பிரேசில் வீரரை அதிக விலைக்கு வாங்கிய பார்சிலோனா அணி

பதிவு செய்த நாள் : 09 ஜனவரி 2018 07:55


பிரேசில் அணியின் நடுகள வீரராக விளையாடி வரும் பிலிப் கோடின்ஹோ பார்சிலோனா அணிக்கு விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். லிவர்பூல் அணிக்கு விளையாடி வந்த கோடின்ஹோவை 106.4 மில்லியன் யூரோவுக்கு பார்சிலோனா அணி ஒப்பந்தம் செய்துள்ளது. 25 வயதாகும் கோடின்ஹோ அதிக விலைக்கு கால்பந்து அணியால்  வாங்கப்பட்ட 3வது வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு பார்சிலோனா அணிக்கு விளையாடிய நெய்மர் பாரிஸ் செயின்ட் ஜெர்மன் அணிக்கு விளையாட அதிகபட்சமாக200.6 மில்லியன் யூரோவுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கிலியன் பாப் மானாகோ அணியிலிருந்து விலகி பிஎஸ்ஜி அணிக்கு விளையாட 160 மில்லியன் யூரோவுக்கு ஓப்பந்தம் செய்யப்பட்டார். தற்போது பார்சிலோனா அணிக்கு விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள கோடின்ஹோவுக்கு 106.4 மில்லியன் யூரோவுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.