டாடா மோட்டார்ஸ் விற்பனை 22 சதவீதம் அதிகரிப்பு

பதிவு செய்த நாள் : 10 ஜனவரி 2018 23:06

புதுடில்லி,

   டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் மட்டும் 22 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலகளவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தக பயன்பாட்டுக்கான 47,182 வணிக வாகனங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விற்பனையாகி உள்ளது. இது 2016ம் ஆண்டைக் காட்டிலும் 53 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளுக்கான வாகன விற்பனையும் 8 சதவீதம் உயர்ந்து 69,495 வாகனங்கள் விற்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் டாடா நிறுவனத்தின் பிரிட்டன் கூட்டுக்குழுமமான ஜாக்குவார் லேண்ட் ரோவர் விற்பனையும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 55,066 கார்களாக அதிகரித்துள்ளது.

இவற்றில் 16,826 ஜாக்குவார்களும் 38,240 லேண்ட் ரோவர் கார்களும் அடங்கும் என்றும் டாடா நிறுவன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.