தொடரை வென்றது ஆஸ்திரேலியா

பதிவு செய்த நாள் : 09 ஜனவரி 2018 06:40


சிட்னி: 

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் கோப்பைக்கான கிரிக்கெட் டெஸ்ட் தொடர் நடந்தது. இதில் 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்தி ரேலியா அணி கோப்பையை வென்றது.

முதல் 3 டெஸ்ட் மற்றும் 5வது டெஸ்டில் ஆஸி. அணி வெற்றி பெற்றது. 4வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இங்கிலாந்து ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிட்னி மைதானத்தில் 5வது மற்றும் இறுதி டெஸ்ட் நடந்தது. இதன் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 346 ரன் எடுத்தது. ஆஸி. அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 649 ரன் எடுத்தது. ஆஸி. அணி வீரர்கள் ஷான் மார்ஷ், எம். மார்ஷ் இருவரும் சதம் அடித்தனர். அதனை தொடர்ந்து தனது 2வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 180 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இதனால் ஆஸி. அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 123 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மதிப்புமிக்க ஆஷஸ் கோப்பையை கைப்பற்றியது.

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் அலியஸ்டர் குக் 10 ரன்னில் லயன் பந்தில் ஆட்டமிழந்தார். ஸ்டோன்மேன் பூஜ்யத்தில் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். வின்ஸ் 18 ரன்னில் கம்மின்ஸ் பந்தில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். ஒரு புறம் விக்கெட்டுகள் மள மள வென்று சரிந்த போதும் ஜோ ரூட் சிறப்பாக விளையாடி 167 பந்தில் ஒரு பவுண்டரியுடன்58 ரன் எடுத்த நிலையில் காயம் காரணமாக ஆட்டத்தை விட்டு வெ ளியேறினார். மாலன் 5 ரன், பேர்ஸ்ட்ரோ 38 ரன், பிராட் 4 ரன், கிரேனி 2 ரன், ஆண்டர்சன் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆஸி. தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட், லயன் 3 விக்கெட் வீழ்த்தினர். போட்டியின் சிறந்த வீரராக கம்மின்ஸ், தொடரின் சிறந்த வீரராக ஸ்மித் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.