தொழில்: பிச்சை எடுத்­தல் மனை­வி­கள்: மூன்று வரு­மா­னம்: ரூ.4 லட்­சம்

பதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2018

நமது நாட்­டில் லட்­சக்­க­ணக்­கான பிச்­சைக்­கா­ரர் கள் தின­மும் பிச்­சை­யெ­டுத்து வாழ்­கின்­ற­னர். நம்­மி­டம் கையேந்தி சாப்­பாட்­டிற்கு வழி­யில்லை என பிச்சை கேட்­கும் போது, நாமும் பையை துழாவி கையில் கிடைத்த காசை கொடுக்­கின்­றோம். அதே நேரத்­தில் தொழில் முறை பிச்­சைக்­கா­ரர்­க­ளும் உள்­ள­னர். நீங்­கள் நம்­பி­னா­லும் சரி, நம்­பா­விட்­டா­லும் சரி, இவர்­கள் நம்­மை­விட பணக்­கா­ரர்­க­ளாக உள்­ள­னர்.

ஜார்­கண்ட் மாநி­லத்­தைச் சேர்ந்­த­வர் சோட்டு பாரிக் (40). இரண்டு கால்­க­ளும் ஊன­முற்ற சோட்டு பாரிக், பிச்­சை­யெ­டுத்தே  மாதம் ரூ.30 ஆயி­ரம் சம்­பா­திக்­கின்­றார். இவரை சக்­க­ர­தா­பூர் ரயில் நிலை­யத்­தில் பார்க்­க­லாம். அனே­க­மாக எல்லா ரயில்­க­ளி­லும் பிச்சை எடுப்­பார். பிச்சை எடுப்­பது முழு நேர தொழி­லாக இருந்­தா­லும், அத்­து­டன் வெஸ்­டிஜ் என்ற நிறு­வ­னம் தயா­ரிக்­கும் சோப்பு போன்ற அன்­றாட பயன்­பாட்­டுப் பொருட்­க­ளின் விநி­யோ­க ஸ்­த­ரா­வும் உள்­ளார். இந்த நிறு­வ­னம் நேரடி விற்­பனை மூலம் பொருட்­களை விற்­பனை செய்­கின்­றது. இதன் விநி­யோ­கஸ்­த­ரான சோட்டு பாரிக் வெஸ்­டிஜ் நிறு­வ­னத்­தின் பொருட்­களை விற்­பனை செய்­வ­தற்கு உரிய உறுப்­பி­னர் அட்டை விநி­யோ­கத்­தை­யும், பொருட்­கள் விநி­யோ­கத்­தை­யும் செய்­கின்­றார்.

இத்­து­டன் தொழில்­முறை பிச்­சைக்­கா­ர­ரான சோட்டு பாரிக் நின்­று­வில்லை. டெய்லி பாஸ்­கர் என்ற நாளி­த­ழின் செய்­தி­யின்­படி, சிம்­டிகா மாவட்­டம் பண்டி என்ற கிரா­மத்­தில் இவ­ருக்கு பாத்­தி­ரக்­க­டை­யும் சொந்­த­மாக உள்­ளது. இந்த பாத்­தி­ரக்­க­டையை , இவ­ரது மூன்று மனை­வி­க­ளில் ஒரு மனைவி கவ­னித்­துக் கொள்­கின்­றார். அத்­து­டன் மூன்று மனை­வி­க­ளுக்­கும் மாதா மாதம் குறிப்­பிட்ட அளவு பணத்­தை­யும் குடும்ப செல­வுக்­காக கொடுக் கின்றார்.

பிறக்­கும் போதி­ருந்தே ஊன­மாக பிறந்த சோட்டு பாரிக் சாப்­பாட்­டிற்­காக தின­மும் மிக­வும் கஷ்­டப்­பட்­டார். ஆனால் அவர் பிச்­சை­யெ­டுக்க ஆரம்­பித்­த­வு­டன் நாட்­பட நாட்­பட, அவ­ரது தின­சரி வரு­மா­னம் ஆயி­ரம் ரூபாய் முதல் ஆயி­ரத்து இரு­நூறு ரூபா­யாக அதி­க­ரித்­தது. இத்­து­டன் வெஸ்­டிஜ் நிறு­வ­னத்­தின் விநி­யோ­கஸ்­தர், பாத்­தி­ரக்­கடை ஆகி­ய­வற்­றின் வரு­மா­னத்­தை­யும் சேர்த்­தால் வரு­டத்­திற்கு நான்கு லட்­சம் ரூபாய் வரு­வாய் கிடைப்­ப­தாக கூறு­கின்­றார், இந்த தொழில் முறை பிச்­சைக்­கா­ர­ரான சோட்டு பாரிக்.