இந்தியாவில் 2017ம் நிதியாண்டில் வீடு விற்பனை 17 சதவீதம் சரிவு

பதிவு செய்த நாள் : 12 ஜனவரி 2018 02:52

புது டில்லி,

கடந்த 2017ம் ஆண்டில் இந்தியாவின் 9 பெரு நகரங்களில் வீடு விற்பனை 17 சதவீதம் சரிந்துள்ளது என ரியலிட்டி போர்ட்டல் ப்ராப் டைகர் (PropTiger) என்ற இணையதளத்தின் ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. 

ரியல் எஸ்டேட்டில் புதிய சட்டம் மற்றும் தேவைக் குறைவு போன்ற காரணங்களால் இந்தியாவின் உள்ள குர்கான், நொய்டா, மும்பை, பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, புனே, ஐதராபாத் மற்றும் அகமதாபாத் ஆகிய 9 முக்கிய பெரு நகரங்களில் 2017ஆம் ஆண்டில் 2,18,500 வீடுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன். இது கடந்த 2016ம் ஆண்டில் 2,63,500 வீடுகள் விற்பனையாகியுள்ளது என ப்ராப் டைகர் இணையதளம் அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் 2017ம் ஆண்டு அடிக்குமாடி வீடுகள் விற்பனை திட்டங்களின் துவக்கம் கூட 43 சதவீதம் சரிவடைந்தது.

1,63,573 வீடுகளுக்கான  விற்பனைத் திட்டங்கள மட்டுமே துவக்கப்பட்டுள்ளன. கடந்த 2016ம் ஆண்டில் ஆண்டில் 2,88,748 வீடுகளுக்கான துவக்க விழாக்கள் நடந்தன.   கடந்த 2017ம் ஆண்டு இந்தியாவின் 8 பெரு நகரங்களில் வீடுகள் விற்பனை 7 சதவீதமும், வீடுகள் கட்டுதல் 41 சதவீதமும் சரிந்துள்ளது என நைட் பிராங்க் நிறுவனம் (knight Frank) நேற்று தெரிவித்துள்ளது.

அடிக்குமாடி வீடுகள் விற்பனை 35 சதவீதம் குறைந்துள்ளதாக கஷ்மேன் & வேக்ஃபீல்ட் ரியல் எஸ்டேட்டில் சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

குர்கான் மற்றும் ஐதராபாத் ஆகிய இரண்டு நகரங்களில் மட்டும் வீடு விற்பனை அதிகரித்துள்ளதாக ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

ஜி.எஸ்.டி அமலுக்கு வந்த பின் வீடு விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ப்ராப் டைகர் (PropTiger.com) என்ற இணையதளத்தின் தலைமை முதலீட்டு அதிகாரி அன்கூர் தவான் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு 2017ல் அகமதாபாத் நகரில் வீடு விற்பனை 33 சதவீதம் சரிந்து, 12,000 வீடுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. புனேவில் 32 சதவீதம் சரிந்து 34,000 வீடுகளும், நொய்டாவில் 30 சதவீதம் சரிந்து 16,000 வீடுகளும், பெங்களூருவில் 23 சரிந்து 31,500 வீடுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதைபோல் சென்னையில் 3 சதவீதம் சரிந்து 15,500 வீடுகளும், கொல்கத்தாவில் 14,500 வீடுகளும், மும்பையில் 60,000 வீடுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன என ப்ராப் டைகர் என்ற  இணையதளத்தின் அறிக்கையில் தெரிவித்துள்ளன.