இவரை பாருங்க... யோகம் வரும்!

பதிவு செய்த நாள் : 09 ஜனவரி 2018

உலகின் எல்லா நாடுகளிலும் சூரிய வழிபாடு உள்ளது. இந்தியாவில் சூரியனை வழிபடுபவர்களுக்காக 'சவுரம்' என்ற மதமே இருந்தது. இதை ஆதிசங்கரர் இந்து மதத்துடன் இணைத்து விட்டார். 'மண்டல பிரம்மோபநிஷதம்' என்னும் நூலில், சூரியனை முழுமுதற் கடவுளாக குறிப்பிடுகின்றனர். பிற்காலத்தில் சூரிய வழிபாடு நவக்கிரக வழிபாட்டுடன் இணைந்தது. நவக்கிரகங்களின் தலைவராக சூரியன் விளங்குகிறார். இவரது அருளைப் பெற வேண்டும் என்பதால் சூரியன் உதிக்கும் கிழக்கு நோக்கிய வீட்டில் குடியிருக்க விரும்புவர். கிழக்கில் தோன்றும் சூரியனைத் தினமும் வழிபட்டால் நல்வாழ்வும், யோகமும் உண்டாகும்.