பங்குச் சந்தைகள் 4வது நாளாக ஏற்றம்

பதிவு செய்த நாள் : 10 ஜனவரி 2018 21:55

மும்பை,

இன்றைய வர்த்தகத்தில் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி புதிய உச்சத்தை தொட்டது.

பங்குச் சந்தைகள் தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்டுள்ளன. இன்றைய வர்த்தக தொடக்கத்தில் பங்குச் சந்தை சென்செக்ஸ் 122 புள்ளிகள் உயர்ந்து 34,565.63 புள்ளிகளில் நிலைபெற்றது.
இதைபோல் தேசியப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிப்டி 18 புள்ளிகள் உயர்ந்து 10,655.50ஆக இருந்தது.
இதைபோல் ஓஎன்ஜிசி, கோல் இந்தியா, பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பவர் கிரிட், ஐடிசி லிமிட்டடு, எஸ்.பி.ஐ, இன்போசிஸ், டி.சி.எஸ் ஆகிய நிறுவனங்களில் பங்குகள் 1.40 சதவீதம் உயர்ந்தது.