6 வாரத்தில் சரியாகிடுவேன்: ஸ்டைன்

பதிவு செய்த நாள் : 10 ஜனவரி 2018 16:30


கேப்டவுன்: 

தென்னாப்ரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணி யின் முக்கிய நபரான  டேல் ஸ்டைன், கேப்டவுன் நகரில் நடைபெற்ற இந்தியா -தென்னாப்ரிக்க அணிகளுக்கு இடையே யான முதல் டெஸ்ட் போட்டியில் 17.3 ஓவர்கள் வீசினார். அப்போது அவரது இடது கால் பகுதியில் தசை கடுமையாக பாதிக்கப்பட்டு, வலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை மருத்துவக் குழு சிகிச்சைக்கு அனுப்பியது. மருத்துவ பரிசோதனையில் டேல் ஸ்டைனின் தசை உட்புறமாக கிழிந்திருப்பது தெரியவந்தது. இதனால், அவர் 2 மாதம் கட்டாய ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

இந்நிலையில், டேல் ஸ்டைன் நேற்று நிருபர்களிடம் பேசினார். ‘எனக்கு இடது கால் உட்பகுதியில் தசை

லேசாக கிழிந்துள்ளது என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். எது எப்படி இருந்தாலும் 6 வாரங்களில் நான் முழு அளவில் தயாராகி, மீண்டும் களத்தில் இறங்க காத்திருக்கிறேன். இந்தியத் தொடரில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டாலும், வரும் மார்ச் - ஏப்ரல் மாதத்தில் தென்னாப்ரிக்க மண்ணில் ஆஸி., அணிக்கு எதிராக நடைபெறும் தொடரில் நிச்சயம் பந்து வீசுவேன்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.