சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 327 – எஸ்.கணேஷ்

பதிவு செய்த நாள் : 10 ஜனவரி 2018

நடி­கர்­கள்: விஜய், ஜோதிகா, விவேக், ரகு­வ­ரன், அவி­னாஷ், மனோஜ் கே. ஜெயன், கவு­சல்யா, கரு­ணாஸ் மற்­றும் பலர். இசை: வித்­யா­சா­கர், ஒளிப்­ப­திவு: ஆர். ரத்­ன­வேலு, எடிட்­டிங் : சுரேஷ் அர்ஸ், தயா­ரிப்பு: புஷ்பா கந்­த­சாமி (கவி­தா­லயா புரொ­டக்­க்ஷன்ஸ்), திரைக்­கதை, இயக்­கம்: ரமணா.

திரு­மலை (விஜய்) புதுப்­பேட்­டை­யில் தன் பெற்­றோ­ரோ­டும், நன்­பர்­க­ளோ­டும் மகிழ்ச்­சி­யாக வாழும் ஒரு பைக் மெக்­கா­னிக். 2002ம் ஆண்­டின் கடைசி நாள் இர­வில் ஸ்வேதாவை (ஜோதிகா) சந்­திக்­கி­றான். முதல் பார்­வை­யி­லேயே அவள் மீது காதல் வயப்­ப­டு­கி­றான். அவ­னது காதலை கடு­மை­யாக எதிர்க்­கும் ஸ்வேதா, ஆட்­களை அனுப்பி அவனை அடிக்­கி­றாள்.

பின்­னர் திரு­ம­லை­யின் உண்­மை­யான உள்­ளத்தை புரிந்து கொள்­ளும் ஸ்வேதா­வும் அவனை நேசிக்­கத் தொடங்­கு­கி­றாள். ஆனால் இவர்­க­ளது காத­லில் உடன்­பாடு இல்­லாத ஸ்வேதா­வின் அப்பா அசோக் (அவி­னாஷ்), கடத்­தல் கூட்­டத்­திற்கு தலை­வ­னாக இருக்­கும் அரசு (மனோஜ்.கே. ஜெயன்) என்­ப­வனை உத­விக்கு அழைக்­கி­றார்.

அர­சுக்­கும் திரு­ம­லைக்­கும் இடையே நடக்­கும் மோதல் தொடர்­கி­றது. ஒரு கட்­டத்­தில் தனது தவ­று­களை அரசு உணர ஆரம்­பிக்­கி­றான். இறு­தி­யில் தந்­தை­யின் சம்­ம­தத்­து­டனே காத­லர்­கள் இரு­வ­ரும் ஒன்று சேர்­கி­றார்­கள்.

விஜய்­யின் திரை­யு­லக வாழ்­வில் 'திரு­மலை' படத்­துக்கு முக்­கிய பங்கு உண்டு. இந்­தப் படத்­தி­லி­ருந்­து­தான் விஜய் ஒரு பக்­கா­வான ஆக்­க்ஷன் ஹீரோ­வாக உரு­வெ­டுத்­தார். விஜய், ஜோதிகா ஜோடி­யோடு ராகவா லாரன்­ஸும், கிரண் ரத்­தோ­டும் கவு­ரவ தோற்­றத்­தில் வந்து போனார்­கள். 'நேருக்கு நேர்' படத்­தில் விஜய்க்கு ஜோடி­யாக நடித்த கவு­சல்யா இந்­தப் படத்­தில் அண்­ணிக்கு நிக­ரான பாத்­தி­ரத்­தில் ரகு­வ­ர­னோடு குணச்­சித்­திர பாத்­தி­ரத்­தில் தோன்­றி­னார்.

முத­லில் கதா­நா­ய­கி­யாக நம்­ரதா ஷிரோத்­கர் ஒப்­பந்­தம் செய்­யப்­பட்டு இயக்­கு­ன­ருக்கு திருப்தி இல்­லாத கார­ணத்­தால் ஜோதிகா நாய­கி­யா­னார்.

படம் வணி­க­ரீ­தி­யாக மிகப்­பெ­ரிய வெற்றி பெற்­றது. ''தம்'' என்ற பெய­ரில் இந்­தி­யில் டப் செய்­யப்­பட்­டது.

“கவுரி” என்ற பெய­ரில் தெலுங்­கில் மறு உரு­வாக்­கம் செய்­யப்­பட்­டது. “கொத்த தாவ் சாத்தி ஹோப்” என்ற பெய­ரில் பங்­க­ளா­தே­ஷில் மறு உரு­வாக்­கம் செய்­யப்­பட்டு வெளி­யி­டப்­பட்­டது.

ஷாகிப் கான், அபு பிஸ்­வாஸ், சதேக் பச்சு, ஆகி­யோர் நடிக்க ரஹ்­மான் ஸோகன் இயக்­கிய இப்­ப­டம் 2009-ல் வெளி­யா­னது.