மணமகனை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம்

பதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2018

திரு­ம­ணம் சொர்க்­கத்­தில் நிச்­ச­யிக்­கப்­ப­டு­கின்­றது என்று கூறு­வார்­கள். பெண்ணை கடத்­திக் கொண்டு போய் திரு­ம­ணம் செய்­வ­தை­தான் கேள்­விப்­பட்­டுள்­ளோம். ஆனால் பீகா­ரில் மண­ம­கனை கடத்தி துப்­பாக்கி முனை­யில் திரு­ணம் செய்­யப்­பட்­டுள்­ளது.  

பீகா­ரில் ‘பக்தூ விவாக்’ (Pakdau Vivah) அதா­வது மண­ம­கனை கடத்தி திரு­ம­ணம் என்ற முறை உள்­ளது. நல்ல படித்த பணக்­கார மாப்­பிள்­ளையை தேடும், வர­தட்­சனை கொடுக்க முடி­யாத பெண் வீட்­டாரே, மண­ம­கனை கடத்தி நிர்ப்­பந்­த­மாக மண­ம­க­ளின் கழுத்­தில் தாலி கட்­ட­வைக்­கின்­ற­னர்.

இந்த பக்தூ விவாக் முறைக்கு சமீ­பத்­தில் பலி­யா­ன­வர் பாட்­னா­வைச் சேர்ந்த வினோத் குமார் என்ற இளை­ஞர். பொகாரா இரும்பு தொழிற்­சா­லை­யில் இன்­ஜி­னி­ய­ராக பணி­பு­ரி­யும் வினோத் குமார்,  நாலந்தா மாவட்­டத்­தில் நடை­பெற்ற ஒரு திரு­ம­ணத்­திற்கு சென்று இருந்­தார். அங்கு சிலர் அவ­ரு­டன் அன்­னி­யோன்­ய­மாக பேச்சு கொடுத்­த­னர். எங்­க­ளு­டன் வெளியே வா என்று அழைத்­துச் சென்று, வினோத் குமாரை பாட்­னா­வுக்கு அருகே உள்ள பன்­ட­ராக் என்ற கிரா­மத்­திற்கு கடத்தி சென்று விட்­ட­னர். அவர் எவ்­வ­ளவோ கெஞ்­சி­யும், அழு­தும் விடா­மல் மண­ம­கள் வீட்­டார் அடித்து துன்­பு­றுத்தி துப்­பாக்கி முனை­யில் மண­ம­கள் முன்­நெற்­றி­யில் கும்­கு­மம் வைக்க வைத்து திரு­ம­ணம் செய்து விட்­ட­னர்.  

“அவர்­கள் என்னை கடத்தி ஒரு வீட்­டில் அடைத்து நான் முன்­பின் பார்த்­தி­ராத ஒரு பெண்­ணின் முன் நெற்­றி­யில் குங்­கு­மம் வைக்க வைத்து விட்­ட­னர். அந்த பெண் யார் என்­றும் எனக்கு தெரி­யாது” என்று பரி­தா­ப­மாக வினோத் குமார் தெரி­வித்­தார்.

வினோத் குமார் நடந்த சம்­ப­வத்தை விளக்கி போலீ­சில் புகார் தெரி­வித்­துள்­ளார். போலீ­சார் தலை­யிட்டு வினோத் குமாரை மீட்­டுள்­ள­தாக அவ­ரின் சகோ­த­ரர் சஞ்­சய் குமார் தெரி­வித்­தார்.