வங்கிக் கடன் நிலுவைக்காக மேலும் 24 பெரிய கம்பெனிகள்மீது கம்பெனி சட்ட டிரிப்யுனல் நடவடிக்கை

பதிவு செய்த நாள் : 14 டிசம்பர் 2017 01:00

மும்பை:

28 பெரிய கம்பெனிகள் வங்கிக் கடன் பாக்கிக்காக தீவிர நடவடிக்கை எடுத்து பண வசூல் செய்ய வேண்டும். அதற்கு டிசம்பர் 13ந் தேதி வரை அவகாசம் தருவதாக கடன் வழங்கிய வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அவகாசம் தந்திருந்தது. அந்த அவகாசம் இன்றுடன் முடிவதால் அந்த 28 பெரிய கம்பெனிகளில் 24 கம்பெனிகளை கடன் திவால் நடவடிக்கைக்காக பரிந்துரைக்கலாம். தேசிய கம்பெனி சட்ட டிரிப்யுனல் கடன் திவால் நடவடிக்கைக்காக டிசம்பர் 31ம் தேதிக்குள் பரிந்துரைக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

இந்திய வங்கிகளுக்கு கழுத்து கத்தியாக தொங்கிக் கொண்டுள்ள 4 லட்சம் கோடி ரூபாயில் இந்த 28 கம்பெனிகள் மட்டுமே 40 சதவீதக கடனுக்கு பொறுப்பாக உள்ளன. என்பது குறிப்பிடத் தகுந்தது.
கடன் திவால் நடவடிக்கையிலிருந்து விலக்கு பெறும் கம்பெனிகள்:
1. அன்ராக் அலுமினியம், 2. ஜெயாஸ்வால் நெக்கோ இண்டஸ்ட்ரிஸ், 3. சோமா இண்டஸ்ட்ரிஸ், 4. ஜெய் பிரகாஷ் அசோஷியேட்டஸ்.

அன்ராக் அலுமினியம் ஒற்றைத் தவணையில் கடனை செலுத்த முன்வந்துள்ளது.

சோமா இண்டஸ்ட்ரிஸ் கடன் பிரச்சினைக்கு தீர்வு காண திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது. அத்திட்டம் ஏற்கப்படலாம்.

ஜெயபிரகாஷ் அசோஷியேட்ஸ் நிறுவனம் கடன் தொகைக்கு மாற்று தவணைத் திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பித்துள்ளது.

மற்ற நிறுவனங்களைப் பொருத்தமட்டில் 10 முதல் 15 நாள்கள் அவகாசம் உள்ளது. இந்த 28 நிறுவனங்களுக்கும் இன்னும் கொஞ்சம் அவகாசம் தரலாம் என வங்கிகள் கூறியுள்ளன.

ரிசர்வ் வங்கி ஏற்கும் நிலையில் இல்லை. அதனால் அவற்றின்மீது கடன் திவால் நடவடிக்கைகளை தேசிய கம்பெனிச் சட்ட டிரிப்யூனல் தொடங்க வாய்ப்பு உள்ளது.