ஓட்டு இயந்திரத்தில் பா.ஜ.முறைகேடா.. இல்லை என்கிறார் முலாயம் தம்பி

பதிவு செய்த நாள் : 08 டிசம்பர் 2017 10:43


லக்னோ:

உள்ளாட்சிதேர்தலில் ஓட்டுஇயந்திரங்களில் பா.ஜ.முறைகேடுகள் செய்ததாக கூறுவது தவறு.அப்படி நடந்திருந்தால் நான் எம்.எல்.ஏ.ஆகி இருக்க முடியுமா... என்று முலாயம்சிங் யாதவ் தம்பி சிவபால் யாதவ் கேள்வி எழுப்பி உள்ளார்.

உ.பி. யில்நடந்த   மாநகராட்சி தேர்தல்களில்  ஓட்டு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. இதில் பா.ஜ. 14 மேயர்பதவிகளை கைப்பற்றியது. ஆனால் நகராட்சி மற்றும் நகர பஞ்சாயத்து தேர்தல்களில் ஓட்டுச்சீட்டு முறையில் வாக்குப்பதிவு நடந்தது. ஆனால் இந்த தேர்தல்களில் பா.ஜ.வைவிட எதிர்க்கட்சிகளே அதிக இடங்கள் கைப்பற்றின.  குறிப்பாக சமாஜ்வாடி அதிக இடங்களை கைப்பற்றியது. எனவே ஓட்டு இயந்திரத்தில் பாஜ. தில்லுமுல்லு செய்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சா ட்டின.  சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ்யாதவும் இந்த குற்றச்சாட்டை கூறிஉள்ளார். ஆனால் அதற்கு மாறாக அதே சமாஜ்வாடி கட்சியின் எம்.எல்.ஏ.வும் முலாயம்சிங் யாதவின் தம்பியுமான சிவபால்யாதவ் கருத்துகூறிஉள்ளார். ஓட்டு இயந்திரங்களில்தில்லுமுல்லுகள் எதுவும் நடக்கவில்லை. அது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. அப்படி செய்திருந்தால்நான் எம்.எல்.ஏ. ஆக ஜெயித்திருக்க முடியுமா... எனது ஆதரவாளர்கள் பலரும் உள்ளாட்சிகளில் வெற்றிபெற்றுள்ளனர். அவர்கள் எப்படி ஜெயித்தார்கள்.. எனவே ஆதாரம் இன்றி ஓட்டு இயந்திரங்களில்தில்லுமுல்லுகள்நடந்தாக குற்றம் சாட்டக்கூடாது என்றார். உள்ளாட்சி தேர்தலில் சமாஜ்வாடி தோல்விக்கு வேட்பாளர்கள் தேர்வே காரணம் என்று அகிலேஷ்மீது சிவபால் குற்றம் சாட்டினார்.

அவரது இந்த கருத்து புதிய திருப்பத்தை எற்படுத்தி உள்ளது. அகிலேஷ்யாதவ் பக்கமே முலாயம்சிங் யாதவ் சாய்ந்து விட்டதால் சமீபகாலமாக சமாஜ்வாடி கூட்டங்களில் சிவபால் புறக்கணித்து வருவது குறிப்பிடத்தக்கது.