ரூபாய் தடை மகாதவறை ஒருபோதும் காங். செய்யாது: மன்மோகன்சிங் உறுதி

பதிவு செய்த நாள் : 08 டிசம்பர் 2017 09:04


ராஜ்கோட்,:

பணமதிப்பு நீக்கம்போல மகாதவறுகளை காங். ஒருபோதும் செய்யாது என்று முன்னாள் பிரதமர்மன்மோகன்சிங் கூறினார்.

குஜராத்தில்காங். வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள்பிரதமர் மன்மோகன்சிங் பிரசாரம் செய்துவருகிறார். ராஜ்கோட்டில் நடந்த பிரசார கூட்டத்தில் மன்மோகன் பேசியதாவது:

 காங்கிரசின் 10 ஆண்டு கால ஆட்சியில் 5வது ஆண்டிலேயே நாட்டின் பொருளாதாரம் 10.6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இது போல் மீண்டும் நடந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் அப்படி நடக்க முடியாது  என நான் நினைக்கிறேன். காங்., ஆட்சியின் போது ஊழல் விவகாரங்கள் கடுமையாக கையாளப்பட்டது. ஆனால் பா.ஜ.,வால் அப்படி நடக்க முடியாது.

பா.ஜ., ஆட்சியில் ஊழலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 நர்மதா விவகாரம் குறித்து என்னிடம் பேசிய மோடி கூறுகிறார். ஆனால் அப்படி எதையும் அவர் பேசியதாக எனக்கு நினைவில்லை. அவர் என்னை சந்திக்க வந்திருந்தால் நான் மறுத்திருக்க மாட்டேன். பிரதமராக இருந்த போது அனைத்து முதல்வர்களையும் சந்திக்க வேண்டியது எனது பொறுப்பு. அதனால் நான் அனைத்து மாநில முதல்வர்களையும் சந்திக்க எப்போதும் தயாராக இருந்துள்ளேன். நமது அரசின் சீரற்ற வெளிநாட்டு கொள்கைகளால் நாட்டின் பாதுகாப்பு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மோடி அரசு எடுத்த சில நடவடிக்கைகளும் சிறப்பானதாக இல்லை. பண மதிப்பிழப்பின் போது ஏராளமான கறுப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டு விட்டது. லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். புதிய வேலை வாய்ப்புக்களும் உருவாக்கப்படவில்லை. எங்களின் எந்த நடவடிக்கையும் ஏழைகளை பாதிக்கவில்லை.

பணமதிப்பிழப்பு என்பது திட்டமிட்ட கொள்ளை. நாட்டுக்கே பேரழிவு.   பணத்தை மாற்றுவதற்காக கியூவில்நின்ற 100க்கும்மேற்பட்டவர்கள் பலியானார்கள்.  அதனால்தான் நவம்பர் 8ம் தேதியை கறுப்பு