நானே வென்­றேன்!

பதிவு செய்த நாள் : 12 ஜனவரி 2018

நான் ஒரு மாற்­றுத்­தி­ற­னாளி. இளம்­பிள்ளை வாதத்­தால், ஒரு கால் செய­லி­ழந்து கால் ஊன­மா­னா­லும், என் மனம் ஊன­மா­க­வில்லை. திருச்­சி­யில் உள்ள, ஒரு பள்­ளி­யில் படித்­தேன். படிக்­கிற காலத்­தில், எத்­த­னையோ சுவை­யான அனு­ப­வங்­கள்.

விளை­யாட்டு வகுப்­பில், என் தோழி­யர் அனை­வ­ரும், ஒவ்­வொரு விளை­யாட்­டி­லும், பங்கு பெற்று, ஓடி ஆடு­வர். ஆனால் நானோ, அப்­படி துள்ளி, ஓடி விளை­யாட முடி­ய­வில்­லையே என்ற ஆதங்­கத்­தோ­டும், ஏக்­கத்­தோ­டும் அவர்­களை பார்த்து கொண்­டி­ருப்­பேன்.

ஆண்டு விழா­வின் போது, என் தோழி­யர், ஒவ்­வொரு விளை­யாட்­டிற்­கும் பரி­சும், சான்­றி­த­ழும் வாங்­கும் போது, கண்­கள் கசி­யும். இதை கவ­னித்த பி.டி., ஆசி­ரியை, தலைமை ஆசி­ரி­யை­யி­டம், என்னை போன்ற சில மாண­வி­ய­ருக்­காக, 'இன்­டோர்' விளை­யாட்டு போட்­டி­களை நடத்­த­லாம் என்று யோசனை கூறி, கேரம், செஸ், ஓவி­யப்­போட்டி மற்­றும் உட்­கார்ந்து கொண்டே ஆடும் வித­மாக டேபிள் டென்­னிஸ் போன்­ற­வற்றை அறி­மு­கப்­ப­டுத்­தி­னார்.

இத­னால், மகிழ்ச்சி அடைந்த, என்னை போன்ற மாண­வி­யர், ஆர்­வத்­து­டன் பங்கு பெற்­றோம். கேரம், செஸ் போன்ற விளை­யாட்­டில், மாவட்ட அள­வில் பங்கு பெற்­றோம்.

எங்­க­ளின் தலைமை ஆசி­ரி­யை­யும், விளை­யாட்டு பிரிவு ஆசி­ரி­யை­யும், எங்­க­ளுக்கு ஊக்­க­மும், உற்­சா­க­மும் தந்­த­னர்.

ஒரு­ச­ம­யம், செஸ் விளை­யாட்­டில் சாம்­பி­ய­னாக திகழ்ந்த ஆசி­ரி­யை­யு­டன், மோதும் வாய்ப்பு கிடைத்­தது. நானும் திற­மை­யாக ஆடி­னேன். ஆசி­ரி­யை­யும் திற­மை­யாக ஆடி­னார். இறு­தி­யில் நானே வெற்றி பெற்­றேன். பரிசு வாங்­கிய பின் தான் தெரிந்­தது, ஆசி­ரியை, நான் ஏமாற்­றம் அடைந்­து­விட கூடாது என்று, தன் திற­மையை மறைத்து ஆடி, என்னை வெற்றி பெற செய்­தது. கண்­ணீர் மல்க நன்றி கூறி­னேன்.

என்னை போன்ற மாற்று திற­னா­ளி­கள் மேல் பேரன்பு கொண்டு, தாயுள்­ளத்­தோடு, தியாக உள்­ளத்­தோடு, பணி­யாற்­றிய ஆசி­ரிய பெரு­மக்­களை நினைக்­கும் போது, நெஞ்­ச­மெல்­லாம் மகிழ்ந்து, உவகை ஊற்­றெ­டுக்­கி­றது.

- ஏ.சித்­திகா, திருச்சி.