ஆஷஸ் : பலம் காட்­டுது ஆஸி., அணி

பதிவு செய்த நாள் : 06 ஜனவரி 2018 08:01


சிட்னி : 

இங்­கி­லாந்து – ஆஸி., அணி­க­ளுக்கு இடை­யே­யான 5 போட்­டி­கள் கொண்ட ஆஷஸ் கிரிக்­கெட் தொட­ரின்  கடை­சிப்­போட்டி ஆஸ்­தி­ரே­லி­யா­வின் சிட்னி நக­ரில் தொடங்கி நடை­பெற்று வரு­கி­றது. தொட­ரில் 3–0 என்ற முன்­னி­லை­யில்  உள்ள ஆஸி., அணி 4வது போட்­டியை டிரா செய்­தது. 5வது போட்­டி­யி­லும் தன் ஆதிக்­கத்தை கொஞ்­சம் அதி­க­மா­கவே ஆஸி.,  நிலை நிறுத்­திக் கொண்­டி­ருக்­கி­றது. முதல் நாள் ஆட்ட நேர முடி­வில் இங்­கி­லாந்து அணி 5 விக்­கெட் இழப்­புக்கு 233 ரன்­கள்  எடுத்­தி­ருந்­தது. நேற்று காலை 6வது விக்­கெட்­டுக்கு மொயின் அலி, டேவிட் மாலன் இணைந்­த­னர். மாலன் 62 ரன்­னில்  வெளி­யே­றி­னார். 7வது விக்­கெட்­டுக்கு மொயின் அலி 30 ரன்­க­ளும், 8வது விக்­கெட்­டுக்கு வந்த டாம் குரன் 39 ரன்­கள், ஸ்டூவர்ட்  பிராட் 31 ரன்­கள் குவித்­த­னர். இறு­தி­யில் இங்­கி­லாந்து அணி­யின் முதல் இன்னீ?ங்ஸ் 112.3 ஓவர்­க­ளில் 346 ரன்­க­ளுக்கு முடி­வுக்கு  வந்­தது. ஆஸி., தரப்­பில் பாட் கம்­மின்ஸ் 4, மிட்­செல் ஸ்டார்க் மற்­றும் ஜோஸ் ஹேஸ்­லி­வுட் ஆகி­யோர் தலா 2 விக்­கெட்­கள்  வீழ்த்­தி­னர்.

தொடர்ந்து ஆஸி., அணி­யின் டேவிட் வார்­னர், கேம­ரான் பான்­கி­ராப்ட் களம் இறங்­கி­னர். பான்­கி­ராப்ட் டக் அவுட்­டில்  வெளி­யே­றி­னார். இதைத் தொடர்ந்து வார்­னர், உஸ்­மான் கவாஜா இணைந்­த­னர். இந்த ஜோடி சிறப்­பாக ஆடி­யது. எனி­னும், ஆஸி.,  அணி 31.4 ஓவர்­க­ளில் 86 ரன்­கள் எடுத்­தி­ருந்த நிலை­யில், வார்­னர் 56 ரன்­னில் ஆட்­டம் இழந்­தார். இதைத் தொடர்ந்து கேப்­டன்  ஸ்மித் மற்­றும் கவாஜா 3வது விக்­கெட்­டுக்கு இணைந்­த­னர். நேற்று ஆட்ட நேர முடி­வில் ஆஸி., அணி 67 ஓவர்­க­ளில் 2 விக்­கெட்  இழப்­புக்கு 193 ரன்­கள் எடுத்து வலு­வான நிலை­யில் இருந்­தது. கவாஜா 91 ரன், ஸ்மித் 44 ரன்­னு­டன் களத்­தில் இருந்­த­னர். இன்று  காலை 3ம் நாள் ஆட்­டம் தொடங்­கு­கி­றது.