கேப்டவுன் டெஸ்ட்: 3ம் நாள் மழையால் ரத்து

பதிவு செய்த நாள் : 08 ஜனவரி 2018 07:49


கேப்­ட­வுன்:

இந்­தியா, தென் ஆப்­ரிக்கா இடை­யே­யான முதல் டெஸ்­டின் மூன்­றாம் நாள் ஆட்­டம் மழை கார­ண­மாக ரத்­தா­னது.

தென் ஆப்­ரிக்கா சென்­றுள்ள இந்­திய அணி மூன்று போட்­டி­கள் கொண்ட டெஸ்ட் தொட­ரில் பங்­கேற்­கி­றது. இரு அணி­கள் மோதும் முதல் டெஸ்ட், கேப்­ட­வு­னில் உள்ள நியூ­லாண்ட்ஸ் மைதா­னத்­தில் நேற்று முன்­தி­னம் துவங்­கி­யது. இதில், !டாஸ்’ வென்ற தென் ஆப்­ரிக்க அணி கேப்­டன் டுபி­ளசி, முத­லில் ‘பேட்­டிங்கை’ தேர்வு செய்­தார். இந்­திய அணி­யில் வேகப்­பந்து வீச்­சா­ளர் பும்ரா, அறி­முக வாய்ப்பு பெற்­றார். தென் ஆப்­ரிக்கா அணி முதல் இன்­னிங்­சில் 286 ரன்­னுக்கு ஆட்­ட­மி­ழந்­தது. டிவி­லி­யர்ஸ் (65), கேப்­டன் டுபி­ளசி (62) அரை­ச­தம் அடித்­த­னர். இந்­திய தரப்­பில் புவ­னேஷ்­வர் குமார் 4, அஷ்­வின் 2, பும்ரா, பாண்ட்யா, முக­மது ஷமி தலா 1 விக்­கெட் வீழ்த்­தி­னர்.

பின் தனது முதல் இன்­னிங்சை துவக்­கிய இந்­தியா தனது முதல் இன்­னிங்­சில் 209 ரன்­னுக்கு ஆட்­ட­மி­ழந்­தது. பாண்ட்யா அதி­க­பட்­ச­மாக 93 ரன் விளா­சி­னார். தென் ஆப்­ரிக்கா தரப்­பில் பிலாண்­டர், ரபாடா தலா 3, ஸ்டைன், மார்­கல் தலா 2 விக்­கெட்­டு­களை வீழ்த்­தி­னர். பின் 77 ரன் முன்­னிலை பெற்ற நிலை­யில், இரண்­டா­வது இன்­னிங்சை தென் ஆப்­ரிக்கா துவக்­கி­யது. மார்க்­ராம், எல்­கர் இரு­வ­ரும் சிறப்­பான துவக்­கத்தை கொடுத்­த­வர். இந்த ஜோடி முதல் விக்­கெட்­டுக்கு 52 ரன் சேர்த்த நிலை­யில், பாண்ட்யா வேகத்­தில் மார்க்­ராம் சரிந்­தார். அதி­ர­டி­யாக விளை­யா­டிய இவர் 34 ரன் (43 பந்து, 7 பவுண்­டரி) எடுத்­தார். அடுத்து இரவு ஆட்­டக்­கா­ர­ராக ரபாடா களம் வந்­தார். தொடர்ந்து அசத்­திய பாண்ட்யா, எல்­கர் (25) விக்­கெட்டை வீழ்த்­தி­னார். 2ம் நாள் முடி­வில் தென் ஆப்­ரிக்க அணி 2 விக்­கெட்­டு­களை இழந்து 65 ரன் எடுத்­தது. ரபாடா (2), ஆம்லா (4) ஆட்­ட­மி­ழக்­கா­மல் உள்­ள­னர்.

இந்த நிலை­யில், போட்­டின் 3வது நாளான நேற்று தனது இன்­னிங்சை தென் ஆப்­ரிக்கா தொடர இருந்­தது. போட்­டிக்கு சில மணி நேரத்­திற்கு முன் மழை பெய்­யத் தொடங்­கி­யது. இதை­ய­டுத்து ஆடு­க­ளம் தார்­பாய் கொண்டு மூடப்­பட்­டது. தொடர்ந்து மழை பெய்­த­தால் மூன்­றாம் நாள் ஆட்­டத்தை ரத்து செய்­வ­தாக நடு­வர்­கள் அறி­வித்­த­னர். அடுத்த சில தினங்­க­ளுக்கு மழை தொட­ரும் என வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­துள்­ளது. இது இந்­தி­யா­வுக்கு சாத­க­மாக அமைந்­துள்­ளது.