சறுக்கிய பனிச்சறுக்கு சாம்பியன்ஷிப் தொடர்

பதிவு செய்த நாள் : 10 ஜனவரி 2018 16:28


டேராடூன்:

 குளிர்கால ஒலிம்பிக் தொடர் வரும் பிப்ரவரி மாதம் 12ம் தேதி முதல் தென்கொரியாவின் பியோங் சாங் நகரில் நடைபெறவுள்ளது. முழுக்க முழுக்க பனிப் பொழிவு சார்ந்த விளையாட்டுகளே அதிகம் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வின் சார்பில் இடம் பெற வில்லை என்பது வேதனையான விஷயம். இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் டேராடூன் அருகில் உள்ள ஆலியில், 2018ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக ஜனவரி 15 முதல் 21ம் தேதி வரையில், இந்தியாவின் முதல் பனிச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்த மத்திய அரசின் சுற்றுலாத்துறை திட்டமிட்டு இருந்தது. சர்வதேச பனிச்சறுக்கு விளையாட்டு கூட்டமைப்பான இன்டர் நேஷனல் ஸ்கை பெடரேஷன் அமைப்பின் ஒத்துழைப்புடன் நடைபெறும் இந்தப் போட்டியில் ஐரோப்பாவில் இருந்து 26 பிரபல பனிச்சறுக்கு வீரர்களும், இந்தியாவில் இருந்து 64 வீரர்கள் சேர்த்து மொத்தம் 90 பேர் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அத்துடன், இந்த பனிச்சறுக்கு போட்டிகளில் தகுதிபெறும் வீரர்கள், வரும் பிப்ரவரியில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்ற தகவல்கள் வெளியானது. இதனால், இந்தியாவின் பனிச்சறுக்கு வீரர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தனர். இந்நிலையில், ஆலி பகுதியில் இப்போது பனிச்சறுக்கு

சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் அளவுக்கு போதிய பனிப்பொழிவு இல்லை என்பதால், போட்டித் தொடரை பிப்ரவரி 16 முதல் 22ம் தேதிக்கு மாற்றி வைத்துள்ளதாக சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து சுற்றுலாத்துறை செயலர் திலீப் ஜவால்கர் கூறும்போது , ‘பனிச்சறுக்கு விளையாட்டுக்கு சர்வதேச குளிர்கால விளையாட்டு மற்றும் பனிச்சறுக்கு கூட்டமைப்பு விதிகள் படி, சில குறிப்பிட்ட சென்டிமீட்டர் அளவுக்கு பனி பெய்ய வேண்டும். ஆலி பகுதியில் வரும் பிப்ரவரி முதல் வாரத்துக்கு மேல் போதிய பனிப்பொழிவு இருக்-கும் என்பதால் போட்டிகளை ஒரு மாதம் தள்ளி வைத்துள்ளோம்’ என்றார். சார்...  இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு நம்ம வீரர்கள் தகுதி?’ என்று நிருபர்கள் இழுக்க, ‘ஜனவரி 21ம் தேதிக்கு முன்னர் பல அப்டேட்கள் இருக்கு. பனிச்

சறுக்கு சாம்பியன்ஷிப் தள்ளிப்போனதால், இப்போது நம் வீரர்கள் யாரும் விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலையில் இருக்காங்க’ என்று பதில் சொன்னார். ‘அய்யா, விளையாட ஆர்வம் இருக்குறவங்களை களத்துக்கு அனுப்பாமல் கட்டிப்போட்டா, விளையாட்டு எப்படிய்யா வளரும்?’ என்று கேள்வி கேட்கின்றனர் பனிச்சறுக்கு வீரர்கள்.