அட்­டை­பெட்­டிக்­குள் பாம்பு!

பதிவு செய்த நாள் : 12 ஜனவரி 2018

மதுரை மாவட்­டம், டி.கல்­லுப்­பட்­டி­யில், ஆசி­ரி­யர் பட்ட படிப்பு முடித்­தேன். தற்­போது, ஆசி­ரி­ய­ராக பணி செய்து வரு­கி­றேன். 1998ல் முத­லா­மாண்டு தேர்­வு­கள் முடித்து, விடு­மு­றைக்கு பின், விடு­திக்கு வந்­தோம்.

முத­லா­மாண்டு மாண­வர்­க­ளுக்கு முதல் தளத்­தில் அறை­கள் ஒதுக்­கப்­பட்­டி­ருக்­கும். சூட்­கே­ஸில் உடை­க­ளை­யும், பிற பொருட்­க­ளை­யும் வைப்­போம். அட்டை பெட்­டி­க­ளில், நோட்டு புத்­த­கங்­களை வைத்­தி­ருப்­போம். சன்­னல்­க­ளில் சில கண்­ணா­டி­கள் உடைந்த நிலை­யில் இருக்­கும். ஊருக்கு ஒதுக்­குப்­பு­றம் காட்டு பகு­தி­யில் தான், கல்வி நிறு­வ­னம் அமைந்­தி­ருந்­தது.

கீழ்­த­ளத்­தில் இருந்த, என் புத்­த­கங்­கள் உள்ள அட்டை பெட்­டியை, திறக்­கா­மல், கீழ்­பு­றம் மற்­றும் மேல்­பு­றம் சரி செய்து தூக்கி, முதல் தளத்­தில் உள்ள என் அறை­யில் வைத்­தேன்.

திறந்து பார்க்­கும் போது, உள்ளே ஒரு பாம்பு சுழன்று கொண்­டி­ருந்­தது. பாம்பு என்று கூற­வும், நண்­பர்­கள் சேர்ந்து அடித்து கொன்­ற­னர். எத்­தனை நாள் பட்­டினி கிடந்­ததோ பாவம், ஓட கூட முடி­யாத நிலை­யில், வயது முதிர்ந்த பாம்­பாக இருந்­தது.

கீழ் தளத்­தில் இருந்து, அட்டை பெட்­டியை தூக்கி சரி செய்து, மேல் தளத்­திற்கு பாம்­பு­டன் பெட்­டியை தூக்கி வந்­துள்­ளேன் என்­பதை நினைத்­தால், இன்­றும் அதிர்ச்­சி­யாக உள்­ளது.

அன்று முதல் எதை­யும் பார்க்­கா­மல், ஆரா­யா­மல், திறக்­கவோ, தொடவோ கூடாது, என்று எனக்­கும் பிற­ருக்­கும் கூறி கொள்­கி­றேன்.

- எம்.நாக­ராஜ், மதுரை.