யூசுப் தடை உறுதி: ஜனவரி 15ல் களம்

பதிவு செய்த நாள் : 10 ஜனவரி 2018 16:29


புதுடில்லி: 

ந்திய கிரிக்கெட் சகோதரர்களில் யூசுப் பதான், இர்பான் பதான் என்ற இரட்டையர்கள் பிரபலம். இருவரும் சில நேரங்களில் தேசிய அணிக்காக ஒரே போட்டியில் களம் இறங்கி விளையாடியுள்ளனர். இப்போது ஐபிஎல் தொடர்களில் விளையாடி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் யூசுப்பதான் தன் சிறுநீர் மாதிரியை ஊக்க மருந்து சோதனைக்கு வழங்கினார். இதில் இருமல் மருந்துகளில் பயன்படுத்தப் படும், ‘வாடா’ அமைப்பால் தடை செய்யப்பட்ட மருந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு தடை விதித்து பிசிசிஐ உத்தரவிட்டது. இந்நிலையில், தன் மீதான தடை உத்தரவை எதிர்த்து யூசுப் பதான் மேல் முறையீடு செய்தார். பிசிசிஐ அவரது தடையை உறுதி செய்தது. ஆனால், அவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதியில் இருந்து தடைக் காலத்தை கணக்கிட்டு, வரும் ஜனவரி 14ம் தேதியுடன் தடையை முடிவுக்கு கொண்டு வருவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. ‘நான் ஐபிஎல் தொடரில் விளையாடும் வகையில் என் மீதான தடையை ஜனவரி 14ம் தேதியுடன் முடிவடையும் வகையில் முடிவுக்கு கொண்டு வந்த பிசிசிஐ அமைப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று யூசுப் பதான் தன் டுவிட்டரில் நன்றி செலுத்தியுள்ளார்.