர். பாசு­தேவ் ஹால்­டர் போன்ற மீன­வர்­கள் மீன்­பிடி தொழிலை கைவிட்டு, வயல்­க­ளில் கூலி வேலைக்கு செல்­லும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. அத்­து­டன் வங்­கா­ள­தே­சத்­தில் மாதா­பங்கா நதி­யில் ரசா­யண கழி­வு­கள் கொட்­டப்­பட்­ட­தால், அவை இந்­தி­யா­வில் இந்த நதி பாயும் பகு­தி­க­ளி­லும் படிந்து நிலத்­தடி நீரும் கெட்­டுப்­போ­யுள்­ளது.

இந்த பிரச்­னையை 2007ல் மாதா­பங்கா மற்­றும் சுர்னி நதி மீட்பு குழு எடுத்­து­ரைத்­தது. இப்­போ­து­தான் இந்த பிரச்­னையை மம்தா பானர்ஜி கையில் எடுத்­துள்­ளார். இதற்கு கார­ணம் தீஸ்தா நதி நீர் பங்­கீட்டு பிரச்னை காலம் தாழ்த்­து­வ­தற்கே என்று கூறு­கின்­ற­னர்.  மாதா­பங்கா மற்­றும் சுர்னி நதி மீட்பு குழு, வங்­க­ளா­தே­சத்­து­டன் தூத­ரக வாயி­லாக பேசி, இந்த நதி நீர் மாசு பிரச்­னைக்கு தீர்வு காணு­மாறு பிர­த­மர் அலு­வ­ல­கத்­திற்கு மக­ஜர் அனுப்­பி­னார்­கள். இதற்கு முன் நதி மீட்பு குழு­வி­னர், பசுமை தீர்ப்­பா­யத்­தில் வழக்கு தொடர்ந்­த­னர். பசுமை தீர்ப்­பா­யம் இந்த பிரச்­னையை வங்­கா­ள­தே­சத்­து­டன் பேசு­மாறு மத்­திய அர­சுக்கு ஆணை­யிட்­டது. மத்­திய அரசு எவ்­வித முயற்­சி­யி­லும் ஈடு­ப­ட­வில்லை. இத­னால் .  மாதா­பங்கா மற்­றும் சுர்னி நதி மீட்பு குழு, பசுமை தீர்ப்­பா­யத்­தின் ஆணையை சுட்­டிக்­காட்டி நேர­டி­யாக வங்­கா­ள­தேச பிர­த­மர் ஷேக் ஹசி­னா­விற்கு கடி­தம் எழு­தி­யது. காலம் கடந்­தா­வது மம்தா பானர்ஜி நதி நீர் பிரச்­னையை கையில் எடுத்­துக் கொண்­டுள்­ளார். இத­னால் வங்­காள தேசம் அணை­களை கட்­டு­வ­தால் மதா­பங்கா, சுர்னி, அட்­டிரி, புனார்பா, டாங்­கோன் ஆகிய நதி­க­ளில் வரும் தண்­ணீர் குறை­வ­தற்கு தீர்வு ஏற்­ப­டும் என்று நதி தொடர்­பான நிபு­ணர்­கள் கரு­து­கின்­ற­னர்.

இந்த வரு­டம் வங்­கா­ள­தே­சத்­தில் பார்­லி­மென்ட் தேர்­தல் நடை­பெற உள்­ளது. அதற்­குள் தீஸ்தா நதி நீர் பகிர்வு பிரச்­னைக்கு, இந்­தி­யா­வு­டன் தீர்வு கண்­டு­விட வேண்­டும் என்று வங்­கா­ள­தேச பிர­த­மர் ஷேக் ஹசீனா கரு­து­கின்­றார். அவ­ருக்கு நெருக்­க­மா­ன­வர்­கள் மம்தா பானர்­ஜிக்கு எவ்­வித அக்­க­றை­யும் இல்லை என்று கூறு­கின்­ற­னர். நதி நீர் பிரச்னை மட்­டு­மல்­லாது வங்­கா­ள­தே­சத்­திற்­கும், மேற்கு வங்­கத்­திற்­கும் இடையே பல்­வேறு பிரச்­னை­கள் உள்­ளன. 2012ல் இருந்து வங்­கா­ளி­கள் அதி­கம் விரும்­பும் ‘ஹில்சா’ மீனை வங்­கா­ள­தே­சம், மேற்கு வங்­கத்­திற்கு ஏற்­று­மதி செய்­வ­தற்கு தடை விதித்து விட்­டது. அத்­து­டன் மேற்கு வங்­கத்­தில் இருந்து இறக்­கு­மதி செய்­யும் மாம்­ப­ழத்­திற்கு வரியை இரு மடங்­காக அதி­க­ரித்­து­விட்­டது. வங்­கா­ள­தே­சம் கங்கை நதி­யில் இருந்து விடு­விக்­கும் தண்­ணீரை குறைப்­ப­தால், மேற்கு வங்­கத்­தில் பராக்கா அணை­யில் தண்­ணீர் திறந்­து­விட முடி­யா­மல் அடிக்­கடி நீர்­மின் உற்­பத்தி நிலை­யத்தை மூட வேண்­டி­ய­துள்­ளது.

மாதா­பங்கா மற்­றும் சுர்னி நதி மீட்பு குழு செய­லா­ளர் சுவா­பன் பவுக்­மிக், “மாதா­பங்கா, சுர்னி நதி நீர் பிரச்­னை­யு­டன் மம்தா பானர்ஜி தீஸ்தா நதி நீர் பகிர்வு பிரச்­னை­யும் இணைத்­தி­ருப்­பது நல்ல முயற்சி. வங்­கா­ள­தே­சம் தீஸ்தா நதி நீரை விரும்­பி­னால், அது வங்­காள தேசத்­தில் இருந்து மேற்கு வங்­கத்­திற்கு வரும் மற்ற நதி­க­ளி­லும் அக்­கறை செலுத்த வேண்­டும் என்று அவர் கூறி­னார். இந்த முயற்சி மம்தா பானர்­ஜிக்கு நாய்டா, வட மேற்கு வங்­கத்­தில் அர­சி­யல் ரீதி­யா­க­வும் பலனை கொடுக்­கும் என்று அர­சி­யல் பார்­வை­யா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

நன்றி: இந்­தியா டுடே வார

இத­ழில் ரோமிடா தத்தா.