பாட்டிமார் சொன்ன கதைகள் – 147 – சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 05 ஜனவரி 2018

நீ எதை எண்ணுகிறாயோ அது ஆவாய்!

தன்­னால் பின்­னப்­பட்ட வலையை திரும்­ப­வும் தன்­னுள் அது வாங்­கிக் கொள்­கி­றது. இறை­ய­ருள் ஒன்றே உண்மை. மாயை­யால் உல­கத்தை அவன் படைக்­கி­றான். பின்­னர் காலம் என்ற பெய­ரில் தான் படைத்­த­வற்­றைத் தன்­னுள் வாங்­கிக் கொள்­கி­றார்.

 குள­விக்­கூட்­டில் அகப்­பட்ட புழு கிளவி வந்து கொட்­டும் என்று அஞ்சி அதையே எண்ணி தானும் குள­வி­யாகி விடு­கி­றது. ஒரு மனி­தன் எதை எண்­ணு­கி­றானோ அத்­தன்­மை­யையே அடை­கி­றான்.

 என்­னு­டைய உடல் மூலம் சில பாடங்­களை அறிந்­தேன். ` குளிக்க வைத்­தும் உடை அணி­வித்­தும், உண­வ­ளித்­தும் எவ்­வ­ளவோ பாடு பட்டு உடலை பரா­ம­ரிக்­கி­றோம். எனி­னும் இறு­தி­யில் உடல் நமை விட்டு விடு­கி­றது. எனவே இந்த உட­லு­டன் எனக்கு தொடர்­பில்லை என்­று­ணர்ந்­தேன். ஆயி­னுள் உடல் படைத்­த­வ­ருக்கே முக்­தி­யும் கிட்­டும், எனவே உடலை அவ்­வ­ழி­யில் திருப்ப வேண்­டும்.

 இவ்­வாறு பால சந்­நி­யாசி யது மன்­ன­னுக்கு கூறிய உப­தேங்­களை உத்­த­வ­ருக்­கும் விவ­ரித்த கிருஷ்­ணர் மேலும் பாக­வ­தத்­தில் ஆங்­காங்கே தனி­யாக கூறி­யி­ருக்­கும் பல்­வேறு விஷ­யங்­க­ளை­யும் அவ­ருக்கு உப­தே­சித்­தார்.

 அவற்­றைக் கேட்டு கண்­ணீர் மல்க கைகூப்­பிய உத்­த­வர் தண்­ட­னிட்டு கூறி­னார். ` என் உள்­ளத்து இருள் அகன்­றது. உன் அருள் பெற்­றேன். கதி­ர­வனை அணு­கி­ய­வர்க்கு இரு­ளும்,குளி­ரும் ஏது ? என்­னி­ட­னி­ருந்த ` நான்’ என்ற எண்­ண­மும் அகன்று என் மன­தி­லி­ருந்த பற்­றுக்­க­ளும் வில­கி­விட்­டன. இனி என்ன செய்­வது என்­ப­தைப் பற்­றி­யும் தாங்­கள் வழி­காட்டி உதவ வேண்­டும்.’’

அதற்கு கிருஷ்­ணர்,` உத்­த­வரே! பத்­ரி­கா­சி­ர­மம் செல்­வீர். அங்கு என்­னையே நினைத்­த­படி அமை­தி­யு­டன் வாழ்­வீர். கங்­கை­யில் நீராடி உங்­கள் பாவங்­களை போக்­கு­வீர். துற­வ­றம் பூண்டு, மர­வுரி தரித்து, காய்­க­னி­களை புசித்­த­படி இச்­சை­களை விலக்கி வாழ்­வீர். என்­னைத்­த­விர இந்த உல­கில் யாதொன்­றும் இல்லை என்­பதை உணர்ந்து என்­னி­டம் மனதை செலுத்­து­வீ­ராக.’’ என்று கூறி­னார்.

 கிருஷ்­ணரை வலம் வந்த உத்­த­வர் அவ­ரது கட்­ட­ளைக்­கி­ணங்க பத்­ரி­கா­சி­ரம் சென்­றார்.

 இவ்­வாறு கிருஷ்­ணர் உப­தே­சித்­தது உத்­தவ கீதை என்றே பெயர் பெற்­று­விட்­டது. அர்­ஜு­ன­னுக்கு கிருஷ்­ணர் உப­தே­சித்த கீதையை விட இதில்­தான் ஆழ்ந்த தத்­துவ பலன்­க­ளும், உல­கி­யல் உண்­மை­க­ளும் அதி­கம். அடங்­கி­யி­ருப்­ப­தாக அறி­ஞர் பல­ரும் பாராட்­டு­கின்­ற­னர். எனி­னுன் கூட அர்­ஜூ­ன­னுக்கு உப­தே­சித்த கீதை அள­வுக்கு உத்­த­வ­கீதை புகழ் பெற­வில்லை.

அதே போல் பார­தப் போர் துவங்­கு­வ­தற்கு முன்பு கண்­ணன் போர் நடக்­கா­மல் தடுக்க தூது போன­தும் அத்­தனை பெரி­தாக பேசப்­ப­ட­வில்லை.

முத­லில் இந்த கண்­ணன் தூதிற்கு முன்­பாக, திரு­தி­ராஷ்­ட­ர­னுக்கு கண்­ணாக விளங்­கிய சஞ்­ச­யனை பாண்­ட­வர்­க­ளி­டம் தூதாக அனுப்­பி­னான்.

 சஞ்­ச­ய­னைப் பாண்­ட­வர்­க­ளி­டம் தூது அனுப்­பிய திரு­தி­ராஷ்ட்­ர­னுக்கு கவ­லை­யால் அன்­றி­ரவு நித்­தி­ரையே வர­வில்லை. விது­ரனை அழைத்து அவ­னோடு பேசிக்­கொண்டு இரவு முழு­வ­தும் கண் விழித்­தான்.

`பாண்­ட­வர்­க­ளுக்கு ராஜ்­ஜி­யத்தை கொடுத்து விடு­வதே உபா­யம். இதுவே இரு பக்­கத்­தா­ருக்­கும் நன்மை பயக்­கும். பாண்­ட­வர்­க­ளை­யும் உம் மக்­க­ளைப் போலவே நீர் நடத்த வேண்­டும். நேர்­மையே உபா­ய­மும், தர்­ம­மும் இரண்­டு­மா­கும்.’’ என்று விது­ரன் திரு­த­ராஷ்ட்­ர­னுக்­குப் பல­வா­றாக உப­தே­சித்­தான்.

 மறு­நாட் காலை சஞ்­ச­யன் அஸ்­தி­னா­பு­ரம் திரும்பி வந்து சேர்ந்­தான். யுதிஷ்­டி­ர­னு­டைய சபை­யில் நடந்­ததை எல்­லாம் விவ­ர­மா­கச் சொன்­னான். ` முக்­கி­ய­மான அருச்­சு­னன் சொன்­னதை துரி­யோ­த­னன் கேட்க வேண்­டும். ` கிருஷ்­ண­னும் நானும் சேர்ந்து துரி­யோ­த­ன­னை­யும் அவனை பின்­பற்­று­ப­வர்­க­ளை­யும் நீர்­மூ­லம் செய்­யப் போகி­றோம். சந்­தே­க­மில்லை. காண்­டீ­பம் யுத்­தத்­திற்­காக துடிக்­கி­றது. அந்த வில்­லின் நாண் இழுக்­கா­மல் தானா­கவே அதிர்­கி­றது.  தூணி­லி­ருந்து அன்­பு­கள் தலை நீட்டி ` எப்போ ? எப்போ ?’ என்று கேட்­கின்­றன. சஞ்­ச­யனே ! இந்த மூடன் துரி­யோ­த­னன் இந்­தி­ராதி தேவர்­க­ளை­யும் போரில் வீழ்த்­தக் கூடிய எங்­களை தன் விநாச காலத்­தால் தூண்­டப்­பட்­டுச் சண்­டைக்கு இழுக்­கி­றான். ‘ இப்­ப­டிச் சொன்­னான் தனஞ்­செ­யன் ‘ என்­றான்.

சஞ்­ச­யன் இதைச் சொன்­ன­பின், பீஷ்­மர் துரி­யோ­த­ன­னுக்கு மறு­ப­டி­யும் சொல்­லிப்­பார்த்­தார்.

` அருச்­சு­ன­னும், கேச­வ­னும், நர­னும் நாரா­ய­ண­னும் . என்று அறி­வா­யாக. அவர்­கள் இரு­வ­ரும் ஒன்று கூடி யுத்­தத்­தில் உன்னை எதிர்க்­கும்­போது அந்த உண்­மையை நீ அறிந்து கொள்­ளப் போகி­றாய்’’ என்று துரி­யோ­த­ன­னுக்கு இவ்­வாறு சொல்­லி­விட்­டுத் திரு­தி­ராஷ்­ட­ரனை நோக்கி, ` திரும்ப திரும்ப நான் பாண்­ட­வர்­க­ளைக் கொல்­லு­வேன்’’ என்று வீரம் பேசும் கர்­ணன், பாண்­ட­வர்­க­ளில் பதி­னா­றில் ஒரு அம்­சம் ஆக­மாட்­டான். இவன் பேச்­சைக் கேட்டு உன் புத்­தி­ரர்­கள் தங்­க­ளு­டைய நாசத்­தைத் தேடிக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள். விரா­ட­னு­டைய நக­ரத்தை தாக்­கிய போது அருச்­சு­னன் நம்­மு­டைய கர்­வத்தை அடக்­கி­னான். அந்­தக் காலத்­தில் அங்கே இருந்த கர்­ண­னால் என்னை செய்ய முடிந்­தது?  கந்­தர்­வர்­கள் உன் மக­னைச் சிறைப்­ப­டுத்­திக் கொண்டு போன காலத்­தில் கர்­ணன் இப்­போது கர்­ஜிக்­கி­றானே! அவன் அப்­போது எங்கே மறைந்­தி­ருந்­தான் ? அருச்­சு­னன் அல்­லவோ கந்­தர்­வர்­களை விரட்­டி­யது!’’ என்று பீஷ­மர் குத்­திக் காட்­டி­னார்.

`` குலத்­துக்­குத் தலை­வ­ரான பீஷ்­மர் சொல்­லு­வதே செய்­யத்­தக்­கது. யுத்­தம் வேண்­டாம். சமா­தா­னமே உசி­தம். ஆனால் நான் என்ன செய்­வேன் ? இந்த மூர்க்­கர்­கள்­தான் நான் எவ்­வ­ளவு கத்­தி­னா­லும் தாங்­கள் போகும் வழியே செல்­கி­றார்­கள். அறி­வும் அனு­ப­வ­மும் பெற்­ற­வர்­கள் அனை­வ­ரும் சமா­தா­னமே செய்து முடிக்­கத் தக்­கது’ என்­கி­றார்­கள். அப்­படி செய்­வ­து­தான் என் எண்­ண­மும்’ என்­றான் திரு­தி­ராஷ்ட்­ரன்.