குற்றவாளிகளை கண்டுபிடிக்க புதிய மொபைல் ஆப்

பதிவு செய்த நாள் : 26 டிசம்பர் 2017

முன்பு ஒரு காலத்தில் பேசுவதற்கு மட்டும் பயன்பட்டு வந்த செல்போன்கள் இன்று ஏராளமான செயல்களை செய்ய உதவுகிறது அதிலும் நவீன மொபைல்கள் விதவிதமான மொபைல் ஆப்ஸ்கள் என வியப்பூட்டும் அளவிற்கு வந்து குவிகின்றன.

இன்றைய இளைய தலைமுறையினர் விதவிதமாகப் பல ஆப்ஸ்களை பயன்படுத்தி வருகின்றனர். மொபைல் ஆப்ஸ்கள் முன்பு பொழுது போக்குக்கு மட்டும் பயன்பட்டு வந்தன. பின்னர் மொபைல் போன்களில் மின்னஞ்சல் சேவை தொடங்கியது. வாட்ச்ஆப், பேஸ்புக், வீடியோக்கள், தகவல் தேடல் என  பொழுது போக்குக்கு மட்டும் பயன்படுத்தபட்டு மொபைல் ஆப்ஸ்கள் தற்போது செய்திவாசிப்பு, பயணச்சீட்டு முன்பதிவு, வங்கிப் பணப்பரிமாற்றம், ரயில்வே ஆப்ஸ், சமூகவலைத் தளத்தகவல் பரிமாற்றம், மின்வணிக முறையில் பொருள் வாங்கல் என விரிவடைந்துள்ளது.

எங்கெங்கும் ஆப் எதிலும் மொபைல் ஆப். எதற்கெடுத்தாலும் ஆப் என மொபைல் அப்பிளிக்கேஷன்கள் பெருகிவிட்டன.

கூகிள் ப்ளே ஸ்டோரில் 3.3  மில்லியன் ஆப்ஸ்கள் உள்ளன. இதில் நமக்கு தேவையான சில ஆப்ஸ் மட்டுமே நாம் பயன்படுத்துவோம்அந்த வகையில் நமக்கு தேவையான மொபைல் ஆப்ஸ் மட்டும் நாம்  ஸ்மார்ட்போனில் டவுன்லோடு செய்யலாம்.
ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை பெருகி வருவது போல  இந்தியாவில் ஆப்ஸ் சந்தையும் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில் தேடப்படும் குற்றவாளிகளை கண்டறிவதற்கு கூட புதிய மொபைல் ஆப் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு அறிமுகமான ஐபோன் X மொபைல் போனில் வழக்கமாக ஃபிங்கர்பிரின்ட் பதிவு மூலமாக மொபைலை அன்லாக் செய்ய முடியும். ஆனால் ஐபோன் எக்ஸ் (iPHONE X) அப்படி அல்ல. பிங்கர்பிரின்ட்க்கு பதிலாக பேஸ் ஐடி பதிவு செய்யும் வகையில் இதன் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது நம் முகம்தான் மொபைலின் பாஸ்வேர்டு ஆகும்.

ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனர்கள்  விரல் ரேகையை பாஸ்வேர்டாக பயன்படுத்தும். அதைப்போலவே மனிதர்களின் முகத்தை பாஸ்வேர்டாகப் பயன்படுத்துவதுதான் இந்த பேஸ் ஐடி. அதில் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் வேலை செய்கிறது. இங்கே கேமரா மற்றும் சென்சார் யூனிட்கள் இணைந்து இந்த வேலை செய்யும். இப்படி தொழில் நுட்பங்கள் வளர்ச்சியடைந்து வருகின்றன.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த (Haliscape business solution private limited) நிறுவனம் பேஸ் டேக்கர் (Face Tagr) என்னும் மொபைல் ஆப்பை அறிமுகம் படுத்தியுள்ளது. இந்த பேஸ் டேக்கர் ஆப் உதவியுடன் காணமால் போன குழந்தைகளை காவல் துறையினர் மீட்டு வருகின்றனர். எங்கே என்று கேட்கிறீர்களா? சென்னை காவல் துறையினர் இந்த பேஸ் டேக்கர  ஆப்ஸை பயன்படுத்தி வருகின்றனர்.


பேஸ் டேக்கர்

பேஸ் டேக்கர் ஆப் மூலம் தேடப்படும் குற்றவாளிகள், குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்களா என கண்டறியவும் தமிழக காவல் துறை புதிய மொபைல் ஆப்பை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.

நாம் நாட்டில் குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகாரித்து கொண்டிருக்கிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர காவல் துறையினர் முயற்சித்து வருகின்றனர். மேலும் தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவும், குற்றச் செயல்களை கட்டுப்படுத்தவும் காவல் துறையினர் பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் பேஸ் டிடெக்சன் என்ற மென்பொருளை பயன்படுத்தி அதிநவீன சிசிடிவி கேமிராக்களை நகரின் பல பகுதிகளில் பொருத்தி குற்றவாளிகளின் முகத்தை துல்லியமாக கண்டறியும் முறையை அறிமுகம் செய்தனர்.

இதையடுத்து தற்போது சந்தேகப்படும் நபர்கள் மீது பழைய குற்ற வழக்குகள் உள்ளனவா என்பதை கண்டறியவும் பேஸ் டேக்கர் (FACE TAGR) எனும் மொபைல் ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த ஆப் மூலம் சந்தேகத்திற்கு இடமான நபர்களை போட்டோ எடுத்து அனுப்பினால் அவர் குற்றவாளியா இல்லையா என்ற தகவல் தெரியவரும். இதற்காக பழைய குற்றவாளிகளின் புகைப்படங்கள் மற்றும் அவர்களின் விபரங்கள் ஏற்கனவே ஒரு சர்வரில் பதிவேற்றம் செய்து வைக்கப்பட்டிருக்கும்.

சோதனையில் ஈடுபடும் போலீசார் மொபைலில் இந்த ஆப் மூலம் சதேகிக்கப்படும் நபரை புகைப்படம் எடுத்து ஸ்கேனுக்கு உட்படுத்துவார்கள். இப்பொழுது மொபலில் சந்தெகத்துக்கு உரியவரின் புகைப்படம் தயாராக இருக்கும். அதனை சர்வரில் உள்ள பழைய குற்றவாளிகளின் படங்களோடு  ஆப்ஸ் மூலம் ஒப்பிடலாம். அவர் ஏற்கனவே குற்ற வழக்குகளில் சிக்கி உள்ளாரா அல்லது இல்லையா என்ற விவரம் ஒரு சில நிமிடங்களில் மொபைலுக்கு கிடைக்கும். வழக்கு குறித்த விவரங்கள் காண்பிக்கப்படும். இந்த ஆப்பில் 12,000 குற்றவாளிகளின் புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன என சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் கூறியுள்ளார்.

வாகன சோதனை, பிற விசாரணைகளின் போது பிடிபடுவர்கள் பழைய குற்றவாளிகளா இல்லையா என்பதை கண்டுபிடிக்க இந்த ஆப் உதவுகிறது.

இந்த பேஸ் டேக்கர் ஆப் சர்வரில் தற்போது கடந்த 4 ஆண்டுகளில் நடைபெற்ற குற்ற வழக்குகள் தொடர்பான 52,000 குற்றவாளிகளின் தகவல்களை புகைப்படத்துடன் சேகரித்து வைத்துள்ளனர்.

இந்த ஆப்பை மொபைலில் பதிவிறக்கம் செய்வதற்கு 10 எம்.பி மட்டும் இடம் மட்டும் எடுத்துக் கொள்கிறது.

இந்த மொபைல் ஆப்பில் 16 வகையான குற்றங்கள் வகை பிரிக்கப்பட்டு அந்தந்த குற்றங்களைச் செய்த குற்றவாளிகளின் புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.

இந்த ஆப் குறித்து சென்னையில் போலீசார் தற்பொழுது சோதனை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது சோதனை முயற்சியாக தி.நகர் பகுதியில் உள்ள 500 போலீசாருக்கு இந்த ஆப் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 8 பேர் இந்த ஆப் மூலமாக போலீசாரிடம் சிக்கி உள்ளனர்.


சென்னையில் தீபாவளி, பொங்கல் பண்டிகையின் போது தி.நகர், வேளச்சேரி, வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம் போன்ற கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும். ஒரேநாளில் பல லட்சம் மக்கள் திநகரில் குவிந்திருப்பார்கள். அப்போது குற்றவாளிகள் கூட்டத்தில் மக்களோடு மக்களாக கலந்து பிக்பாக்கெட், செயின் பறிக்கும் செயல்களில் ஈடுபட அதிக வாய்ப்புகள் அதிகம். அந்த கூட்டநெரிசலை பயன்படுத்தி திருட்டு, வழிப்பறி, கொள்ளையில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க இந்த ஆப் ஆனது மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இந்த ஆப் குறித்து இதுவரை 500 போலீசாருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இதனை மாநிலம் முழுவதும் செயல்படுத்த போலீசார் திட்டமிட்டு வருகின்றனர்.  இந்நிலையில் இந்த ஆப்பை பயன்படுத்தவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் சோதனை செய்ய போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பேஸ் டேக்கர் ஆப் உதவியுடன் காணமால் போன நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை போலீசார் மீட்டுள்ளனர்.
இதை போல் லண்டன் அரசு ஷாப்பிங் மால், சூப்பர் மார்கெட் போன்ற சிறு சிறு கடைகளில் சிசிடிவி கேமராவில் பேஸ் வாட்ச் மூலம் முக அடையாளங்களை (face recognition) பதிவு செய்து காவல் துறையின் வைத்துள்ள தரவு தளத்தில் குற்றவாளிகளின் புகைப்படத்தை ஒப்பிடும்.

அப்படி ஒப்பிடும் போது குற்றவாளி கடையில் இருந்தால் கடை உரிமையாளர்களுக்கும் மற்றும் காவல் துறையினருக்கும் எச்சரிக்கை செய்யும். இதற்காக குற்றவாளிகளின் புகைப்படங்கள் மற்றும் அவரின் விபரங்கள் ஏற்கனவே ஒரு சர்வரில் பதிவேற்றம் செய்து வைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற ஆப்ஸ் மற்றும் சாப்ட்வேர்களை பயன்படுத்தி நாம் நாட்டில் குற்ற சம்பவங்களை தடுக்க காவல் துறையினர்  பல முயற்சிகளை  எடுத்து வருகின்றனர்.


கட்டுரையாளர்: முத்துலட்சுமி

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation