மோடி மீதான விமர்சனத்திற்கு மணிசங்கர் அய்யர் காங். கட்சியிலிருந்து சஸ்பென்ட்

பதிவு செய்த நாள் : 08 டிசம்பர் 2017 09:38


புது­டில்லி:

பிர­த­மர் மோடியை தரக்­கு­றை­வாக விமர்­சித்­த­தால் மணி­சங்­கர்­அய்­யர் மன்­னிப்பு கேட்­க­வேண்­டும் என்று காங். துணைத்­த­லை­வர் ராகுல் உத்­த­ர­விட்­டுள்­ளார். அதை­ஏற்று மணி­சங்­கர் அய்­யர் மன்­னிப்பு கேட்­டார். கட்சியிலிருந்து தற்காலிகமாக சஸ்பென்ட் செய்யப்பட்டார்.

காங். முன்­னாள் அமைச்­ச­ரான மணி­சங்­கர் அய்­யர் அடிக்­கடி சர்ச்­சை­க­ளில்­சிக்­கு­வது வழக்­கம். லோக்­சபா தேர்­த­லின் போது, 21ம் நுாற்­றாண்­டில் மோடி  ஒரு­போ­தும் பிர­த­மர் ஆக முடி­யாது.  அவர் டீ விற்க விரும்­பி­னால் சாய்­வா­லா­வுக்கு டீக்­கடை ரெடி செய்து தரு­கி­றோம் என்று கூறி­யது  சர்ச்­சையை உரு­வாக்­கி­யது. இரு தினங்­க­ளுக்கு முன்பு, ராகுல் போட்­டி­யின்றி தலை­வர் ஆவது பற்றி மணி­சங்­கர்­அய்­யர் கூறிய கருத்­தும்­சர்ச்­சையை கிளப்­பி­யது. இதை அவு­ரங்­க­சீப்­ராஜ்­யம் என்று மோடி கிண்­ட­ல­டித்­தார். ஷாஜ­கான் இடத்­துக்கு அவு­ரங்­க­சீப் வந்­தார். அந்த  காலத்­தில் ஜன­நா­யக முறைப்­படி தேர்­தலே கிடை­யாது. என்று மணி­சங்­கர் அய்­யர்  பதில் அளித்­தார். இந்த சர்ச்சை முடிந்த நிலை­யில் அடுத்த சர்ச்­சையை கிளப்பி விட்­டார் மணி­சங்­கர் அய்­யர்.

டில்­லி­யில்  நேற்று  பிர­த­மர்­மோடி, அம்­பேத்­கர் விழா­வில் பேசி­ய­போது காங்­கி­ர­சை­யும் ராகு­லை­யும்  வழக்­கம்­போல விமர்­சித்­தார். அரசு விழா­வில்  மோடி இப்­படி பேசி­ய­தால், அவரை மணி­சங்­கர் அய்­ய­ரும் விமர்­ச­னம் செய்­தார். பிர­த­மர் மோடி மரி­யாதை தெரி­யா­த­வர். அவர் ஒரு தீய மனி­தர் என்று குறிப்­பிட்­டார்.மேலும் அரசு விழா­வில்  இப்­படி அருவ­ருப்­பான அர­சி­ய­லுக்கு என்ன அவ­சி­யம் வந்­தது  என்று கேள்வி விடுத்­தார்.

இதற்கு  குஜ­ராத் பிர­சா­ரத்­தில் இருந்த  பிர­த­மர் மோடி உட­ன­டி­யாக  பதி­லடி கொடுத்­தார். மணி­சங்­கர் அய்­யர் இன்று என்னை தரம்­தாழ்ந்த  சாதி­யைச் சேர்ந்­த­வர், கழு­தை­கள் என்­றெல்­லாம்  கூறி­யி­ருக்­கி­றார். அப்­படி என்னை அப்­படி சொல்­வது குஜ­ராத்­தி­யர்­களை அவ­மா­னப்­ப­டுத்­தி­யது ஆகும்.  இது முக­லா­யர் மன­நி­லையை காட்­டு­கி­றது. நல்ல உடை­கள் அணிந்­தி­ருந்­தால் கூட வெறுப்­பார்­கள். மணி­சங்­கர் அய்­ய­ரின் கருத்­துக்கு பா.ஜ.தொண்­டர்­க­ளும்... ஆத­ர­வா­ளர்­க­ளும் பதில் தர­வேண்­டாம். மக்­கள் தேர்­த­லில் தக்க பாடம் புகட்­டி­னால் போதும் என்­றார்.

குஜ­ராத் தேர்­த­லில் காங்­கி­ர­சுக்கு சாத­க­மான சூழல் இருப்­ப­தாக ராகுல் நம்­பிக்­கொண்­டி­ருக்­கும் வேளை­யில், மணி­சங்­கர் அய்­ய­ருக்கு பதில் அளித்த பிர­த­மர் மோடி, அதையே சாதி­யப் பிரச்னை ஆக்­கும் வகை­யில் பேசி,  இது ஒட்­டு­மொத்த குஜ­ராத்­தையே இழி­வு­ப­டுத்­து­வ­தா­கும் என்று திருப்பி விட்­டார். இத­னால் அதிர்ச்சி அடைந்த ராகுல், நிலை­மையை சமா­ளிக்­கும் வகை­யில் உட­ன­டி­யாக மணி­சங்­கர் அய்­யர் மன்­னிப்பு கேட்­க­வேண்­டும் என்று உத்­த­ர­விட்­டுள்­ளார். மணி­சங்­க­ரின் வார்த்­தை­கள் காங்­கி­ர­சுக்கு ஏற்­பு­டை­யது அல்ல. பிர­த­ம­ருக்­கும் பா.ஜ.தலை­வர் களுக்­கும் காங்­கி­ரசை அறு­வ­றுப்­பான மொழில் தாக்­கிப் பேசு­வதே வழக்­க­மாகி விட்­டது.  ஆனால் காங்.கலாச்­சா­ரம் வித்­தி­யா­ச­மா­னது. பாரம்­ப­ரி­யம் மிக்­கது. பிர­த­மர் பற்றி மணி­சங்­கர் கூறிய வார்த்­தை­களை நான் ஆத­ரிக்­க­வில்லை. இதற்­காக மணி­சங்­கர் அய்­யர் மன்­னிப்­பு­கேட்­பார் என்று நானும் காங்­கி­ர­சும் எதிர்­பார்க்­கி­றோம் என்று டுவிட்­ட­ரில் கூறி உள்­ளார்.

இது பற்றி மணி­சங்­கர் கூறு­கை­யில், எங்­கள் தலை­வர்­களை தின­மும் மோச­மாக விமர்­சிப்­பதே பிர­த­ம­ரின் வழக்­க­மாகி விட்­டது.  காங்­கி­ர­சில் நான் எந்­தப் பத­வி­யும் வகிக்­க­வில்லை. பகுதி நேர காங்­கி­ரஸ்­கா­ரன் தான். எனவே பிர­த­ம­ருக்கு அவ­ரது மொழி­யி­லேயே என்­னால்  பதில் அளிக்க முடி­யும். தரம் தாழ்ந்த மன­நிலை என்ற அர்த்­தத்­தில் தான் நீச் என்ற இந்தி வார்த்­தையை பயன்­ப­டுத்­தி­னேன்.

நான் பயன்­ப­டுத்­திய 'நீச்' என்ற இந்தி வார்த்­தைக்கு வெவ்­வேறு அர்த்­தங்­கள் உள்­ளன என்று எனக்கு தெரி­யாது. இந்தி எனது தாய் மொழி­யும் அல்ல.  தரம் தாழ்ந்த சாதி­யில் பிறந்­த­வர் என்ற அர்த்­தத்­தில் நான் சொல்­லவே இல்லை. தரம் தாழ்ந்த ' என்­ப­தற்­கும் 'தரம் தாழ்ந்த (சாதி­யில்) பிறந்­த­வர்' என்­ப­தற்­கும் வித்­தி­யா­சம் உண்டு. தரம் தாழ்ந்த  சாதி­யில் பிறந்­த­வர் என்று அதற்கு பொருள் இருந்­தால் அதற்­காக நான் மன்­னிப்பு கேட்­டுக்­கொள்­கி­றேன். தரம் தாழ்ந்த சாதி­யில் பிறந்­த­வர் என்று மோடியை ஒரு­போ­தும் நான் சொல்­ல­வில்லை என்று விளக்­கம் அளித்­தார்.

இதனிடையே கட்சியிலிருந்து மணிசங்கர் அய்யர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.பிர­த­மர் பத­வி­யின் மரி­யா­தையை குறைக்­கும் வகை­யில் யாரும்­பே­சக்­கூ­டாது என்று ஏற்­க­னவே ராகுல் எச்­ச­ரித்­துள்­ளார். மணி­சங்­க­ரின் வார்த்தை துர­திர்ஷ்­ட­வ­ச­மா­னது.  கண்­டிக்­கத் தக்­கது என்று குஜ­ராத் காங். பொறுப்­பா­ளர் அசோக்­கெ­லாட் கூறி உள்­ளார்.