பாட்டிமார் சொன்ன கதைகள் – 148 – சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 12 ஜனவரி 2018

எனக்கு அவ சொல் வேண்டாம்!

இதை­யெல்­லாம் கேட்­டுக்­கொண்­டி­ருந்த துரி­யோ­த­னம் எழுந்­தான்.

 `அர­சனே! எங்­க­ளு­காக நீர் பயந்து சாக வேண்­டாம். நமக்கு வேண்­டிய பலத்­தைத் திரட்­டி­யா­கி­விட்­டது. வெற்றி அடை­வோம் என்­ப­தில் சந்­தே­க­மில்லை. யுதிஷ்ட்­ரன் இந்­திர பிரஸ்­தத்­தைப் பற்­றிய பேச்சை விட்­டு­விட்டு இப்­போது ஐந்து கிரா­மங்­கள் கொடுங்­கள் என்று கேட்­கி­றான். நம்­மு­டைய பதி­னோரு அக்­கு­ரோணி சேனை­யைப் பார்த்து பயந்­து­விட்­டான் என்­பது உங்­க­ளுக்கு இத­னால் தெரி­ய­வில்­லையா?’ பதி­னோரு அக்கு ரோணி­களை பாண்­ட­வர்­கள் எவ்­வாறு எதிர்ப்­பார்­கள் நம்­மு­டைய வெற்­றி­யைப் பற்றி உமக்கு ஏன் சந்­தே­கம்? என்று தகப்­ப­னுக்­குத் தைரி­யம் சொன்­னான்.

திரு­தி­ராஷ்ட்­ரன் சொன்­னான், `மகனே யுத்­தம் வேண்­டாம். பாதி ராஜ்­யத்தை வைத்­துக்­கொண்டு திருப்­தி­ய­டை­வாய், அதை நன்கு அர­சாண்­டால் போது’ என்­றான்.

துரி­யோ­த­ன­னுக்­குப் பொறுக்க முடி­ய­வில்லை.  `ஒரு ஊசி முனை­ய­ளவு பூமி­யும் பாண்­ட­வர்­க­ளுக்­குக் கொடுக்­கப்­பட மாட்­டாது.’’ என்று உறு­தி­யா­கச் சொல்லி விட்­டுச் சபையை விட்டு வெளி­யே­றி­னான். சபை­யும் குழப்­பத்­தில் கலைந்­து­விட்­டது.

 இங்கே இப்­படி பேச்­சு­வார்த்தை நடந்து கொண்­டி­ருக்க, யுதிஷ்ட்­ரன் கிருஷ்­ண­னைப் பார்த்து, `வாசு­ தேவனே! சஞ்­ச­யன் திரு ­திராஷ்ட்­ர­னுக்கு இரண்­டா­வது உயிர் போன்­ற­வன். அவன் பேசி­ய­தி­லி­ருந்து திரு­தி­ராஷ்ட்­ர­னு­டைய உள்­ளத்­தில் இருப்­பதை நன்­றாக அறிந்­தேன். எங்­க­ளுக்கு ராஜ்­யம் ஏதும் தரா­மல் சமா­தா­னம் அடை­யத்­தான் திரு­தி­ராஷ்ட்­ரன் பார்க்­கி­றான். முத­லில் சஞ்­ச­யன் மிக­வும் நய­மா­கப் பேசி­னான். அதைக் கேட்டு நான் அடைந்த சந்­தோ­ஷம் வீண் என்று பிறகு அவன் பேசி­ய­தி­லி­ருந்து தெரி­கி­றது. இடை­யில் நடுத்­த­ர­மா­கச் சமா­தான விருப்­பத்­தோடு பேசி­னான். முடி­வின் அவன் சொன்­னது எனக்கு மிக­வும் அந்­நி­ய­மா­கத் தோன்­றிற்று. எங்­கள் விஷ­யத்­தில் திரு­தி­ராஷ்ட்­ரன் சத்­தி­ய­மாக நடந்து  கொள்­ள­வில்லை. சோத­னைக்­கா­லம் வந்­து­விட்­டது. உன்­னைத் தவிர எங்­களை காப்­பாற்­று­ப­வர் வேறு யாரும் இல்லை. ஐந்து கிரா­மங்­களே போதும் என்று சொல்லி அனுப்­பி­யி­ருக்­கி­றேன். துஷ்­டர்­கள் அது­வும் முடி­யாது என்­கி­றார்­கள். இதை எப்­படி பொறுப்­பது? நீதான் யோசனை சொல்­லத் தக்­க­வன். உன்­னைத் தவிர தரு­ம­மும் நீதி­யும் உபா­ய­மும் கண்­ட­வர் யாரும் இல்லை.

யுதிஷ்­ரன் சொன்­ன­தைக் கேட்ட கிருஷ்­ணன், ``இரு பக்­கத்­தா­ரு­டைய நலத்­தை­யும் உத்­தே­சித்து  நானே ஹஸ்­தி­னா­பு­ரம் போவ­தா­கத் தீர்­மா­னித்து விட்­டேன். திரு­த­ராஷ்ட்­ர­னு­டைய சபைக்­குச் சென்று யுத்­த­மில்­லா­மல் உன்­னு­டைய உரி­மை­க­ளைக் காப்­பாற்ற முயல்­வேன். இது நிறை­வே­றி­னால் உல­கத்­துக்கு நன்மை யுண்­டா­கும்’ என்­றான்.

 யுதிஷ்ட்­ரன் ``அப்­பனே! நீ போக வேண்­டாம். இந்­தச் சந்­தர்ப்­பத்­தில் பகை­வர்­கள் கூட்­டத்­திற்கு நீர் போவ­தில் என்ன பயன்? மூட­னான துரி­யோ­த­னன் தன் பிடி­வா­தத்தை விடப்­போ­வ­திலை. அந்த துஷ்­டர்­க­ளின் மத்­தி­யில் நீ போவது எனக்­குப் பிடிக்­க­வில்லை. அத­னால் நமக்கு எந்த நன்மை வரு­வ­தாக இருந்­தா­லும் உனக்கு அபா­யம் நேரக்­கூ­டிய காரி­யம் இப்­போது வேண்­டாம். அவர்­கள் அத­ரு­மத்­துக்கு அஞ்­சு­ப­வர்­கள் அல்ல’’ என்­றான். கிருஷ்­ணன், `தரு­ம­புத்­தி­ரனே! துரி­யோ­த­ன­னு­டைய குணம் எனக்­குத் தெரி­யும்! ஆயி­னும் உங்­கள் பேரி­லும் என் பேரி­லும் உல­கத்­தார் யாதொரு தோஷ­மும் சொல்ல இட­மில்­லா­மல் நாம் செய்ய வேண்­டிய முயற்­சி­யைச் செய்ய வேண்­டும். சமாதா னத்­திற்­காக சகல முயற்சி களும் செய்­யப்­ப­ட­வில்லை என்று உல­கத்­தார் என் மேல் குற்­றம் சொல்­ல­லா­மில்­லையா? அதற்கு இடம் கொடுக்­கக் கூடாது. சமா­தா­னம் செய்­வ­தற்­கா­கத் தூத­னா­கச் செல்­லும் எனக்கு அவர்­கள் ஏதே­னும் தீங்கு செய்­யப்­பார்த்­தார்­க­ளா­கில், அவர்­களை அப்­ப­டியே தகித்து விடு­வேன், நான் போய் பேசித் சமா­தா­னம் உண்­டா­கா­மற் போனா­லும் நம் பேரில் குற்­ற­மில்­லா­த­ப­டி­யா­வது ஆகும். போவதே நலம். இதைத் தடுக்க வேண்­டாம்’’. என்­றான்.

யுதிஷ்ட்­ரன் நீ ``சக­லமு, தெரிந்­த­வன். எங்­க­ளை­யும் அறி­வாய். மற்­ற­வர்­க­ளை­யும் அறி­வாய். விஷ­யங்­களை எடுத்­துச் சொல்­லு­வ­தி­லும் உன்­னை­வி­டச் சமர்த்­தன் வேறு யாரும் இல்லை’’ என்­கி­றான்.

 கிருஷ்­ணன், ``அஜாத சத்­ருவே! உன் உள்­ளத்தை நான் அறி­வேன். உன் சித்­தம் எப்­போ­தும் தரு­மத்­தைப் பற்றி நிற்­கி­றது. அவர்­க­ளு­டைய உள்­ளமோ துவே­ஷத்­தில் மூழ்­கி­யி­ருக்­கி­றது. சொல்ல வேண்­டி­யதை எல்­லாம் சொல்­லிப் பார்ப்­பேன். யுத்­த­மின்­றிச் சமா­தா­னத்­தின் பேரில் பெறக்­கூ­டி­யது சிறி­ய­தா­யி­னும் நீ அதைப் பெரி­தாக மதிப்­பாய் என்­பது எனக்கு நன்­றா­கத் தெரி­யும். அதை நினை­வில் வைத்­துக்­கொண்டு அவர்­க­ளி­டம் நான் பேசிப் பார்க்­கி­றேன். உற்­பா­தங்­க­ளைப் பார்த்­தால், போர் நடக்­கும் என்றே காண்­கி­றது. ஆயி­னும் சமா­தா­னத்­திற்­காக முயற்சி செய்­வது கடமை’’

இவ்­வாறு சொல்லி விடை­பெற்­றுக்­கொண்டு கண்­ணன் ஹஸ்­தி­னா­பு­ரம் போக தேர் ஏறி­னான்.

சமா­தா­னம் பேசக் கண்­ணன் தேர் ஏறி ஹஸ்­தி­னா­பு­ரம் புறப்­பட்­டான். கூட சாத்­ய­கி­யும் போனான். புறப்­ப­டு­வ­தற்கு முன் கிருஷ்­ணன் வெகு­நே­ரம் பாண்­ட­வர்­க­ளு­டன் பேசிக்­கொண்­டி­ருந்­தான். வீர­னான பீமன் கூட ` குல நாசம் வேண்­டாம். சமா­தா­ன­மா­கப் போவதே மேலா­னது ‘ என்­றான். ஆற்­றல் படைத்த வீரன் சமா­தா­னத்­தையே விரும்­பு­வான். சமா­தா­னத்தை விரும்­பு­வது கோழைத்­த­ன­மா­னது என்­ப­தைக் காட்­டவே, வியா­சர் இவ்­வாறு பீம­னைப் பேச வைக்­கி­றார்.

ஆனால் திரெ­ள­ப­திக்­குத் தான் பட்ட அவ­மா­னத்தை மறக்க முடி­ய­வில்லை. தலை­ம­யி­ரைக் கையால் பிடித்­துக்­கொண்டு கிருஷ்­ணன் முன் நின்­றான்.

 `மது­சூ­த­னனே! இந்­தக் கூந்­தல் கற்­றை­யைப் பார்த்து செய்ய வேண்­டி­ய­தைச் செய்­வாய்! அருச்­ச­ன­னும் பீம­சே­ன­னும் யுத்­தன் வேண்­டாம் என்­றா­லும், என்­னு­டைய தகப்­ப­னார் கிழ­வ­ரா­யி­னும், எனது ஐந்து மக்­க­ளைத் துணை­யா­கக் கொண்டு யுத்­தம் நடத்­து­வார். என் தகப்­ப­னா­ரும் வேண்­டி­ய­தில்லை.