மாதக்கணக்கு வந்தது எப்படி?

பதிவு செய்த நாள் : 09 ஜனவரி 2018

ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட நாட்கள் ஒரு ராசியில் தங்கியிருக்கும். குரு ஒரு ராசியில் ஓராண்டு சஞ்சரிப்பார். ராகு, கேது ஒன்றரை வருடங்கள் இருப்பார்கள். சனி இரண்டரை வருடங்கள் இருப்பார். ஆனால் சூரியன் ஒரு ராசியில் ஒரு மாதம் மட்டுமே தங்குவார். இவர் மேஷ ராசியில் நுழையும் மாதம் சித்திரை. ரிஷப ராசியில் நுழையும் மாதம் வைகாசி. மிதுன ராசிக்கு ஆனி, கடகத்தில் ஆடி, சிம்மத்தில் ஆவணி, கன்னியில் புரட்டாசி, துலாமில் ஐப்பசி, விருச்சிகத்தில் கார்த்திகை, தனுசுவில் மார்கழி, மகரத்தில் தை, கும்பத்தில் மாசி, மீனத்தில் நுழையும் போது பங்குனி என தமிழ் மாத பிறப்பு கணக்கிடப்படும். இவற்றில் மேஷத்தில் நுழையும் காலம் சித்திரை விசு, துலாமில் நுழையும் போது ஐப்பசி விசு, மகரத்தில் நுழையும் மகர சங்கராந்தி நாளான தைப்பொங்கல் ஆகியவை சூரியனுக்கு முக்கியத்துவம் பெறுகின்றன.