தெரிஞ்சுக்குவோமே!

பதிவு செய்த நாள் : 09 ஜனவரி 2018

1. சூரியதேவனின் பெற்றோர்...........

கஷ்யப முனிவர், அதிதி.

2. சூரியனின் தேரோட்டி.......

அருணன்.

3. சூரியனுக்குரிய நட்சத்திரங்கள் மூன்று........

கார்த்திகை, உத்திரம், உத்திராடம்.

4. சூரிய பக்தனாக விளங்கிய போஜ வம்ச மன்னர் ....

சத்ராஜித்.

5. சூரியனுக்குரிய எருக்கு வனமாக இருந்த தலம் ..........

சூரியனார் கோயில்.

6. நாரதர் உபதேசம் மூலம் சூரிய புராணம் கேட்டவர்.....

சாம்பன்.

7. ராமனின் நண்பராக விளங்கிய சூரியபுத்திரன்.......

சுக்ரீவன்.

8. ராமருக்கு அகத்தியர் உபதேசித்த சூரிய ஸ்தோத்திரம்......

ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம்.

9. சூரிய மந்திரம் மூலம் குந்திக்கு பிறந்தவன்.....

கர்ணன்.

10. ஒடிசாவிலுள்ள புகழ் பெற்ற சூரியக் கோயில்......

கொனார்க்.