ஸ்லோகமும் பொருளும்!

பதிவு செய்த நாள் : 09 ஜனவரி 2018

ஜபாகு ஸும ஸங்காஸம் த்விபுஜம் பத்ம ஹஸத்ம்!

ஸிந்தூராம்பர மால்யஞ்ச ரக்த கந்தானு லேபனம்!!

மாணிக்ய ரத்ன கசித ஸர்வாபரண பூஷிதம்!

ஸப்தாஸ்வ ரத வாஹம் ச மேரும் யாந்தம் பரதக்ஷிணம்!!

பொருள்: செம்பருத்திப்பூ போல சிவந்தவரே! இரு கைகளைக் கொண்டவரே! தாமரை மலர் தாங்கியவரே! சிவந்த ஆடை, மாலைகளை அணிந்தவரே! மாணிக்கம், ரத்தின ஆபரணங்கள் சூடியவரே! ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பவனி வருபவரே! மேரு மலையை வலம் வருபவரே! சூரிய பகவானே! உம்மை வணங்குகிறேன்.

குறிப்பு: சூரிய கவசத்திலுள்ள ஸ்லோகம்.